இராணுவம் | சற்றுமுன்...




இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது: இலங்கை ராணுவத் தளபதி

July 1st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், இராணுவம், இலங்கை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது: இலங்கை ராணுவத் தளபதி

இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது என்று இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கூறினார்.

தார்மீக அடிப்படையிலும் அரசியல் ரீதியாகவும் இலங்கைக்கு இந்தியா ஆதரவு தருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இலங்கை ராணுவ அதிகாரிகள் 800 பேர் இந்தியாவில் இலவசமாக பயிற்சி பெறுகின்றனர். இந்தியா தரும் ஆதரவு மிகப் பெரியது என்று, கொழும்பில் உள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களிடம் அவர் பேசினார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், கொழும்புக்கு சமீபத்தில் வந்தார். சீனா, பாகிஸ்தானிடம் ஆயுதம் கேட்டு இலங்கை அணுகாமல் தடுக்க, இந்தியாவே ஆயுதம் வழங்கும் என்று இலங்கையிடம் அவர் கூறினாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதுபோல அவர் எதுவும் கூறவில்லை என்றார் பொன்சேகா.

எங்களுக்குத் தேவையான ஆயுதங்கள் உள்ளன என்று இந்தியாவுக்குத் தெரியும் என்றார் அவர்.

இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்கினால், தென் இந்தியாவில் அரசியல் ரீதியாக எதிர்ப்பு இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எனவே இந்திய அரசை தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவிடம் இருந்து ஆயுதம் வாங்க முடியவில்லையே என்று நாங்கள் வருத்தப்படவில்லை என்று கூறிய பொன்சேகா, வழக்கமான முறையில் இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேராக போரிடுவதில் விடுதலைப் புலிகள் ஏற்கெனவே தோற்றுவிட்டனர். 2006 ம் ஆண்டிலிருந்து இதுவரை 9000 விடுதலைப் புலிகள் போரில் கொல்லப்பட்டனர் என்றார்.

இன்னும் ஓராண்டில் அவர்கள் ராணுவ அளவில் முழுவதுமாக தோல்வியை சந்திப்பர். காடுகளில் போரிடுவதில் இலங்கை ராணுவத்தினர் உலகிலேயே சிறந்து விளங்குகின்றனர் என்றார் பொன்சேகா


வட துருவத்தில் இந்திய கடற்படை் சாதனை!!

April 11th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, இந்தியா, இராணுவம், சாதனை | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

–மூன்று துருவங்களையும் வெற்றி கொண்ட உலகின் ஒரே அமைப்பு (வடதுருவம்,தென் துருவம் மற்றும் உயர அளவில் துருவமான எவரெஸ்ட்)

–இரு துருவங்களிலும் சறுக்கு விளையாடிய முதல் இந்திய குழு.

– மனிதசக்தியால் சறுக்குவண்டிகளை ஓட்டியது சிறப்பானது

பாராட்டுக்கள் !!

Navy team traverses North Pole


‘இடதுசாரி ஆதரவு வாபஸ் ஆனாலும் ஐமுகூ அரசு கவிழாது’

March 16th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், இந்தியா, இராணுவம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ஐமுகூ அரசுக்கு எதிராக இடதுசாரிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமா அல்லது பா.ஜனதா நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை ஆதரிக்குமா எனக் கேட்டபோது , அதற்கு நேரடியாக பதிலளிப்பதை பரதன் தவிர்த்துவிட்டார். அதே சமயம் ஐமுகூ அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தால் அவை கலைக்கப்படலாம் என தாம் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் விலக்கிக் கொண்டாலும் மத்திய அரசு கவிழாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி. பரதன் கூறினார். கரண் தாப்பரின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘டெவில்ஸ் அட்வகேட்’ எனும் நிகழ்ச்சியில் அவர் கூறியது:

