துபாய் | சற்றுமுன்...




துபாய் சாலை விபத்தில் இந்தியர் உள்ளிட்ட ஐந்து பேர் பலி

July 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், துபாய், விபத்து | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

 

துபாய் சாலை விபத்தில் இந்தியர் உள்ளிட்ட ஐந்து பேர் பலி

துபாயில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.gulfnews.com/nation/Traffic_and_Transport/10228477.html

 

 


வெளிநாட்டில் பொலிவிழந்து வரும் எல்ஐசி

July 7th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், உலகம், சவூதி, துபாய், பொருளாதாரம், வணிகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வெளிநாட்டில் பொலிவிழந்து வரும் எல்ஐசி

காப்பீட்டுத்துறையில் இந்தியாவில் முன்னணியில் விளங்கிவரும் அரசுத் துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சமீப ஆண்டுகளாக வெளிநாடுகளில் வர்த்தகத்தை இழந்து வருகிறது.

வெளிநாடுகளில் எல்ஐசி-யின் ஆண்டு வர்த்தகம் தொடர்ந்து குறைந்து வருவதிலிருந்தே இதை உணர முடியும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் எல்ஐசியின் வெளிநாட்டு வர்த்தகம் 12 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது.

2004-05ம் நிதி ஆண்டில் முதல் பிரீமியமாக வசூலான தொகை ரூ. 123.41 கோடி. இது அடுத்த ஆண்டு ரூ. 120.8 கோடியாகவும் கடந்த ஆண்டு 2007 மார்ச்சில் 108.67 கோடியாகவும் குறைந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவன போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் எல்ஐசி வருவாய் குறைந்து வருகிறது. மேலும் புதிய வாடிக்கையாளரை ஈர்ப்பதற்கு எல்ஐசி தவறிவிட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல தனிநபர் காப்பீட்டுத் திட்டங்களும் போதிய அளவுக்கு விற்பனையாகவில்லை. 2004-05-ம் ஆண்டில் பஹ்ரைனில் தனிநபர் பாலிசி விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும் பழைய பாலிசிகளை புதுப்பிப்பது உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. முதல் பிரீமியம் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எல்ஐசி. ஆசிய நாடுகளில் கிளைகளைத் தொடங்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் எல்ஐசி ஈடுபட்டுள்ளது.

இது தவிர, சவூதி அரேபியாவில் வர்த்தகத்தை மேம்படுத்த சவூதி இந்திய கூட்டுறவு நிறுவனத்துடன் கூட்டு வணிகம் செய்ய திட்டமிட்டு அதற்கான சான்றிதழையும் பெற்றுள்ளது எல்ஐசி. தற்போது எல்ஐசி நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஏமன், நேபாளம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் எல்ஐசி நிறுவனத்துக்கு 2007-08-ம் நிதி ஆண்டில் முதல் பிரீமியமாக வசூலான தொகை ரூ. 59,182 கோடி.
 
 


ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் நீதிபதி

March 28th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, துபாய், பெண்கள் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் நீதிபதி

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் நீதிபதியாக கோலோடு அகமது ஜ×வான் அல் டகேரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் அபுதாபி நீதிமன்றத்தின் அடிப்படை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரை ஜனாதிபதி ஷேக் கலீபா பின் சயேத் அல் நக்யான் நியமித்தார். அரபு நாடுகளில் முதன்முதலாக பெண்நீதிபதியை நியமித்த நாடு பகரைன் தான். இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு உள்ளது.

சவுதி அரேபியா போல இல்லாமல், இங்கு பெண்கள் தன்னந்தனியாக கார் ஓட்டி செல்லலாம். அவர்கள் மந்திரி பதவி உள்பட பல உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.
 

http://www.dailythanthi.com/article.asp?NewsID=402798&disdate=3/28/2008


டெல்லி-ஷார்ஜா: மார்ச் 31 முதல் ஏர்அரேபியா விமான சேவை

March 6th, 2008 பகுப்புகள்: துபாய், விமானம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

டெல்லி-ஷார்ஜா: மார்ச் 31 முதல் ஏர்அரேபியா விமான சேவை     

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதலாவது குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் அரேபியா, மார்ச் 31ம் தேதி முதல் டெல்லிக்கு தனது விமான சேவையை தொடங்குகிறது.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் ஏ.கே. நிஸார்  கூறுகையில், கடந்த மாதம் கோழிக்கோட்டுக்கு எங்களது விமான சேவை தொடங்கியது. அதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது டெல்லிக்கு எங்களது சேவையை விரிவுபடுத்தியுள்ளோம்.

