ஈழம் - இலங்கை | சற்றுமுன்...




திருகோணமலையில் கடற்கரும்புலிகள் தாக்கி கப்பல் அழிப்பு

May 9th, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை | தொகுப்பாளர்: ரவிசங்கர் | மறுமொழிகள் இல்லை » |

சற்று முன்னர் இலங்கை நேரப்படி 10 மே 2008 விடிகாலை 2.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகளின் சிறப்பு நீரடித் தாக்குதல் பிரிவினர் நடத்திய தாக்குதலில் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நின்ற சிறிலங்கா கடற்படையினரின் வீரர்கள் போக்குவரத்துக்கும் பொருள் விநியோகத்துக்குப் பயன்படும் கப்பலுமான A -520 தாக்கித் தகர்க்கப்பட்டுள்ளது.

செய்தி: TamilNet


சிறிலங்காவில் அமைதி ஏற்பட உதவ விரும்புகிறேன்:ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

April 18th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், ஆளுமை, ஈழம் - இலங்கை | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

Peace and reconcilation conference osloசிறிலங்கா யுத்தபூமியில் அமைதி நிலவிட தாம் உறுதுணையாக இருக்க விரும்புவதாக ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார். இருதரப்பினரின் நம்பிக்கையையும் பெற்றிருப்பதாகக் கூறும் குரு தமக்கு யாரும் அழைப்பு அனுப்ப வேண்டியதில்லை என்று கூறினார். வீடு பற்றி எரியும்போது யாராவது அழைப்பிற்கு காத்திருப்பார்களா என்று நார்வேயிலிருந்து IANSக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்துக்கள் ஆஸ்லோவில் கடந்த வாரம் அவரது வாழும் கலை சார்பில் நடந்த அமைதி மாநாட்டின் முடிவுறையில் கூறினார்.

இந்த அமைதி மாநாட்டில் சிறிலங்கா அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், புத்த பிக்குகள்,தமிழகத்திலிருந்து மதிமுக தலைவர் வைகோ, நார்வேயின் சிறிலங்கா சிறப்பு தூதர் யொன் ஹான்சென் பௌர் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநாடு சூடாக இருந்தபோதும் ஒருவரும் வெளிநடப்பு செய்யவில்லை, அனைவருக்கும் அமைதிக்கான தீர்வு காண்பதில் முனைப்பு இருந்தது என்கிறார் ரவிசங்கர்.

அரசியல் தலைவர்களால் தீர்வு காணமுடியாத பிரச்சினைக்கு ஆன்மீகத் தலைவரால் முடியுமா என்ற கேள்விக்கு வல்லரசுகளால் மனிதர்களின் இதயங்களையும் மனதையும் இணைக்க முடியாது; மகாத்மா காந்தி தனது ஆன்மீக பலத்தால் சுதந்திர போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார். கொசொவோ,அயர்லாந்து,பாகு இங்கெல்லாம் அமைதி திரும்பியிருக்கும்போது சிறிலங்கா பிரச்சினையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணுதல் முடியாத செயலல்ல எனக் கூறினார்.

I want to bring peace to Sri Lanka: Sri Sri Ravi Shankar


இலங்கை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உட்பட 12 பேர் பலி

April 7th, 2008 பகுப்புகள்: அரசியல், ஈழம் - இலங்கை, குண்டுவெடிப்பு, கொலை, தடகளம், மரணம், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையின் மேல்-மாகாணத்திலுள்ள கம்பஹா மாவட்டத்தில் ஞாயிறு காலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலொன்றில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே உட்பட சுமார் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஞாயிறு காலை கம்பஹா மாவட்டத்தில் வலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சிங்கள-தமிழ் புத்தாண்டையொட்டிய மராதான் ஓட்டப்போட்டியொன்றில் பிரதான விருந்திரனாக கலந்துகொண்டிருந்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே, அந்த ஓட்டப் போட்டியினை தொடக்கிவைப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கிறது.