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுமா? அல்லது அத்தகைய தீர்மானத்தை பாஜக கொண்டுவந்தால் அதை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்குமா என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது. அத்தகைய சூழல் ஏற்படும்போதுதான் இதுபற்றிக் கூறமுடியும். ஆனால் அவ்வாறு நடக்கும் என்று தோன்றவில்லை. ஒருவேளை அரசு பெரும்பான்மையை இழக்கும்பட்சத்தில் மக்களவையைக் கலைத்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

மக்களவையைக் கலைத்துவிட்டு காபந்து அரசாக நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இத்தகைய ஆலோசனையைத்தான் அமெரிக்க அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சரும் (Richard Boucher) அளித்திருப்பார் என்று தெரிகிறது. ஆனால் அதேசமயம், மைனாரிட்டி அரசாக இருந்துகொண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வி. மத்திய அரசு அவ்விதம் செய்தால், அது நம்பகத்தன்மை மட்டுமின்றி, மக்களிடையே பண்பு, நல் அபிப்ராயம் ஆகியவற்றையும் இழந்துவிடும்.

இதுபோன்ற சர்வதேச ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால், இந்தியாவை பிற நாடுகள் முட்டாள்களாகப் பார்க்கமாட்டார்களா என்கிறீர்கள். இங்குள்ள ஜனநாயக அமைப்பு பிற நாடுகளுக்குப் புரியும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாதங்களை அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். இதுதான் கூட்டணி தர்மமும் ஆகும். அணுசக்தி எரிபொருள் வழங்கும் நாடுகளிடமிருந்து விலக்கு அளித்தால் இந்த ஒப்பந்தத்திற்கு கம்யூனிஸ்ட்டுகள் சம்மதிப்பார்களா என்கிறீர்கள். முதலில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகுதான் சலுகை என்பது அமெரிக்காவின் நிபந்தனையாகும்.

இந்த விஷயத்தில் பிரான்சும், ரஷியாவும் பேச்சு நடத்தி வருகின்றன. அந்நாடுகள் ‘ஹைட் சட்டம்’ எதையும் நம்மீது திணிக்கவில்லை. அமெரிக்காவைத் தவிர்த்து பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தால் எவ்வித தளர்வும் அளிக்கப்படமாட்டாது என்று அமெரிக்க செனட்டர்கள் தெளிவுபடுத்திவிட்டனர். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பிரதானமாகக் கருதுகிறது. இந்த ஒப்பந்த விவகாரத்தில் முன்னேற்றம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் சர்வதேச அணுசக்தி கமிஷனுடன் (ஐஏஇஏ) என்ன பேச்சு நடத்தினார்கள் என்பது தெரியவில்லை.

ஐஏஇஏ-வுடனோ அல்லது இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான வரையறை குறித்தோ கம்யூனிஸ்ட்டுகள் பிரச்னை எழுப்பவில்லை. எப்படியிருப்பினும் அணுசக்தி நமக்குத் தேவைதான். ஆனால் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளைத்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்க்கின்றன. அணுசக்தி எரிபொருள் வழங்கும் நாடுகள் எத்தகைய தளர்வையும் அமெரிக்கா அனுமதிக்காமல் அளிக்க முன்வராது என்பதையும் மறந்துவிடக்கூடாது.

அணுசக்தி எரிபொருள் வழங்கும் நாடுகளை அணுகி இந்தியா எரிபொருளைப் பெறலாம் என்றும் 1,2,3 ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்றால் அதை ஏற்பீர்களா என்கிறீர்கள், அதை அறிக்கையாக அரசு அளிக்கட்டும். “ஹைடு’ சட்டத்தை இந்தியா ஏற்கவில்லை என அறிவிக்கப்படும், அதை யுஎஸ் ஏற்குமா என்று பார்ப்போம். அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஆவது குறித்து அமெரிக்க அமைச்சர்கள் கவலை தெரிவித்தது குறித்து பிரதமருக்கு கடிதம் மூலம் கட்சியின் எதிர்ப்பை தெரிவித்திருந்தேன்.