தொடக்கத்தில் வாரம் நான்கு முறை டெல்லிக்கும், ஷார்ஜாவுக்கும் இடையே இந்த விமானம் இயக்கப்படும். மே மாதம் முதல் தினசரி சேவையாக இது மாற்றப்படும் என்றார் நிஸார்.

இந்தியாவில் ஏர் அரேபியாவின் 11வது விமான சேவை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அகமதாபாத், சென்னை, கோவை, பெங்களூர், ஜெய்ப்பூர், கொச்சி, கோழிக்கோடு, மும்பை, நாக்பூர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு ஏர் அரேபியா தனது விமான சேவையை நடத்தி வருகிறது.

www.thatstamil.com


மனித நேயமுடன் வாழ துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு விழாவில் கி. வீரமணி பேச்சு

March 3rd, 2008 பகுப்புகள்: அமீரகம், தமிழ், துபாய், மொழி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மனித நேயமுடன் வாழ துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு விழாவில் கி. வீரமணி பேச்சு
 
ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் எழாவது ஆண்டு துவக்க விழா, பவளவிழா கண்ட தமிழர் தலைவருக்கு பாராட்டு விழா மற்றும் அமீரகத்தில் சமூக சேவையில் விருதுபெற்றவர்களை கௌரவப்படுத்தும் விழா துபாய் இந்தியன் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ராஷித் உள்ளரங்கில் 28.02.2008 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
 
அமீரகத் தமிழர்கள் அமைப்பின் கௌரவத் தலைவர் அஜ்மான் மூர்த்தி தலைமை தாங்கினார். புரவலர் எல். கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
 
பவளவிழா கண்ட திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தனது விழாப்பேருரையில் மனிதநேயமுடன் உதவி செய்ய வேண்டுகோள் விடுத்தார். தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை எழுதிய கட்டுரையால் நெகிழ்ந்த பெரியார் அவர்கள் பாராட்டுவதற்காக தனது வயதினையும், உடல் முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது சென்றார். எனவே எவரையும் பாராட்ட வேண்டும் என எண்ணினால் உடன் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்களது சுயமரியாதைக் கொள்கையில் எள்முனையளவும் பிசகாது வெற்றி நடைபோடுவோம் என்றார்.
 
வளைகுடாவின் சிறந்த ஆசிய தொழிலதிபர் விருதுபெற்ற தமிழர் ETA அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநர் சையது எம். ஸலாஹுத்தீன் தனது வாழ்த்துரையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் எளிமையைக் கண்டு மிகவும் நெகிழ்வதாகக் குறிப்பிட்டார். பெரியார் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் வாழும் பெரியாராக சத்யராஜ் காட்சி தருவதாகக் குறிப்பிட்டார்.
 
திரைப்பட நடிகர் சத்யராஜ் தனது உரையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வோர் அங்கேயே தங்கி விடுகின்றனர். வளைகுடாவில் வாழ்ந்து வருவோரே தாயகத்திற்கு பல்வேறு பணிகளைச் செய்து வருவதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார். அமீரக தமிழ் தொழிலதிபர் சையது எம். ஸலாஹுத்தின் அவர்களை தமிழர் திலகம் என அழைப்பது பொருத்தமாகும் என்றார்.
 
அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாவது ஆண்டு துவக்க விழா மலரை கி. வீரமணி வெளியிட முதல் பிரதியை தொழிலதிபர் சையது எம். ஸலாஹுத்தீன் பெற்றுக்கொண்டார்.
 
