ஐ.நா | சற்றுமுன்...




மியன்மாரில் ஐ.நா உதவி நிறுத்திவைப்பு

May 9th, 2008 பகுப்புகள்: உலகம், ஐ.நா | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

மியன்மார் இராணுவ அரசு ஐ.நா அனுப்பிய உதவிப்பொருட்களை முடக்கிவைத்திருப்பதை முன்னிட்டு ஐ.நா அங்கு செய்யவிருந்த உதவிப்பனிகளை நிறுத்திவைத்துள்ளது.

Burma impounds UN aid deliveries  - BBC


பாலி சுற்றுச் சூழல் பேச்சுவார்த்தைகள்: ஐரோப்பிய ஒன்றியம் ஆதங்கம்

December 13th, 2007 பகுப்புகள்: அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பா, சுற்றுச்சூழல் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

இந்தோனேஷியாவின், பாலியில் நடந்துவரும் ஐ.நா ஒருங்கிணைத்த சுற்றுச் சூழல் குறித்த கலந்தாலோசனைக் கூட்டங்களில் திண்ணமான வரையறைகளையும் இலக்குகளையும் எட்ட மறுத்தால் வேறு பேச்சு வார்த்தைகளுக்கு இடமில்லை என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இந்தப் பேச்சு வார்த்தைகளின் போது சுற்றுச் சூழலை பாதிக்கும் வாயுக்களை வெளியிடுவதை குறைக்கும் விகிதம் 25%லிருந்து 40%மாக 2020க்குள் உயர்த்தப்படவேண்டும் எனும் திட்டம் முன்வைக்கப் பட்டது. இதை அமெரிக்கா ருஷ்யா உட்பட்ட நாடுகள் ஏற்க மறுத்துள்ளன.

ஐ.நா, பாலி பேச்சு வார்த்தைகள் ஒன்றுக்கும் உதவாமல் போகும் நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளது.

மேற்கூறிய இலக்குகளை ஏற்க மறுத்தால் அமெரிக்க தலமையில் எதிர் வரும் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள மாட்டோம் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

 EU threatens to boycott US-led climate talks - The Hindu


படிக்காதவர்களின் நாடு இந்தியா!

November 20th, 2007 பகுப்புகள்: இந்தியா, ஐ.நா, கல்வி | தொகுப்பாளர்: சற்றுமுன் | மறுமொழிகள் இல்லை » |

உலகிலேயே இந்தியாவில்தான் படிக்காதவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்கிறது அண்மையில் வெளிவந்த ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பொன்று. இந்தத் தகவலை மத்திய அரசு இராஜ்ய சபையில் இன்று தெரிவித்தது.2006க்கான மனிதவள மேம்பாட்டு அறிக்கையின்படி இந்தியா 177நாடுகள் கொண்ட பட்டியலில் மனித வள மேம்பாட்டில் 126வது இடத்தில் உள்ளது என அத்துறையின் மத்திய மந்திரி புரெந்தேஸ்வரி தெரிவித்தார்.

India has the largest number of illiterates! - Rediff


அல் கோருக்கு நோபல்

October 12th, 2007 பகுப்புகள்: ஆளுமை, உலகம், ஐ.நா, சுற்றுச்சூழல், விருது | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

2007ன் (உலக) அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோருக்கும் ஐ.நாவின் தட்பவெப்பநிலை (ஆய்வுக்) குழுவிற்கும் (IPCC) வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல், தட்பவெப்பம் குறித்த பிரச்சாரங்களுக்காக இப்பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

IPCCன் தலைவர் இந்தியாவின் இராஜேந்திர பச்சூரி ஆவார்.  1988ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தில் 2500க்கும் மேற்பட்ட அறிவியல் வல்லுனர்கள் வேலை செய்கின்றனர்.

“இந்தப் பரிசு அறிவியல் உலகின் பங்களிப்பிற்கான அங்கீகாரம்” என  பச்சூரி இன்று புது தில்லியில் தெரிவித்துள்ளார்.

 அல்கோரின் நோபல் விருது அவரை அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கத் தூண்டுமா என கேள்விகள் எழுந்துள்ளன.