நாடாளுமன்றத்தில் பாஜக தலைவர் வாஜ்பாயை, ‘பீஷ்ம பிதாமகன்’ என வர்ணித்ததன் மூலம், பாஜக ஆதரவோடு இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் மன்மோகன் சிங் முயல்கிறார். ஆனால் அரங்கு நிறைந்த சபையில் பீஷ்மரின் முன்னிலையில்தான் திரெüபதியின் சேலையை துரியோதனன் கலைந்தான் என்பதையும் பிரதமருக்குச் சுட்டிக்காட்டினேன் என்றார் பரதன்.

நன்றி: யாஹு | தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. 48 hrs before talks, Left goes soft on N-deal

2. UPA govt would not fall if Left withdraws support: CPI- Hindustan Times

3. Tehelka:: The Dilemmas Of Power-Play: “Both the Congress and the Left have to be careful of unwittingly helping the BJP”


உலக செய்திகள்: கொலம்பியா, அர்மீனியா

March 3rd, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், ஆசியா, இராணுவம், உலகம், கிளர்ச்சி, சட்டம் - நீதி, தீவிரவாதம், தேர்தல், தேர்தல்முடிவு, போராட்டம், மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

1. BBC NEWS | South Asia | S Lanka finds boat migrants dead: இலங்கையின் திருகோணமலை அருகே திசை தவறிய படகில், உணவு மற்றும் தண்ணீர் இல்லாதபடியால் இருபது பேர் மரணமடைந்துள்ளார்கள். பர்மாவிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் அகதிகளாய் கிளம்பி வாய்ப்புகளைத் தேடி தாய்லாந்து மற்றும் மலேஷியாவை நோக்கி செல்ல ஆரம்பத்த படகில் இருந்தவர்களில் 71 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

2. Chavez warns of war with Colombia - Yahoo! News: கொலம்பியா நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகே வெனிசுவேலா இராணுவமும் ஈக்வடார் நாட்டின் படைகளும் அணிவகுத்திருக்கின்றன. அமெரிக்காவின் ஆணைக்குட்பட்டு ஈகுவடருக்குள் அத்துமீறி நுழைந்து ஈக்வடரின் போராளியை (Revolutionary Armed Forces of Colombia - FARC) கொலம்பியா கொன்றதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Photobucket3. Emergency Order Empties Armenian Capital’s Streets - New York Times: அர்மீனியாவில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி கிளர்ச்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவசர நிலை பிரகடனமானது. இதன் விளைவாக நடந்த போராட்டங்களில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். ருஷியாவின் முன்னாள் அங்கத்தினரான் ஜார்ஜியா போன்ற நாடுகளிலும் இது போன்ற போராட்டங்கள் ஆட்சி மாற்றத்தை விளைவித்தது குறிப்பிடத்தக்கது.


பெனாசிர் நவாஸ் கட்சிகள் பெருபான்மை!

February 19th, 2008 பகுப்புகள்: *பொது, அரசியல், இராணுவம், தீர்ப்பு, பாக்கிஸ்தான் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | ஒரு மறுமொழி » |

முஷரஃப் ஆதரவு கட்சியின் நிலை ? 

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் மறைந்த தலைவர் பெனாசிர் மற்றும் முன்னாள்     
பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரது கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அவ்விரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.இதன் மூலம் கடந்த 8 ஆண்டுகால முஷாரப்பின் ஆதரவு கட்சியின் ஆட்சிக்கு முடிவுக்கு வரவுள்ளது.