விழாவில் அன்பு மருத்துவமனை குடந்தை அன்பழகன், அஜ்மான் மூர்த்தி, எல். கோவிந்தராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 
 


ஐந்து ஆண்டுகளில் தமிழகம் துபாயைப் போலாகும் : சத்யராஜ்

February 27th, 2008 பகுப்புகள்: தமிழ், திரையுலகம், துபாய், மொழி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

ஐந்து ஆண்டுகளில் தமிழகம் துபாயைப் போலாகும் : சத்யராஜ்

 தமிழகம் ஐந்து ஆண்டுகளில் துபாயைப் போலாகும் என நடிகர் சத்யராஜ் அமீரகத்தின் தமிழ் வானொலி சக்தி எஃப்.எம்.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மேற்கொண்டுவரும் நல்ல பல திட்டங்கள் தமிழகத்தை இந்தியாவில் முன்னணி மாநிலமாக்கும் எனக் குறிப்பிட்டார்.

 நடிகர் சத்யராஜ் அமீரக தமிழர் அமைப்பின் விழாவில் பங்கேற்க துபாய் வந்துள்ள போது இப்பேட்டியை வழங்கினார். ஸ்டார் நைட் என்பன போன்றல்லாது தமிழர்க்காக நடைபெறும் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்தார்.


துபாயில் கி. வீரமணி

February 26th, 2008 பகுப்புகள்: *பொது, அமீரகம், அரசியல், துபாய் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாயில் கி. வீரமணி
 
அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாவது ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்பதற்காக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி ஞாயிற்றுக்கிழமை மாலை துபாய் வருகை புரிந்தார். துபாய் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்வரவேற்பில் துபாய் அமீரக தமிழர்கள் அமைப்பின் கௌரவ தலைவர் அஜ்மான் மூர்த்தி, தலைவர் அமுதரசன், சைபுதீன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாம் ஆண்டு துவக்க விழா, அமீரகத்தில் சமூக சேவையில் விருது பெற்றவர்களை கௌரவப்படுத்தும் விழா 28.02.2008 வியாழன் மாலை துபாய் இந்தியன் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ராஷித் உள்ளரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
 
இவ்விழாவில் திரைப்பட நடிகர் சத்யராஜ், பின் பக்கீத் குழும நிறுவனங்களின் தலைவர் சுல்தான் அப்துல்லாஹ் பக்கீத் அல் மத்ரூஷி, குடந்தை அன்பு மருத்துவமனை நிறுவனர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
 
செல்வி தாருணி சீனிவாசனின் கலாச்சார நடனம், வாள்சண்டை, சிலம்பம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலதிக விபரங்களுக்கு அமுதரசன் 050 4547201 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.


துபாயில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்தியப் பள்ளி இயக்ககத்தின் ஆலோசனை

February 23rd, 2008 பகுப்புகள்: அமீரகம், கல்வி, துபாய், தேர்வு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாயில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்தியப் பள்ளி இயக்கத்தின் ஆலோசனை

 துபாயில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்தியப் பள்ளி இயக்ககம் தொலைபெசி வழியே ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

 பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் மார்ச் 1 முதல் துவங்க இருக்கிறது. அமீரகத்தில் 30 பள்ளிகள் சிபிஎஸ்இ இயக்ககத்துடன் இணைந்துள்ளன.

ஆலோசனை பெற உதவும் தொலைபேசி எண் : 04 3377475

http://www.gulfnews.com/nation/Education/10191950.html


அமீரகத்தில் இந்திய பணிப்பெண் சம்பளம் 1,100 திர்ஹம்

February 22nd, 2008 பகுப்புகள்: அமீரகம், துபாய் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அமீரகத்தில் இந்திய பணிப்பெண் சம்பளம் 1,100 திர்ஹம்

அமீரகத்தில் இந்திய பணிப்பெண்களுக்கான சம்பளம் 600 திர்ஹத்திலிருந்து 1,100 திர்ஹமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதுமட்டுமன்றி உணவு, தங்குமிடம் மற்றும் இருவழி விமானப் பயணச்சீட்டும் வழங்கப்பட வேண்டும்.