இதில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயுடன்,

  • இலங்கையின் முன்னாள் தடகளவீரரும், தெற்காசிய மராதான் ஓட்டப் போட்டியில் தங்கப்பதங்கம் வென்றிருந்தவருமான கே.எஸ் கருணாரட்ண மற்றும்
  • தேசிய தடகளப் பயிற்றுவிப்பாளருமான லக்ஸ்மன் டீ அல்விஸ்

உட்பட சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 90க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா மாவட்டத்தின் மூத்த பொலிஸ் அதிகாரியான எஸ்.எஸ்.பி. ஹெக்டர் தர்மசிறி உட்பட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கம்பஹா, மற்றும் ராகம தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் மிகவும் மோசமான நிலையிலிருந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளூர் தொலைக்காட்சிகளில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதையும், அதன் பின்னர் மராதான் ஓட்டப் போட்டியினை ஆரம்பித்து வைக்கும்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையும் விசேட செய்தி அறிவித்தல்களின்போது காண்பிக்கப்பட்டன.

பாதுகாப்புத்தரப்பினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனாலும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து இந்தக் குண்டுவெடிப்புக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரியே காரணம் என்று ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தேசிய தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குண்டுத்தாக்குதலையும், அமைச்சரின் படுகொலைச் சம்பவத்தையும் விடுதலைப்புலிகளின் மிருகத்தனமான செயலெனக் கண்டித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கும் தனது அரசின் நடவடிக்கைகளிலும், திடசங்கற்பத்திலும் எவ்வித மாறுதல்களையும் இது ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

55 வயதான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஒரு சட்டத்தரணி ஆவார். 1983ஆம் ஆண்டிலிருந்து ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததோடு, தனது அரசியல் வாழ்வில் சிவில் விமானப் போக்குவரத்து, கிறிஸ்தவ விவகாரங்கள், இனவிவகாரம் மற்றும் நல்லிணக்கம் போன்ற பல துறைகளில் பலவருடங்கள் அமைச்சராகவும் பதவிவகித்திருக்கிறார்.

இறக்கும்போது இவர் ஆளும் கட்சியின் பிரதான கொறடாவாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், பொருளாளராகவும் கடமையாற்றியிருந்ததோடு, அடுத்தமாதம் கிழக்கு மாகாணசபைக்காக இடம்பெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்துக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிய வருகிறது.

இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் பின்னர் தென்னிலங்கையில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டாவது அமைச்சர் இவராவார். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 8ம் திகதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற தேசநிர்மாண அமைச்சர் தஸ்ஸநாயக, ஜா-எல பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. VIRAKESARI ONLINE: “அமைச்சர் மீதான குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணை இரகசிய பொலிஸாரிடம் மரதன் ஓட்டப் போட்டியாளர் போன்றே குண்டுதாரி ஊடுருவல்” | பூரண அரச மரியாதையுடன் வியாழனன்று இறுதிக்கிரியை

2. Pathivu: TAMIL NATIVE! :: பதிவு: தமிழரின் பூர்வீகம்! Tamil: “அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கம்பஹாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலி”

3. TamilNet: 06.04.08 Jeyaraj Fernandopulle killed in bomb blast


இல‌ங்கை‌ ராணுவம் தாக்குதல் - த‌மி‌ழ் எ‌ம்.‌பி.படுகொலை

March 6th, 2008 பகுப்புகள்: அரசியல், ஈழம் - இலங்கை, கொலை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!இலங்கை ராணுவம் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் த‌மி‌ழ்‌த் தே‌சிய‌க் கூ‌ட்டமை‌ப்‌பைச் சேர்ந்த எம்.பி. ‌கி.‌சிவநேச‌ன் கொல்லப்பட்டார்.

இன்று இலங்கை பாராளும‌ன்ற‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்ற சிவநேசன், கொழும்பிலிருந்து ‌திரு‌ம்‌பி‌க் கொ‌ண்டிரு‌ந்தார். மதியம் 1.20 ம‌ணி‌யளவில் வ‌ன்‌னி கனகராய‌ன்குள‌ம் பகு‌தி‌யி‌ல் இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவு‌ம் படை‌யின‌ர் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிவநேச‌ன், அவ‌ரது ஓ‌ட்டுந‌ர் ஆ‌கியோ‌ர் உ‌யிரிழ‌ந்ததார்கள்.

