ஐரோப்பா | சற்றுமுன்...




இத்தாலி தேர்தல்: பெர்லுஸ்கோனி கட்சி முன்னணி

April 14th, 2008 பகுப்புகள்: அரசியல், ஐரோப்பா, தேர்தல், தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இத்தாலிய பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்த ஆரம்பகட்ட தகவல்களின்படி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அவர்கள் தலைமையிலான வலதுசாரி மையவாத எதிர்கட்சிகள் முன்னணியில் இருக்கின்றன.

இவருடைய பிரதான எதிரியான வால்டர் வெல்ட் ரோனி தலைமையிலான இடதுசாரி மையவாத கூட்டணியை விட இவருக்கு சிறிய அளவிலான கூடுதல் ஆதரவு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கிடைக்கக்கூடும் என்று தேர்தலில் வாக்களித்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்திருந்தன.

செனட் எனப்படும் நாடாளுமன்றத்தின் மேலவை தொடர்பான ஆரம்பகட்ட முடிவுகளும் பெர்லுஸ்கோனிக்கு ஆதரவாகவே அமைந்திருந்தன.

அதேவேளை, இந்த தேர்தலில் இரு கூட்டணிகளுக்கும் இடை யிலான மிக நெருக்கமான போட்டியும், செனட் அவையில் இடங்களை ஒதுக்குவதில் கடைபிடிக்கப்படும் சிக்கல் நிறைந்த நடைமுறையும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெர்லுஸ்கோனி எதிர்பார்க்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்குமா என்பது குறித்து தெளிவாக கூறமுடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Italy votes under cloud of corruption, decay - The Boston Globe: Poor leadership thwarts change, promotes apathy

2. Berlusconi heads to 3rd stint as Italy's prime minister - International Herald Tribune

3. BBC NEWS | The Reporters | Mark Mardell: “Clown Prince of bloggers takes on Italian politics”


உடன்பிறந்தவர்களுடன் உறவு கொள்வது குற்றம் - செர்மனி சட்டம்

March 19th, 2008 பகுப்புகள்: உடல்நலம், உலகம், ஐரோப்பா, குற்றம், சட்டம் - நீதி, சமூகம், தீர்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!‘நெருங்கிய உறவினர்களுடன் பாலுறுவு கொள்வதற்கு எதிரான சட்டம் இருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது அல்ல’ என்று செருமனியின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இதனால், தன்னுடைய 23 வயது சகோதரியுடன் நான்கு குழந்தைகளைப் பெற்றிருக்கும் பாட்ரிக் என்பவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு வலுத்திருக்கிறது. ஏழு வருடங்களுக்கு முன்புதான் பேட்ரிக், தனது தங்கையை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு விவரங்களுக்கு: Incest Ruling: Sibling Sex Remains Prosecutable in Germany - International - SPIEGEL ONLINE - News: “Germany’s high court ruled on Thursday that laws against incest do not violate the constitution. The ruling means that a man in a high-profile national incest case will soon be sent to prison for siring four children with his sister.”


அரசாங்கத்தைக் கலைத்துள்ளார் செர்பியப் பிரதமர்

March 9th, 2008 பகுப்புகள்: அரசியல், உலகம், ஐரோப்பா | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

செர்பியப் பிரதமர் வொயிஸ்லாவ் கொஸ்துனிச்சா அவர்கள், தனது அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு, புதிய தேர்தல்களை நடத்துவதாக அறிவித்திருக்கிறார்.

கொசோவோ தனி நாடாக சுதந்திரப் பிரகடனம் செய்துகொண்ட பிறகு, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன் உறவு வைத்துக் கொள்வதில் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக அவரது அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Europe | Profile: Vojislav Kostunica

2. FACTBOX-Scenarios for Serbia after PM dissolves government | Reuters


ஸ்பெயினில் தேர்தலுக்கு முன்பாக அரசியல்வாதி கொலை

March 7th, 2008 பகுப்புகள்: அரசியல், உலகம், ஐரோப்பா, கொலை, தீவிரவாதம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ஸ்பெயினின் பாஸ்க் வட்டாரத்தில் முன்னாள் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இப்போதே நிறுத்தப்பட்டுள்ளன.