Gore, UN Climate Panel Share 2007 Nobel Peace Prize (Update3) Bloomberg

Al Gore and UN climate body win Nobel Peace PrizeAFP


கம்போடியாவின் க்மெர் ரூஜ் இயக்கத்தின் மூத்த தலைவர் கைது

September 19th, 2007 பகுப்புகள்: ஆசியா, உலகம், ஐ.நா, கைது | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

கம்போடியாவின் க்மெர் ரூஜ் இயக்கத்தின் உயிருடன் இருக்கும் மிக மூத்த உறுப்பினரான, நுவோன் சீயா, ஐ.நா மன்ற ஆதரவுடன் இயங்கும் விசாரணைக்குழு ஒன்றினால், போர்க்குற்றங்கள் மற்றும் மானுட குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டதற்கு , கம்போடிய மக்கள் நியாயத்தை பெற வேண்டுமென்றால் இதுவே அதற்கு கடைசி சந்தர்ப்பமாக இருக்கக்கூடும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்

இரண்டாவது சகோதரர் என்று அறியப்பட்ட இவர், இன்று முன்னதாக தாய்லாந்து எல்லைக்கருகே கைது செய்யப்பட்டார். க்மெர் ரூஜ் தலைவரான போல்போட், 1970களில் ஒரு கொடூரமான ஆட்சியை நடத்திய போது இவர் , போல் போட்டுக்கு மிக நெருங்கிய ஆலோசகராக இருந்தார். குற்றம் சாட்டப்படும் ஐந்து மூத்த முன்னாள் அதிகாரிகளில் இவர் முதலாமவர்.

போல் போட் வீட்டு சிறையில் இருக்கும் போது 1998இல் இறந்தார்.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:
1. BBC NEWS | Asia-Pacific | Cambodia’s brutal Khmer Rouge regime
2. BBC NEWS | Asia-Pacific | Key figures in the Khmer Rouge
3. Former Khmer Rouge Leader Detained | World Latest | Guardian Unlimited
4. Khmer Rouge Brother No. 2 charged with war crimes | U.S. | Reuters


ஐ.நாவில் இந்தி ஆட்சிமொழி: இந்திய அரசின் முயற்சி

July 14th, 2007 பகுப்புகள்: உலகம், ஐ.நா, மொழி | தொகுப்பாளர்: மணியன் | 5 மறுமொழிகள் » |

நியூயார்க் நகரில் எட்டாவது உலக இந்தி மாநாடு வெள்ளியன்று ஆரம்பித்துள்ளது. மூன்று கோடி ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தை இந்த விழாவிற்காக அரசு செலவழித்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்கள் இந்தி ஐநாவின் ஆட்சிமொழியாக அலங்கரிக்க முயலும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் எனக் கருதுகிறது. இந்திய வெளியுறவு துணை அமைச்சர் ஆனந்த் சர்மா உலக அரங்கில் இந்தியா ஆற்றிவரும் பணிகள் பாராட்டப்பட்டுவருகின்றன எனக் கூறினார். உலகம் முழுவதுமிலிருந்து 650 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள இந்த மூன்றுநாள் மாநாடு ஞாயிறன்று முடிவடைகிறது.

IBNLive.com > India roots for Hindi as official language at UN : Hindi, United Nations, India, official language


பாகிஸ்தானிய அமைதிப்படையினர் காங்கோவில் தங்கம் கடத்தியமை குறித்த ஆதாரம்

July 13th, 2007 பகுப்புகள்: உலகம், ஊழல், ஐ.நா, பாக்கிஸ்தான் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

காங்கோ ஜனநாயகக் குடியரசில், சில பாகிஸ்தானிய அமைதிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில், ஒரு நபர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்கத்துக்குப் பதிலாக காங்கோலிய கிளர்ச்சிக்காரர்களுக்கு, ஆயுத விநியோகம் செய்வதுடன் தொடர்புடைய துப்பாக்கிகளின் கடத்தல்களிலும், குறித்த பாகிஸ்தான் அதிகாரிகள் சம்பந்தப்பட்டதாக, கடந்த மே மாதத்தில் நடந்த பிபிசியின் புலன்விசாரணை ஒன்றிலும் ஆதாரங்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஆதாரம் எதுவும் தமது விசாரணையின் போது கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

இந்த அறிக்கை தொடர்பில் பாகிஸ்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாப்புப் பணிகளின் தலைவரான, ஜீன் மரியே கொகென்னோ தெரிவித்துள்ளார்.