இந்த சம்பவத்திற்கும், அரசுப் படைகளுக்கும் தொடர்பு இல்லை என்று ராணுவம் மறுத்துள்ளது. விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ராணுவ நடமாட்டமே கிடையாது என்று அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற தம்மை ஏற்கனவே சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி இலங்கை ராணுவம் மிரட்டியிருந்ததாக கடந்த பிப்ரவரி 21 ம் தேதியன்று சிவநேசன், பாராளுமன்றத்தில் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் உயிரிழந்துள்ள மூன்றாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவநேசன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டாவது தமிழ் எம்.பியும் ஆவார்.

நன்றி: யாஹு | தட்ஸ்தமிழ்

மேலும் விவரங்களுக்கு:

1. Tamil Daily News Page @ Puthinam.com: “சிறிலங்காப் படையினரால் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் படுகொலை”

2. TamilNet: 06.03.08 Jaffna TNA MP Sivanesan killed in DPU Claymore attack

3. TNA MP Sivanesan dies in a blast in LTTE dominated Wanni - Ministry of Defence (press release), Sri Lanka


பிரபாகரன் தப்ப இடி அமீன் தீர்வை சொல்கிறது இலங்கை

February 20th, 2008 பகுப்புகள்: அரசியல், இலங்கை, ஈழம் - இலங்கை | தொகுப்பாளர்: லக்கிலுக் | மறுமொழிகள் இல்லை » |

இடி அமீன் வழியில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையைவிட்டு தப்பி வெளிநாட்டில் தஞ்சம் புகலாம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றதிலிருந்து, தமிழர் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இலங்கை.

புலிகளின் மன் உறுதியை குலைக்கும் விதமாக, குண்டு வீச்சில் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், காயமடைந்து விட்டதாகவும் வெவ்வேறு பொய்யான தகவல்களை இலங்கை அரசு பரப்பி வருகிறது.

இந்நிலையில், போரில் தோற்று பிரபாகரன் இலங்கையைவிட்டு தப்பிச்செல்ல ஏதோ தருணம் பார்த்துக் கொண்டிருப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, இடி அமீன் பாணியில் பிரபாகரன் வெளிநாட்டில் தஞ்சம் புக உதவும் தீர்வை தெரிவித்துள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

உகாண்டாவில் கடந்த 1971 ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய இடி அமீன், 1979 ம் ஆண்டு நிகழ்ந்த உகாண்டா - தான்சானியா போருக்குப் பின்னர் லிபியாவுக்கு தப்பிச் சென்றார்.பின்னர் அவர் 1981 ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு சென்று, 2003 ம் ஆண்டு இறக்கும் வரை அங்கேயே தங்கி இருந்தார்.

இந்நிலையில் இதுபோன்றதொரு தீர்வை பிரபாகரனுக்கு தாங்களும் தெரிவிப்பதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் பாலிதா கோஹனா கூறியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ” பிரபாகரன் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினால் , ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக இந்தியா நிச்சயம் அவரை பிடித்துவிடும்.மேலும் இந்தியாவும் அவ்வப்போது பிரபாகரனை நாடு கடத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பி வருகிறது ” என்று கூறினார்.

பிரபாகரன் வெளிநாட்டில் பத்திரமாக புகலிடம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை நார்வே மேற்கொண்டு வருகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ” அது நல்ல யோசனை இல்லையா ? இந்த இடி அமீன் தீர்வு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது ” என்று கூறினார்.

மேலும் ஆஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

(மூலம் - வெப்துனியா)


விலைவாசி ஏற்றத்தால் பட்டினி : அகதி பேட்டி

February 16th, 2008 பகுப்புகள்: இலங்கை, ஈழம் - இலங்கை, சமூகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