இச்செயலுக்கு எவரும் உரிமை கோரவில்லை, ஆனால் பாஸ்க் பிரிவினைவாத இயக்கமான எட்டா குழுவினரே இதனைச் செய்திருக்கலாம் என ஸ்பெயினின் உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். எட்டா இயக்கம் கடந்த நாற்பது ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கொலைகளைச் செய்திருக்கிறது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Europe | Spain attack halts poll campaign

2. Eta blamed for murder of Socialist Party councillor Isaías Carrasco - Times Online

3. Timeline: Basque separatist group ETA | International | Reuters


கொசோவோ சுதந்திர பிரகடனத்தை எதிர்த்து செர்பியர்கள் ஆர்ப்பாட்டம்

February 19th, 2008 பகுப்புகள்: அரசியல், உலகம், ஐரோப்பா | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

செர்பியாவுக்கும், கொசோவோவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில், இரண்டு இடங்களில், செர்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தீமூட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோது நேட்டோ சமாதானப் படையினர் தலையிட்டிருக்கிறார்கள்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொசோவோ சுதந்திரப் பிரகடனம் செய்த பின்னர், குழப்பங்களில் நேட்டோ படையினர் தலையிடுவது இதுவே முதல் தடவையாகும். பன்ஞா என்ற இடத்தில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் ஆயிரம் கொசோவோ செர்பியர்கள் கலந்து கொண்டதாகவும், கொசோவோ பொலிஸாரும், ஐ.நா பொலிஸாரும் நேட்டோ படையினரின் உதவியை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இராஜதந்திர வட்டாரங்களைப் பொறுத்தவரை, கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம், அனைத்துலக ஸ்திரநிலைக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அமெரிக்க ராஜாங்க அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Kosovo News - Breaking World Kosovo News - The New York Times

2. For Kosovo, hints of the future in other fledgling states of the 21st Century - International Herald Tribune

3. BBC NEWS | Europe | Kosovo Serbs burn border points


டென்மார்க்கில் மீண்டும் முகமது கார்ட்டூன் பதிப்பு

February 13th, 2008 பகுப்புகள்: அரசியல், உலகம், ஊடகம், ஐரோப்பா, சர்ச்சை | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

டென்மார்க்கில் சில பத்திரிகைகள் சர்ச்சைக்குட்பட்ட முகமதுவின் கேலிசித்திரத்தை மீண்டும் வெளியிட்டுள்ளன.

கார்ட்டூன் வரைந்தவர்களில் ஒருவரைக் கொல்ல சில தீவிரவாதிகள் திட்டமிட்டுருந்ததை டென்மார்க் உளவுத் துறையினர் கண்டுபிடித்து இருவரை கைது செய்துள்ளனர். இந்தப் பின்னணியில் தாங்கள் கருத்துரிமைக்குப் பின் நிற்போம் எனும் உணர்வோடு மீண்டும் டென்மார்க் பத்திரிகைகள் முகமதுவின் கேலிச் சித்திரத்தை புதன்கிழமை வெளியிட்டுள்ளன.

Danish Muhammad cartoon reprinted  - BBC


பிரிட்டனுக்கு மருத்துவம் படிக்கவரும் மாணவர்களுக்கு புதிய தடை

February 8th, 2008 பகுப்புகள்: உலகம், ஐரோப்பா, கல்வி, காமன்வெல்த் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

பிரிட்டனில் இருக்கும் மருத்துவத்துறை வெற்றிடங்களில் இங்கேயே பயிற்றுவிக்கப்பட்ட டாக்டர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கும் நோக்கில், காமன்வெல்த் நாடுகளில் இருந்து இங்கு முதுகலைக் கற்கை பயிற்சிகளுக்காக வரும் டாக்டர்களுக்கு தற்காலிகத் தடையை பிரிட்டன் விதித்துள்ளது.