 மேலும் விரிவான செய்திக்கு

http://www.gulfnews.com/nation/Employment/10191819.html

www.indembassyuae.org/lw-maidempcont.phtml


துபாயில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி

January 28th, 2008 பகுப்புகள்: அமீரகம், அரசியல், துபாய், விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாயில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி
 
திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் ஒரே மேடையில் வீற்றிருப்பது தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரிதும் அபூர்வ நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் துபாயில் அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு வளைகுடா தமிழர் பேரவை 28.01.2008 திங்கட்கிழமை நடத்திய பாராட்டு விழாவில் திமுகவைச் சேர்ந்த கும்பகோணம் நகரசபைத் தலைவர் அன்பு மற்றும் அதிமுகவைச் சேர்ந்த திருவாரூர் மாவட்ட அதிமுக தொழிற்சங்க தலைவர் மலர்வேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
 
துவக்கமாக கபீர் வரவேற்றார். ஸ்கை எக்ஸ்பிரஸ் இயக்குநர் செய்யது அப்துல் காதர் ( சினா தானா ) தனது உரையில் சமூக நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து விவரித்தார். கல்வியின் அவசியம், புரிந்துணர்வு உள்ளிட்டவை குறித்து உரை நிகழ்த்தினார்.
 
மலர்வேந்தன தனது உரையில் அமீரக மன்னராட்சி மதிக்கத்தக்க வகையில் இருப்பது குறித்து பாராட்டு தெரிவித்தார். நமது நாட்டில் சமதர்மம், உரிமை கொடுத்திருப்பது பல்வேறு விபரீதமுடிவுகளைத் தந்து வருகிறது. இந்தியா குறிப்பாக தமிழகம் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. எதிர்காலத்தில் வெளிநாட்டினரே நமது நாட்டிற்கு வேலை தேடி வரும் சூழல் ஏற்படலாம்.
 
அன்பு தனது உரையில் தமிழகத்தில் இருதுருவங்களாக இருக்கும் மலர்வேந்தனும், தானும் இங்கு ஒரே மேடையில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். அமீரகத்தில் இருக்கும் இத்தகைய தமிழர் பண்பாடு தமிழகத்திலும் வர வேண்டும் என தான் விரும்புவதாக குறிப்பிட்டார். மனித உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்து மருத்துவசேவையை செய்து வருவதாகக் குறிப்பிட்டார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது வருமானத்தை முறையாக சேமித்து எதிர்காலத்திற்கு பயனளிக்கும் வண்ணம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
 
சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர். விழாவில் அஜ்மான் மூர்த்தி, சபீர் அஹ்மது, ஜெயந்தி சுரேஷ், குடந்தை இஸ்லாமுதீன், அண்ணாதுரை உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.
 
ஆல்பர்ட் நன்றி கூறினார். அன்வர் பாஷா தொகுத்து வழங்கினார்.விழாவில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 
 


துபாயில் நூல் வெளியீட்டு விழா

January 28th, 2008 பகுப்புகள்: அமீரகம், துபாய் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாயில் நூல் வெளியீட்டு விழா

துபாயில் சமூக சிந்தனையாளர் சினா தானா ( செய்யது அப்துல் காதர் ) அவர்கள் எழுதிய ‘மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 8 வெள்ளிக்கிழமை துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.

இந்நூல் சங்கமம் தொலைக்காட்சியில் சினா தானா அவர்கள் கடந்த ஒரு வருடம் வழங்கிய சொற்பொழிவின் தொகுப்பாகும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துபாய் சங்கமம் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு கலையன்பன் 050 6507604 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.


துபாயில் மரணமடைந்த தமிழக தொழிலாளி

January 28th, 2008 பகுப்புகள்: அமீரகம், துபாய், மரணம், விபத்து | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாயில் மரணமடைந்த தமிழக தொழிலாளி

துபாயில் பாஸ்கர் முத்து எனும் தமிழக தொழிலாளி கடந்த 28.11.2007 அன்று விபத்தில் மரணமடைந்து காவல்துறை சவக்கிடங்கில் இருப்பதாகவும், இதுவரை இவரது உடலை வாங்க எவரும் தொடர்பு கொள்ளவில்லை என வேலி ஆஃப் லவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவரது இந்திய முகவரி : பாஸ்கர் முத்து, எண் 4/145 ஜின்னாஹ் தெரு, பெருமாள் கோவில் வட்டம், தேரிழந்தூர், மயிலாடுதுறை வட்டம்,நாகப்பட்டினம் மாவட்டம்.

இவரது உறவினர்கள் 050 309 05 06 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.