விலைவாசி ஏற்றத்தால் பட்டினி : அகதி பேட்டி

மண்டபம் : இலங்கையில் விலைவாசி ஏற்றத்தால் தமிழர்கள் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர் என படகில் வந்த அகதி கூறினார். இலங்கை மன்னார்,யாழ்பாணம்,திரிகோணமலை பகுதியிலிருந்து நான்கு குடும்பத்தை சேர்ந்த 11 அகதிகள் பேச்சாளையிலிருந்து படகில் புறப்பட்டு நேற்று காலை பாம்பன் குந்துகால் கடல்பகுதியில் வந்திறங்கினர்.  இவர்களில் நாகேந்திர ஸ்ரீரங்கன்(24)கூறுகையில்,” இலங்கை அரசு மீன் பிடி தொழிலுக்கு மானியமாக அளித்தவந்த 50 லிட்டர் மண்ணெண்ணெய் தற்போது 25 லிட்டராக குறைத்து உள்ளது.இதனால் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை.மேலும் கிலோ அரிசி ரூ. 60, கிலோ சீனி ரூ.80,குழந்தைகளுக்கான பால் மாவு கிலோ ரூ. 300 க்கு விற்கப்படுகிறது. விலைவாசி ஏற்றத்தால் தமிழர்கள் பட்டினி கிடக்கின்றனர்’ என்றார். தனியாக வந்த அகதி:இலங்கை மன்னார் பகுதியிலிருந்து தவகரன்(31)என்ற அகதி படகில் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து தனியாக பாம்பன் கடல் பகுதியில் வந்திறங்கினார்.இவர் கூறுகையில்,’ நான் பேக்கரியில் வேலை செய்து வந்தேன்.எங்கள் ஊரான கொடிகாமத்தில் தொடர்ந்து அப்பாவி பொதுமக்கள் சுடப்படுகின்றனர். விடுதலைப்புலிகள்,கருணா தலைமையிலான அமைப்பினர்,இலங்கை ராணுவம் என இவர்களில் யார் சுடுகின்றனர் என தெரியவில்லை.இதில் அப்பாவி பொது மக்கள் குண்டடிபட்டு இறக்கின்றனர்’ என்றார்.

http://www.dinamalar.com/2008FEB16/district/ramanathapuram.asp


மணலாறு பிரதேசத்தில் குண்டு வெடிப்பு - 12 பேர் பலி 20 பேர் காயம்

February 4th, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை, மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இலங்கையின் வடக்கே அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள மணலாறு பிரதேசத்தில் (வெலி ஓயா) இன்று பிற்பகல் ஒரு பேருந்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு கிளேமோர் கன்னி வெடித் தாக்குதலில், குறைந்தது 12 பேர் பலியாகியுள்ளார்கள், 20 பேர் காயமடைந்துள்ளார்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1.Puthinam Tamil Daily News Page @ Puthinam.com: “மணலாற்றில் கிளைமோர்த் தாக்குதல்: 2 படையினர் உள்ளிட்ட 12 பேர் பலி - 17 பேர் படுகாயம்”

2. TamilNet: 04.02.08 - 10 civilians, 2 SLA soldiers killed, bus ambushed in Manalaaru

3. Bombs mar Sri Lanka independence day - CNN.com


புதுதில்லியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதவாக பேரணி ஆர்ப்பாட்டம் - புதுச்சேரியில் வழி அனுப்புவிழா

February 3rd, 2008 பகுப்புகள்: அரசியல், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம் - இலங்கை, கிளர்ச்சி, சமூகம், சென்னை, தமிழக அரசியல், தமிழ்நாடு, நாடாளுமன்றம், போராட்டம், மத்திய அரசியல் | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | 2 மறுமொழிகள் » |

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரும் 06-02-2008 புதனன்று, காலை 11 மணியளவில், புதுதில்லியில் பாராளுமன்றம் முன்பு இந்திய அரசே! தமிழர்களைக் கொல்லும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே என வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.    இதில், கலந்துக் கொள்வதற்காக புதுச்சேரிலிருந்து பெரியார் தி.க. அமைப்பின் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் 60 பேர், 03-02-2008 ஞாயிறன்று மதியம் 4.00 மணியளைவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டனர். சென்னையிலிருந்து தொடர்வண்டி மூலம் புதுதில்லி செல்கின்றனர். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி அனுப்பினர்.  தமிழகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் இப்போரட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளதாக அவ்வமைப்பின் புதுச்சேரி செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ கூறினார்.


‘விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு: தமிழக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும்’

February 2nd, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை, தமிழக அரசியல் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 2 மறுமொழிகள் » |

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதாக இருந்தால், தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசினார்.