இதுவரை தெரியவந்துள்ள 243 பாராளுமன்ற இடங்களுக்கான முடிவுகளில், பெனாசிர் மற்றும் நவாஸின் கட்சிகள் மொத்தம் 149 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 85 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்)கட்சி 64 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

முஷாரப்பின் ஆதரவு கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) 36 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது; முத்தாஹிதா குவாமி இயக்கம் (எம்.கியூ.எம்) 19 இடங்களிலும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 39 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தத் தேர்தலில் அவசியம் ஏற்படின் ஆட்சியமைக்க ஆதரவு நல்கப்படும் என்று பெனாசிர் மற்றும் நவாஸ் ஆகியோரது கட்சிகள் ஏற்கெனவே பரஸ்பர ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


18 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொண்ட இஸ்ரேலியப் படை

January 16th, 2008 பகுப்புகள்: இராணுவம், தீவிரவாதம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

18 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொண்ட இஸ்ரேலியப் படை

 

பாலஸ்தீனத்தின் கஸா பகுதியில் 18 பாலஸ்தீனர்களை இஸ்ரேலியப் படை சுட்டுக் கொண்டது.  மேகத்திய அமைதிக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிராக இஸ்ரேலின் நடவடிக்கை அமைந்துள்ளதாக பாலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரே நாளில் அதிகமான பாலஸ்தீனர்கள் இப்பொழுது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

http://www.gulfnews.com/region/Middle_East/10182134.html


விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்தியா இலங்கை அரசிற்கு ஆதரவு: பிரணாப்

January 12th, 2008 பகுப்புகள்: இந்தியா, இராணுவம், இலங்கை, ஈழம் - இலங்கை, தீவிரவாதம், தொலைக்காட்சி, மத்திய அரசியல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் நடத்திவரும் தாகுதல்களுக்கு இந்தியாவின் ஆதரவு இருப்பதாகவும் எந்த நாடும் தங்கள் அரசியல்சட்டத்திற்குட்பட்டு தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி டெவில்ஸ் அட்வகேட் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கரண் தாப்பருக்கு அளித்த நேர்முகத்தில் கூறியுள்ளார்.

கடந்த சிலகாலமாக சிறிலங்கா இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெறும் சண்டைகள் அதிகமாயுள்ளன.எங்களைப் பொறுத்தவரை தீவிரவாதிகள் விதயத்தில் சூன்ய சகிப்புத்தன்மை ( Zero tolerence) கடைபிடிக்கிறோம்.ஆகையால் எந்த நாடும் தங்கள் நாட்டு தீவிரவாதிகள் மீது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கும் நடவடிக்களைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை என்று கூறினார்.

இலங்கை அரசின் போர்நிறுத்த உடன்பாட்டை இரத்துசெய்ததைக் குறித்த கேள்விக்கு அதன் தாக்கத்தைக் குறித்து ஆராய வேண்டும் என்றார். அதேநேரம் சிறிலங்கா அரசு அந்நாட்டின் அரசியலமைப்பிற்குட்பட்டு சிறுபான்மை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டும் என இந்தியா விரும்புவதாக கூறினார்.

இந்த நேர்முகத்தில் அவர் கூறிய மற்ற விவரங்களைக் காண… ….ரிடிஃப் தளம்


விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் கொல்லப்பட்டுள்ளார்

January 7th, 2008 பகுப்புகள்: அரசியல், இராணுவம், ஈழம் - இலங்கை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

Tamilnetஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய இலுப்பைக்கடவை பகுதியில் வேன் ஒன்றின் மீது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை அணியினர் சனிக்கிழமை பிற்பகல் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராகிய சார்ல்ஸ் எனப்படும், கேர்னல் அருள்வேந்தன் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

ஆனால், அருள்வேந்தன் கிளேமோர் மூலம் கொல்லப்படவில்லை, அவர் மோதலின் போதே கொல்லப்பட்டார் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

இவருடன் பயணம் செய்த கேர்னல் தரத்திலான வேறு 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

மன்னார் இலுப்பைக்கடவைக்கும் பள்ளமடுவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் நீண்டகாலமாக இருந்து வந்த கேர்னல் சார்ல்ஸ் கடந்த 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ புலனாய்வுத் துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் என்றும் விடுதலைப் புலிகள் விபரம் வெளியிட்டிருக்கின்றனர்.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Rich homage paid to Col. Charles in Vanni :: Eelamnation.