- BBC Tamil

BBC NEWS | South Asia | Peacekeeper ’smuggled Congo gold’: “A United Nations inquiry has confirmed that a Pakistani peacekeeper in the Democratic Republic of Congo was involved in smuggling gold.”
Associated Press of Pakistan - Pakistani peacekeepers not involved in weapons trade in DRC: Munir Akram


செங்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது

June 28th, 2007 பகுப்புகள்: இந்தியா, உலகம், ஐ.நா | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | ஒரு மறுமொழி » |

டில்லியில் உள்ள செங்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக (World Heritage Monument) யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல வரலாற்று சிறப்புமிக்க தலங்களுக்கும் யுனெஸ்கோ இந்த அங்கீகாரத்தை தருவது வழக்கம். இவற்றில் பலவற்றிற்கும் யுனெஸ்கோ நிதி உதவியும் வழங்குகிறது.

இதுகுறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

PM delighted at Red Fort getting world heritage status Hindu
Red Fort joins UNESCO’s World Hegitage Sites list Hindu
Red Fort is now a world heritage site Business Standard


ச:யுனெஸ்கோ பண்பாட்டு தேர்வில் உருக் வேதம்

June 21st, 2007 பகுப்புகள்: உலகம், ஐ.நா, கலை-இலக்கியம், கல்வி | தொகுப்பாளர்: மணியன் | 2 மறுமொழிகள் » |

பிற்கால சந்ததிகளுக்காக சேமிக்கப்படும் பண்பாட்டு தேர்வில் 38 புதிய விதயங்கள் சேர்க்கப் பட்டுள்ளன; அவற்றில் 30 கையெழுத்துப்பிரதிகளில் உள்ள உருக் வேதமும் அடங்கும். தவிர உலகின் முதல் திரைப்படம், நோபல் குடும்பத்தினரின் சேமிப்புக்கள், தென்னாப்பிரிக்காவின் அபார்தீட் எதிர்பாளர்களின் குற்ற விசாரணை ஆகியனவும் அடங்கும்.
இதுபற்றிய முழு விவரங்களுக்கு…The Hindu News Update Service


ச: முன்னாள் ஐ.நா பிரதம செயலர் கர்ட் வால்தீம் மரணம்

June 15th, 2007 பகுப்புகள்: ஐ.நா, மரணம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

முன்னாள் ஐநா பிரதம செயலராகவும் ஆஸ்திரியாவின் தலைவராகவும் இருந்த கர்ட் வால்தீம் நேற்று தனது வியன்னா வீட்டில் 88 வயதில் மரணமடைந்தார். அவருக்கு நாசிதுருப்புகளுடன் தொடர்பு இருந்ததாக அவர் ஆஸ்திரிய தலைவர்பதவிக் காலத்தில் சர்ச்சை எழுந்தது.

முழு விவரங்களுக்கு.. Kurt Waldheim, Former U.N. Chief, Is Dead at 88 - New York Times


ஐ.நா: காந்திஜி பிறந்தநாள் சர்வதேச அஹிம்சை தினம்.

June 14th, 2007 பகுப்புகள்: இந்தியா, உலகம், ஐ.நா | தொகுப்பாளர்: வாசகன் | மறுமொழிகள் இல்லை » |

உலகளவில் அஹிம்சை; சமாதானத்தைப் பரப்பியதில் தேசப்பிதா மஹாத்மா காந்தி ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்து கவுரவிக்கும் விதமாக, அவர் பிறந்த அக்டோபர் 2ம் நாளை அகில உலக அஹிம்சை தினமாக ஐக்கிய நாடுகள் அவை அறிவிக்க உள்ளது.

இந்தியாவின் இம்முயற்சிக்கு ஐ,நாவின் 191 உறுப்பு நாடுகளில் 120 நாடுகள் ஆதரவளித்துள்ளன.

மேலும் படிக்க….