அண்மைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் போது பிரிட்டனில் பயிற்சிபெற்ற டாக்டர்களின் கணிசமான இடங்களை வெளிநாடுகளில் பயிற்சிபெற்ற டாக்டர்கள் பெற்றுவிட்டதாக அறிக்கை ஒன்றில் பிரிட்டனின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற டாக்டர்கள் சிறப்புப் பயிற்சிகளுக்கான பிரிட்டனுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அது கூறியுள்ளது.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. NHS closes its doors to foreign doctors - Times Online

2. Doctors from outside EU barred from consultant training | Society | The Guardian

3. The Hindu : International / India & World : Overseas doctors to be barred from training in U.K.: “Indian doctors already there will not be affected”


மகாத்மா, சர்ச்சில் கட்டுக்கதைகள் - இங்கிலாந்து சர்வே

February 4th, 2008 பகுப்புகள்: உலகம், ஐரோப்பா | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

இங்கிலாந்தில் 3000பேர் பதிலளித்த ஆய்வொன்றில் பலரும் மகாத்மா காந்தியும், வின்ஸ்டண்ட் சர்சிலும் சினிமாக்களிலும் கதைகளிலும் சொல்லப்படும் கற்பனை ஹீரோக்கள் என பதிலளித்துள்ளனர்.

ஆனால் கற்பனை கதா பாத்திரம் ஷெர்லாக் ஹோம்ஸ் உண்மையில் இருந்தார் என பதிலளித்துள்ளனர்.

‘Mahatma is a myth and Churchill never existed’  - DNA India


ஹோலோகாஸ்ட் குறித்த கார்ட்டூன் புத்தகம்: ஜெர்மன் பள்ளிகளில்

February 1st, 2008 பகுப்புகள்: அரசியல், ஐரோப்பா, கல்வி | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

நாஜி காலத்து வன்முறைகளையும், இனப் படுகொலைகளையும் பள்ளி மாணவர்களுக்கு வரைபடப் புத்தகம் மூலம் பயிற்றுவிக்கும் முயற்சி ஜெர்மெனியில் துவங்கவுள்ளது.

தேடல்(The Search) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த புத்தகம் நாஜி கொடுமைகளுக்குத் தப்பிய எஸ்தர் எனும் யூதப் பெண்ணின் கதையை கூறுகிறது.

இத்தகைய படிப்பினைகள் மூலம் ஜெர்மினிய இளைஞர்களிடம் இனப் பிரிவினைகளை தவிர்க்கலாம் என கருதப்படுகிறது.

ஜெர்மெனியில் யூத இனத்து மக்கள் மீண்டும் எழுச்சி பெற்று வருவதால் அங்கே யூத எதிர்ப்பு உணர்வுகளும் பெருகி வருகின்றன.

Germany launches comic book on Holocaust - Reuters


பிரான்ஸ் வங்கியில் பெரும் மோசடி

January 24th, 2008 பகுப்புகள்: ஊழல், ஐரோப்பா, பங்குச்சந்தை, பொருளாதாரம், வணிகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

பிரான்சின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான, சொசைட்டி ஜெனரால்,அதன் வர்த்தகர் ஒருவர் செய்த ஒரு பெரும் மோசடியின் விளைவாக ஏழு பில்லியன் டாலர்களுக்கும் மேலான அளவு தனக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறது.

இந்த வங்கி இந்த வர்த்தகரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது மேலும் அவரது பல நிர்வாகிகளை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது. சுமார் முப்பது வயதுக்கு மேல் இருக்கும் இவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை.

