இணையம் | சற்றுமுன்...




வெடிகுண்டு மிரட்டல்: இ - மெயில் அனுப்பிய கணக்காளர் கைது

August 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், இணையம், கணினி, குற்றம், சட்டம் - நீதி, தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வெடிகுண்டு மிரட்டல்: இ - மெயில் அனுப்பிய கணக்காளர் கைது

மும்பை, ஆக. 1: வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ - மெயில் அனுப்பிய பஞ்சாப் கணக்காளர் ஒருவரை மும்பை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கணக்காளர் தீபக் பாண்டே பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர்.

ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பை அடுத்து தொடர்ந்து பல இடங்களில் குண்டு வெடிக்கும் என்று தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு இ - மெயில் மிரட்டல் வந்தது. இது குறித்து மும்பை போலீஸôர் விசாரித்தனர். இ - மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று போலீஸôர் கண்டுபிடித்தபோது லூதியானாவைச் சேர்ந்த தீபக் என்பவர் அனுப்பியது தெரியவந்தது. வதந்தியைப் பரப்புவதற்காக இவர் இ - மெயில் மிரட்டல் விடுத்தாரா அல்லது உண்மையிலேயே இவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும் என்று மும்பை குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் தேபன் பார்த்தி கூறினார்.
 
 


மே-11 ஞாயிறன்று விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு

May 10th, 2008 பகுப்புகள்: இணையம், கணினி, தமிழ், பதிவுலகம், மொழி | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு நடத்துவது என கடந்த ஞாயிறு அன்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவசரம் அவசரமாக நடத்திவிட வேண்டும் என்பது போல விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் கோரிக்கையின் பேரில் நாளை காலை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் நடக்க விருக்கிறது.

அரசுக் கல்லூரி விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மாதாக்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் சற்று தூரம் நடந்தால் அரசுக் கல்லூரி உள்ளது.

காலை 9.00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் காலை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி வருகை தர உள்ளார்.

சென்னை மற்றும் புதுச்சேரியிலிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இப்பயிற்சியில் சுமார் 100 கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு எழுதுகோல் குறிப்பேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

பல்வேறு தமிழ் மென்பொருட்கள் குறுந்தகடு விலை ரூ15/- என வசூலிக்க இருப்பதாக விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் தமது வலைப்பூவில் தெரிவித்துள்ளனர், அதனால் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தம் பொறுப்பில் குறுந்தகடு இலவசமாக வழங்குவது என முடிவு செய்துள்ளது.

நிகழ்ச்சி நிரல் கீழே உள்ளவாறு நடக்க உள்ளது.

வருகை தர உள்ள அனைவர்க்கும் இந்த நிகழ்ச்சிநிரல் பயிற்சி அரங்கத்தில்அளிக்கப்படும்.

தமிழ் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு-2008. விழுப்புரம்

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி – விழுப்புரம்
நாள் 11 மே 2008

நிகழ்ச்சி நிரல்

காலை 08.50 - 9.00 பங்கேற்பாளர்கள் பதிவு செய்தல் (15 நிமிடம்)

காலை 09.00 - 9.30 நிகழ்ச்சிகள் தொடங்கி வைத்தல் (30 நிமிடம்) (

காலை 09.30-10.00 : தமிழ் எழுத்துறுக்கள் செயலி நிறுவுவது - க.அருணபாரதி

ஏகலப்பை (15 நிமிடம்)
குறள் (5 நிமிடம்)
இளங்கோ (5 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 10.01-10.30 : தமிழில் தட்டச்சு செய்வது பேராசிரியர் மு.இளங்கோவன்
தமிழ் 99 (15 நிமிடம்)
ஒலியியலில் உள்ள குறைகள் (5நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 10.30-11.30 வலைப்பதிவு அறிமுகம் – திரு. பாலபாரதி & மா.சிவக்குமார்

மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம் (5 நிமிடம்)

வலைப்பதிவு தொடக்கம் (BLOGGER) (20 நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (15 நிமிடம்)

வலைப்பதிவில்பின்னூட்டமிடுவது (10 நிமிடம்)

மறுமொழி மட்டுறுத்தல் (5 நிமிடம்)

கேள்வி பதில் (5 நிமிடம்)