2. The Hindu : International : Chief of LTTE’s “military intelligence” killed: “Charles behind massacres: Colombo & Ambush facilitated by tip-off”

3. TamilNet: 06.01.08 - Vanni pays homage to Col. Charles


ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு துவக்கம் புதுகையில் குவிந்த இளைஞர் பட்டாளம்

January 5th, 2008 பகுப்புகள்: இராணுவம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு துவக்கம் புதுகையில் குவிந்த இளைஞர் பட்டாளம்

 நாட்டுக்காக தியாகம் செய்யவும் தயார் என்ற உறுதிபாட்டுடன் ராணுவத்தில் சேருவதற்காக புதுக்கோட்டையில் குவிந்த இளைஞர் பட்டாளத்தால் நேற்று புதுக்கோட்டை குலுங்கியது. இந்திய ராணுவத்தில் காலியாகவுள்ள சோல்டியர் ஜெனரல், டிரேடுமேன், கிளார்க், ஸ்டோர் கீப்பர், டெக்னீஷியன், நர்ஸிங் அசிஸ்டென்ட், டி.எஸ்.சி., உட்பட ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியுடைய இளைஞர்களை தேர்வுசெய்யும் விதமான ராணுவ ஆள்தேர்வு முகாம் புதுக்கோட்டையில் நேற்று ஆரம்பமாகியது. ஒன்பதாம் தேதி முடிய இந்த முகாம் தொடர்ந்து ஆறு நாள் நடக்கிறது. கன்னியாகுமரி, நெல்லை, துõத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலுõர், பெரம்பலுõர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் மூலம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்த செய்திகள் பத்திரிகைகளிலும் வெளியானது. படித்து முடித்து வேலைவாய்ப்புக்கு வழியின்றி இருந்த இளைஞர்களுக்கு ராணுவத்தின் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஊர்சுற்றி காலம் கடத்துவதைவிட இந்திய திருநாட்டுக்காக தியாகம் செய்வதே மேல் என்ற தியாக உணர்வுடன் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதற்காக பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் நேற்றுமுன்தினம் இரவு முதலே புதுக்கோட்டையில் குவியத் துவங்கினர். இதன்காரணமாக புதுக்கோட்டை நகர் நேற்று இளைஞர் பட்டாளத்தால் குலுங்கியது. முகாமின் முதல் நாளான நேற்று சோல்டியர் ஜெனரல் பணிக்கு ஆள்தேர்வு நடந்தது. பங்கேற்பதற்காக நகரின் பல பகுதிகளில் தங்கிய இளைஞர்கள் அனைவரும் நேற்று அதிகாலை நான்கு மணிக்கு முகாம் நடக்கும் மாவட்ட விளையாட்டுத் திடலுக்கு அணிதிரண்டனர்.

ஒரு மணி நேரத்துக்குள் விளையாட்டு திடல் இளைஞர்களால் முழுமையாக நிரம்பி வழிந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினர் மற்றும் போலீஸார் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர். இந்நிலையில் திடீரென்று மழை பெய்யத் துவங்கியது. இதனால் தேர்வு பணி நிர்ணயிக்கப்பட்ட அதிகாலை ஐந்து மணி பதிலாக இரண்டு மணிநேர வரை காலதாமததத்துக்கு பின் காலை ஏழு மணிக்கு துவங்கியது. இதனால் திறந்தவெளி மைதானத்துக்குள் குவிந்த இளைஞர்கள் அனைவரும் மழையில் நனைந்தவாறு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர். ராணுவ ஆள்தேர்வு முகாம் காரணமாக புதுக்கோட்டை நகரில் உள்ள ஹோட்டல்கள், டீ ஸ்டால்கள், பேக்கரிகள் உட்பட உணவு விடுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே வியாபாரம் களைகட்டியது. லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் ஹவுஸ்புல் நிலையில் உள்ளது.

www.dinamalar.com


இன்னும் 6 மாதத்தில் பிரபாகரனை ஒடுக்கி விடுவோம்: இலங்கை ராணுவ தலைமைத் தளபதி

December 31st, 2007 பகுப்புகள்: இராணுவம், இலங்கை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இன்னும் 6 மாதத்தில் பிரபாகரனை ஒடுக்கி விடுவோம்: இலங்கை ராணுவ தலைமைத் தளபதி

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இன்னும் 6 மாதத்துக்குள் ஒடுக்கி விடுவோம். அவர் பதுங்கியுள்ள இடத்தை நெருங்கி வருவதாக குறிப்பிட்டார் இலங்கை ராணுவத் தலைமை தளபதி சரத் பன்சேக.