இந்த நபர் தனியாளாக செயல்பட்டார் என்றும் மிகவும் அசாதராணமான நுட்பமான வழிகளைக் கையாண்டு தனது தடங்களை மறைத்தார் என்றும் வங்கியின் தலைவரான டேனியல் பூட்டன் கூறினார். சொசைட்டி ஜெனராலின் பங்குகளில் வர்த்தம் பிரெஞ்சு பங்குச்சந்தையில் இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. மத்திய வங்கி ஒரு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Société Générale's Fraud: What Now?: “After a rogue trader cost the French bank $7.1 billion, many are left to wonder about the lucrative but risky equity-derivatives business”

2. Société Générale | Socked, not gently | Economist.com

3. The biggest rogue traders in history | Business | guardian.co.uk


குடியரசுதின விருந்தினர் சர்க்கோசியின் தோழி எவ்வாறு மதிக்கப்பட வேண்டும்: அரசு குழப்பம்

January 5th, 2008 பகுப்புகள்: ஆளுமை, ஐரோப்பா, விழா | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

sarkozy_bruni_egypt248.jpg

இவ்வருட குடியரசுதினக் கொண்டாட்டங்களில் பங்குபெறவுள்ள பிரெஞ்ச் அதிபர் நிகோலஸ் சர்கோசி இந்நிகழ்ச்சிக்கு  கவர்ச்சியையும் சர்ச்சையையும் சேர்க்க உள்ளார். அவர் தன்னுடன் தோழியையும் அழைத்துவரலாம் என பிரஞ்ச் அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 24 அன்று தனது நான்குநாள் இந்திய சுற்றூப்பயணத்தை துவக்குகிறார். அவரது அண்மைய இத்தாலி மற்றும் எகிப்து பயணங்கள் போது விளம்பர அழகியும் கவர்ச்சிக் கன்னியுமாகிய கார்லா ப்ரூனி அவருடன் வந்திருந்தார்.

இந்திய அதிகாரிகள் இதுவரை வெளிநாட்டு அதிபர்களின் துணைவர்களை இதுவரை உபசரிக்காததால் நாட்டின் முதல் பெண்ணாக இல்லாத ப்ரூனிக்கு எந்தவித மரியாதை தருவது என குழம்பியுள்ளனர்.
EXTERNAL AFFAIR ON REPUBLIC DAY
Sarkozy-Bruni affair has Indian officials blushing


“யூரோ” நாணயம் மேலும் இரு நாடுகளில் - சைப்ரசும், மால்டாவும் இணைந்தன

January 3rd, 2008 பகுப்புகள்: உலகம், ஐரோப்பா, பொருளாதாரம், வணிகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Euronewsஅய்ரோப்பிய நாடுகள் 13 கூட்டாக இணைந்து பொதுவான நாணயமுறையை வைத்துக் கொண்டு உள்ளன. இந்த நாணயம் யூரோ எனப்படும். அமெரிக்காவின் டாலர் நாணயம் உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட நாணயமாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு கருதப்பட்டது. தற்போது அதன் மதிப்பு மிகவும் குறைந்துவிட்டது. யூரோ நாணய மதிப்பு சீராகவும் உயர்ந்தும் வருகிறது. அந்த முறையைத் தற்போது ஏற்றுக் கொண்டு மேலும் இரண்டு நாடுகள் அய்ரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளன. சைப்ரஸ், மால்டா எனும் இரண்டு நாடுகளே அவை.

இவை சிறிய நாடுகள் என்றாலும் அய்ரோப்பிய ஒன்றியத்தில் இணைவதால் பெருமை அடைவதாக அந்நாடுகளின் அதிபர்கள் தெரிவித்தனர். இதனால் அய்ரோப்பியர்கள் எனும் தகுதியும் கிடைப்பதாகவும் தெரிவித்தனர். இதுவரை 15 நாடுகள் யூரோ நாணயத்தைத் தங்களின் பொது நாணயமாகக் கொண்டுள்ளன.

நன்றி: விடுதலை

மேலும் விவரங்களுக்கு:

1. ECB: More than half of circulated bank notes in Cyprus and Malta are euros - International Herald Tribune

2. Arrival of euro boosts Cyprus peace hopes | The Guardian | Guardian Unlimited

3. The euro area | Déjà vu | Economist.com: “The euro area is not immune to the ills that afflict America and Britain”