காலை 11.30- 11.45 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

பகல் 11.46- 12.15 வலைப்பதிவு தொடக்கம் - விக்கி

(WORD PRESS) (10 நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 12.16-12.30 படங்கள் இணைப்பது (10 நிமிடம்) – கோ.சுகுமாரன்

காட்சிப்படம் இணைப்பது (10 நிமிடம்)

ஒலிகளை இணைப்பது (5 நிமிடம்) - வினையூக்கி

கேள்வி பதில் (5 நிமிடம்)

பகல் 12.31- 01-00 திரட்டிகளில் இணைப்பது (20 நிமிடம்) – விக்கி & வெங்கடேஷ்

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 01.00-02.00 உணவு இடைவேளை (60 நிமிடம்)

பகல் 02.01- 2.30 குறுந்தகடில் உள்ள மென்பொருட்கள் அதன் பயன்பாடுகள் –க.அருணபாரதிகேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 02.31- 3.00 தமிழில் இயங்குதளங்கள் - மா. சிவக்குமார்

விண்டோஸ் (10 நிமிடம்)

லினக்ஸ் (10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 3.01-3.30 : கணினியில் தமிழ்ப் பயன்பாடு - இரா.சுகுமாரன்

ஒப்பன் ஆபீஸ் தமிழ் (5 நிமிடம்)

எம்.எஸ் ஆபிஸ் தமிழ் (5 நிமிடம்)

தமிழில் மின்னஞ்சல் (5 நிமிடம்)

தமிழில் அரட்டை (5 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பிற்பகல் 3.31- 4.00 இணைய உலவிகள் பயர் பாக்ஸ் – வினையூக்கி

அதியன் இணைப்பு (10 நிமிடம்)

பத்மா இணைப்பு(10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பிற்பகல் 04.01-4.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

மாலை 4.16.- 4.30 தமிழில் இணையதளங்கள் - பேராசிரியர் மு.இளங்கோவன்

விக்கிப்பீடியா (10 நிமிடம்)

மதுரைத்திட்டம் (5 நிமிடம்)

யாழ் நூலகம் (5 நிமிடம்)

பிற தளங்கள் (5 நிமிடம்)

கேள்வி பதில் (5 நிமிடம்)

மாலை 04.31- 4.45 RSS FEED கூகுல் திரட்டியில் இணைப்பது (8 நிமிடம்) சீனுவாசன் கடலூர்

மாலை 4.46-5.15 கூட்டு வலைப்பதிவுகள் அமைப்பது - தூரிகா வெங்கடேஷ்(10 நிமிடம்)

மாலை 5.15-5.45 சொந்தத் தளத்தில் வலைப்பதிவு

word press எப்படி நிறுவுவது (15 நிமிடம்) விக்கி

மாலை 6.00 நிறைவு விழா மற்றும் சான்றிதழ் அளிப்பு

*************************************************
வலைப்பதிவர்களுக்கான பயனுள்ள தளம்
தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கம் http://tamilblogging.blogspot.com/

வலைப்பதிவு பயிற்சி :
தமிழ் வலைப்பதிவர்கள்: http://www.tamilbloggers.org/ (தமிழ்நாடு-புதுச்சேரி)

பயிற்சி ஒருங்கிணைப்பு
புதுச்சேரிவலைப்பதிவர் சிறகம் http://www.pudhuvaitamilbloggers.org/

நிகழ்ச்சி ஏற்பாடு:
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்

http://vizhuppuramvalaippathivar.blogspot.com/

********************************************
தமிழின் முழு தானியங்கி வலைத்திரட்டி + வலைவாசல் - தமிழ்.கணிமை.காம் - http://tamil.kanimai.com/

தமிழ்வலைப்பதிவர் கூட்டு முயற்சியில் ஒரு செய்தித்தளம் - சற்றுமுன் -

http://satrumun.com/

புதிய வலைப்பதிவு தொடங்குவதற்கு

தமிழ்ப் பதிவுகள் http://tamilblogs.com/new-index.php

வலைப்பதிவு திரட்டிகள்

தமிழ்மணம் http://www.tamilmanam.net/index.html
தேன்கூடு http://www.thenkoodu.com/
தமிழ்வெளி http://www.tamilveli.com/
திரட்டி http://www.thiratti.com/
மாற்று http://www.maatru.net/
கில்லி http://gilli.in/


தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இணையதளத்தில் ஒளிபரப்பு

March 24th, 2008 பகுப்புகள்: இணையம், கணினி, தொலைக்காட்சி, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும் செய்திகள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் இணைய தளத்தில் இலவசமாக ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சென்னையை சேர்ந்த ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திவரும் www.bigflicks.com என்ற இணைய தளத்தின் வழியாக உலகம் முழுவதுமுள்ள தமிழ் நேயர் கள் ராஜ் தொலைக்காட்சி, டிஜிட்டல் பிளஸ், ராஜ் மியூசிக்ஸ் ஆகிய மூன்று அலை வரிசைகளையும் இனி பார்க்கலாம்.

இது குறித்து பிக்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் முதன்மை அதிகாரி கமல்கியான் சந்தானி கூறுகையில், இனி உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் இலவசமாக செய்திகள், உலக நடப்புகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் இணைய தளத்தில் பார்த்து மகிழலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மட்டு மல் லாது, வெளிநாடுகளிலும் இனி ராஜ் குழும அலைவரிசைகளை இலவசமாக இணையதளத்தில் பார்க்கலாம் என ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி: விடுதலை


நன்கொடை வாங்கிக் கொண்டு விக்கிப்பீடியா கட்டுரை திருத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு

March 12th, 2008 பகுப்புகள்: ஆளுமை, இணையம், கணினி, தகவல் தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 3 மறுமொழிகள் » |

விக்கிப்பிடியாவை உருவாக்கிய ஜிம்மி வேல்ஸ் (Jimmy Wales) நன்கொடைக்கு பதிலாக, விக்கி பக்கத்தை திருத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

நாவெல் (Novell) நிறுவனத்தின் ஜெஃப்ரி மெர்கி (Jeffrey Merkey)யின் ஐயாயிரம் டாலரை விக்கிமீடியாவிற்கு உதவித்தொகையாக தந்துள்ளார். இந்தப் பணத்திற்காக, அவருடைய விக்கிப்பீடியா பக்கங்களில் இருந்த அவதூறுகள் திருத்தப்பட்டுள்ளதாக ஜெஃப்ரி தெரிவித்திருக்கிறார்.

இதை ஜிம்மி வேல்ஸ் மறுத்திருக்கிறார். ஜெப்ரியின் விக்கி பக்கங்களை மாற்றியதில் அவரது கையொப்பம் இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டில் உண்மை எதுவுமில்லை என்றார்.

குறிப்பிடப்பட்ட ஜெஃப்ரியின் விக்கி பக்கம் ‘பூட்டப்பட்ட’ (”protected”) நிலையிலும் வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Technology | Wiki boss ‘edited for donation’: “Wikipedia creator Jimmy Wales has been accused of agreeing to edit a page on the online encyclopaedia in exchange for a donation.”

2. Wikimedia executive comes to Wales defense | Tech news blog - CNET News.com

3. More woes for Wikipedia’s Jimmy Wales - web - Technology - smh.com.au


மாணவரை ஒருங்கிணைக்க வெப்சைட் டைரக்டர் சேரன் பேச்சு

February 26th, 2008 பகுப்புகள்: *பொது, இணையம், ஊடகம், திரையுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மாணவரை ஒருங்கிணைக்க “வெப்சைட்’ டைரக்டர் சேரன் பேச்சு