கச்சத்தீவு கடல் பகுதிகளில் கண்ணி வெடி புதைப்பு மற்றும் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசு மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

கச்சத்தீவை ஒட்டிய சர்வதேச கடல் எல்லை பகுதியில் இலங்கை அரசு கண்ணி வெடிகளை புதைத்திருக்கிறது. இது இந்திய அரசுக்கு தெரியாமல் நடந்திருக்காது. இது தெரிந்தும் எதிர்நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டிய இந்திய அரசு, தமிழக மீனவர்களை மீன்பிடிக்க செல்லாதீர்கள் என்கிறது.

இந்த விஷயத்தில், இந்திய அரசு இலங்கைக்கு உடந்தையாக இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டுகிறது. கடலில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் நீண்ட காலத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடியவை.

இலங்கை அரசு கண்ணிவெடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். கண்ணிவெடிகளை புதைத்திருப்பது தமிழக மீனவர்களுக்கு எதிரானது மட்டுமில்லாமல், சேது கால்வாய் திட்டத்தை முறியடிக்கவும் இலங்கை அரசு முயன்று வருகிறது. கண்ணிவெடிகளை அகற்ற இந்தியா சர்வதேச சமுதாயத்தை நாடவேண்டும். இல்லையென்றால் இலங்கை மீது நேரடியாக படையெடுப்பு நடத்தி கச்சத்தீவை மீட்க வேண்டும்.

TamilNet - Providing moral support to Eezham, not a crime- Thiruma: Dalit Panthers of Indiaசட்டமன்றத்தில் கச்சத்தீவை மீட்க அரசு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசுக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது என்ற அரசின் அறிவிப்பு உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாக அமைந்துவிடும்.

இந்திய இறையாண்மைக்கோ, ஒருமைப்பாட்டுக்கோ எதிரான இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்க கூடாது என்றுதான் 1967-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. தார்மீக அடிப்படையில் ஆதரவோ, கருத்தோ தெரிவிப்பது குற்றமாகாது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதாக இருந்தால் தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு துணிச்சல் இருந்தால், தமிழ் ஈழம் அமைவதை விரும்பவில்லை என்று பிரகடனம் செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாரா?. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி தாழ்த்தப்பட்ட மக்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

தி.மு.க. தயவில் வெற்றி பெற்று விட்டு அதே அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். நாங்கள் எங்கள் கருத்துரிமைக்கு குரல் கொடுக்கிறோம். அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சி காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி அஞ்ச வேண்டாம். உங்கள் தயவில்லாமல் அவர்களால் வெற்றி பெற முடியாது.

நன்றி: தினத்தந்தி


இலங்கையில் குண்டுத்தாக்குதல் - 20 பேர் கொல்லப்பட்டனர்.

February 2nd, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை, மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 3 மறுமொழிகள் » |

BBCமாத்தளை மாவட்டத்தில் உள்ள தம்புள்ள பஸ் தரிப்பிடப் பகுதியில் இன்று காலை 7.05 மணியளவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இத் தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் தம்புள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கண்டியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தினை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பேருந்து நிலையப் பகுதி படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கின்றது.

நன்றி: சங்கதி

மேலும் விவரங்களுக்கு:

1. TamilNet: 02.02.08 Bomb targets bus in Dambulla, 20 killed

2. BBC NEWS | South Asia | Deadly blast hits Sri Lanka bus

3. Bus bomb kills 20 in S.Lanka, 50 hurt-military | Reuters


சிறையில் கருணா தாக்குதல்

January 29th, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | 2 மறுமொழிகள் » |

லண்டனில் போலி பாஸ்போர்ட் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருணா மீது வெந்நீரை ஊற்றி தாக்குதல் நடந்துள்ளது. புலிகள் ஆதரவு தமிழர்களால் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் கருணா பலத்த காயம் அடைந்தார்.

லண்டன் சிறையில் கருணா மீது தாக்குதல்


இலங்கை : பஸ்ஸில் குண்டுவெடிப்பு - 20 பேர் பலி

January 16th, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை, குண்டுவெடிப்பு, குழந்தைகள், சமூகம்,