 ”"மாணவர்களை ஒருங்கிணைக்க புதிய “வெப்சைட்’ ஒன்று விரைவில் துவங்க உள்ளேன்,” என்று சினிமா டைரக்டர் சேரன் பேசினார். கரூர் அடுத்துள்ள காருடையாம்பாளையம் வி.எஸ்.பி., பொறியியல் கல்லுõரியில் ஆறாவது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் கல்லுõரி தினவிழா நடந்தது. சினிமா டைரக்டர் சேரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அண்ணா பல்கலை தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது: நான் பிளஸ் 2 வரை மட்டுமே படித்தேன். ஆனால், என் பெற்றோர் நான் பெரிய அளவில் முன்னேறி வருவேன் என்று எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்பின் படி வாய்ப்பும் கிடைத்தது. சினிமா வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. முதன்முறையாக தேசிய விருது பெற்றபோது அம்மா, அப்பாவுடன் சென்றேன். இரண்டாவது முறை ஆசிரியர்களுடனும், மூன்றாம் முறை குடும்பத்தினருடன் சென்றேன். இங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திறமை, ஆர்வம் ஆகியவை இருந்தால் அவர்களாலும் முன்னேற முடியும். திட்டமிட்ட செயலை அடையும் வரை மற்றவற்றை துõக்கி எறியுங்கள். தியாக உணர்வு இருந்தால் மட்டுமே வெற்றியடைய முடியும். வீரம், திறமை, ஒத்துழைப்பு இன்று இல்லை. இதே நிலை நீடித்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. மாணவர்களை ஒருங்கிணைக்க புதிய “வெப்சைட்’ ஒன்று விரைவில் துவங்க உள்ளேன்.இவ்வாறு சேரன் பேசினார். விழாவில், தாளாளர் பால்சாமி, நிர்வாக அலுவலர் ரவிக்குமார், கண்காணிப்பாளர் தனசேகர், மேலாளர் கண்ணன், பேராசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

http://www.dinamalar.com/2008FEB26/district/dindigul.asp


இறைதூதர் புகழுக்கு மாசு கற்பிக்க முயலும் விக்கிபீடியா.

February 12th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, ஆன்மீகம், இணையம், உலகம், ஊடகம், கணினி, குற்றம், சட்டம் - நீதி, சர்ச்சை, பதிவுலகம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | ஒரு மறுமொழி » |

உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் தங்களின் உயிரைவிட மேலாகக் கருதும் நபிகள் பெருமானரைக் குறித்து சித்திரம் வெளியிட்ட பல மொழி இணையதளக் கலைக்
களஞ்சியமான விக்கி பீடியா கடும் கண்டனத்தை சந்தித்து வருகிறது.

நபி நாயகம்  புகழுக்கு மாசு கற்பிக்கும் விதமான எந்த செயலையும் முஸ்லிம்கள் அனுமதிப்பதிலை என்ற நிலையில் விக்கி பீடியா கலைக் களஞ்சிய
வலைதளம் நபிகள் நாயகம் குறித்து ஒரு கற்பனை சித்திரத்தை தனது வலைதளத்தில் இடம் பெறச் செய்திருக்கிறது.

விக்கி பீடியாவின் இந்த செயலைக் கண்டித்து பிரிட்டனைச் சேர்ந்த ஃப்பராஸ் அஹ்மத் பட்ங்  www.Petitionsite.com ன்ற பிரத்யேக வலைதளம்  ஒன்றை உருவாக்கி விக்கி பீடியாவின் செயலை கண்டித்து சர்ச்சைக்குரிய சித்திரத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து இதுவரை ஒரு லட்சம் பேர் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். சான்பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்டு
விளங்கும் விக்கி பீடியாவை தொடர்ந்து இமெயில்கள் மொய்த்த வண்ணம் உள்ளன.
சர்ச்சைக் குரிய சித்திரத்தை அகற்ற மாட்டோம் என விக்கி பீடியாவின் செய்தி தொடர்பாளர் வால்ஸ் தெரிவத்ததைத் தொடர்ந்து எதிர்ப்புகள் தொடர்கிறது.  மேலும் அறிய…

நன்றி: தமுமுக இணையம்.


ஆபாசபடமெடுத்த மருத்துவர் பிரகாசிற்கு ஆயுள் தண்டனை

February 7th, 2008 பகுப்புகள்: இணையம், குற்றம், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

சென்னை எலும்பியல் மருத்துவர் எல் பிரகாசிற்கு இணையத்தில் ஆபாசப்படம் வெளியிட்ட வழக்கில் ஆயுள் தண்டனையும் உடனிருந்து உதவிய மூவருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து சென்னை விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி ஆர் ராதா செவ்வாயன்று வழங்கிய இந்த தீர்ப்பில் பிரகாசிற்கு ரூ1.27 இலக்கம் அபராதமும் விதித்தார்.சரவணன், விஜயன், குணசிங் ஆகிய வர்களுக்கு தலா ரூ 2500/- அபராதம் விதித்தார்.

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பிரகாசு். எலும்பியல் மருத்துவரான இவர் அண்ணா நகரில் மருத்துவமனை நடத்தி வந்தார்.

தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்களை மயக்கி, அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அவற்றை இன்டர்நெட் மூலம் விற்பனை செய்ததாக சர்ச்சையில் சிக்கினார் பிரகாசு.

நான்கு பெரும் பெண்களுக்கு எதிராக மிகக் கொடூரமான குற்றத்தை இழைத்துள்ளனர். எனவே இவர்களை மன்னிக்க முடியாது என்று நீதிபதி ராதா தெரிவித்தார்.

டாக்டர் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை!!

Chennai doctor gets lifer in cyber-porn case


கூகிளுடன் யாகூ பேச்சுவார்த்தை

February 4th, 2008 பகுப்புகள்: இணையம், வணிகம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | ஒரு மறுமொழி » |

மைக்ரோசாஃப்ட்டின் யாகுவின் பங்கு ஒன்றிற்கு 31 அமெரிக்க வெள்ளிகள் என முடிவுசெய்து அறிவித்த ஒருங்கிணைப்பு திட்டம் யாஹூவின் (சந்தை) மதிப்பை குறைத்து மதிப்பிடுவதாய் யாஹூ தெரிவித்துள்ளது. இதனால் அதற்கு மாற்றாக கூகிளுடன் இணைந்து செயல்பட சாத்தியங்களை இரு நிறுவனங்களும் ஆராய்ந்து வருகின்றன.

ஆனால் ஏற்கனவே இணைய சேவை சந்தையில் முன்னணியில் கூகிள் இருப்பதால் போட்டியை இது குறைக்கும் எனும் கருத்தை முன்வைத்து இதற்கு அனுமதி வழங்கப்படாது என கணிக்கப்படுகிறது.

மைக்ரிசாஃப்ட்டின் திட்டத்தில் யாகுவின் மதிப்பை உயர்த்தச் செய்யவே இந்த முயற்சிகள் நடக்கின்றன என்றும், யாகுவை விற்க வேறு ஆர்வலர்களைத் தேடும் முயற்சி என்றும் பல கணிப்புக்கள் இருக்கின்றன.

 யாஹூவை $44.6 பில்லியனுக்கு வாங்க மைக்ரோசாஃப்ட் திட்டம்

Yahoo may consider Google alliance, source says - Reuters


புதுச்சேரி குறித்த புதிய இணையத்தளம்

January 29th, 2008 பகுப்புகள்: இணையம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

புதுச்சேரி குறித்த புதிய இணையத்தளம்

புதுச்சேரி குறித்த புதிய இணையத்தளம்

www.puduvaitamilsonline.com


ஆஸ்திரேலிய அரசு “Sorry”;லாஸ் வேகச் தீ; Reuters அசைபடங்கள்

January 26th, 2008 பகுப்புகள்: இணையம், உலகம், ஊடகம், சமூகம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

ஆஸ்திரேலிய பழங்குடியினரிடம் அரசு “Sorry” சொன்னது


லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதியில் தீ விபத்து

15 வயது பெண்ணுக்கு நுரையீரல் மாற்று சிகிச்சைக்குப் பின் இரத்தவகை மாறியது.

இத்தாலி பார்லிமெண்ட் - சில காட்சிகள்.


கேரளப் பெண்களுக்கென இணையத்தளம்

January 25th, 2008 பகுப்புகள்: இணையம், தொழில்நுட்பம், பெண்கள் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கேரளப் பெண்களுக்கென இணையத்தளம்

கேரளாவில் கல்வி மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்கள் குறித்த தகவல்களை வெளிக்கொணரும் விதமாக கேரளப் பெண்களுக்காக இணையத்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

www.keralawomen.org

http://www.hindu.com/2008/01/25/stories/2008012550800200.htm


‘தம்’ அடிப்பதை நிறுத்தினார் ஆமிர் கான்

January 22nd, 2008 பகுப்புகள்: ஆளுமை, இணையம், திரையுலகம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டதாக நடிகர், இயக்குநர் ஆமிர் கான் இரசிகர்களுக்கு தன் வலைப்பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். 2008ன் புது வருட சபதமாக இதைச் செய்யவிருப்பதாக முன்னமே அறிவித்திருந்த ஆமிர் இப்போதுதான் இயன்றது என்றிருக்கிறார்.

Aamir Khan finally quits smoking - Times of India