இலங்கை வடக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளுக்கு சனிக்கிழமை சென்று வந்தபின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கை வடக்கில் புலிகளின் ஆதிக்கம் நிறைந்தப் பகுதியில் இருந்து 3,000-த்துக்கும் மேற்பட்ட புலிகளை அண்மைக்காலத்தில் நாங்கள் விரட்டி உள்ளோம். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகள் தற்போது ராணுவத்தின் வசமுள்ளன.

வன்னி பகுதியின் அனைத்து இடங்களும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. அரசின் தரை, வான், கப்பல் படை உள்ளிட்ட முப்படைகளும் நடத்தி வரும் தீவிர தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் புலிகள் தவித்து வருகின்றனர்.

புலிகளின் படையில் மேலும் 3,000 வீரர்களை வெளியேற்றி விட்டால் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் பதுங்கியுள்ள இடத்தை விரைவில் அடைந்து விடுவோம்.

வான்வழித் தாக்குதல்… புலிகளின் பதுங்குமிடங்களை கண்டறிந்து அழிக்க வான் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், இன்னும் 6 மாதத்துக்குள் பிரபாகரன் பதுங்கியுள்ள இடத்தை கண்டறிந்து அவரை ஒடுக்கி விடுவோம். அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி விட்டோம்.

படைகளுக்கு தேவையான உதவிகளை அதிபர் ராஜபக்ஷ செய்து வருகிறார். படை வீரர்களை அவர் உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார்.

படைக்கு திரும்பும் 8 ஆயிரம் அதிகாரிகள்: இதன் ஒருகட்டமாக கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக ராணுவப் பணிகளில் இருந்து விலகிய 8 ஆயிரம் அதிகாரிகள் மீண்டும் ராணுவத்துக்கு திரும்ப உள்ளனர். அவர்களின் வழிகாட்டுதல்பேரில் இலங்கைப் படை பெரிய சவால்களை எதிர்கொள்ள மேலும் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

www.dinamani.com


தமிழ்நாட்டில் மற்றொரு கடலோர காவல்படை நிலையம்

December 26th, 2007 பகுப்புகள்: இராணுவம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தமிழ்நாட்டில் மற்றொரு கடலோர காவல்படை நிலையம்

தமிழ்நாட்டில் மற்றொரு கடலோர காவல்படை நிலையம் கிழக்கு பிராந்திய தளபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே பிரச்சினை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் மேலும் ஒரு கடலோர காவல்படை நிலையம் அமைக்கப்படும் என்று இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தளபதி ராஜேந்தர்சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே சண்டை நாளுக்குநாள் வலுத்து வருகிறது. இதனால் இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், இலங்கை _ இந்திய கடல் எல்லை பகுதியில், இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தளபதி ராஜேந்தர்சிங் நேற்று ஆய்வு செய்தார். ராமேஸ்வரம் கடல்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இலங்கையில் விடுதலைப்புலிகள் பிரச்சினை தீவிரமாக உள்ளது. இதனால் இந்திய கடலோர பாதுகாப்பிற்காக, தமிழ்நாட்டில் மேலும் ஒரு கடலோர காவல்படை நிலையம் அமைக்கப்படவுள்ளது. விடுதலைப்புலிகளிடம் விமானப்படை இருப்பதால், தமிழ்நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் கடலோர காவல்படைக்கான விமான தளம் அமைக்கப்பட உள்ளது.

கடலில் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் புயல், கடல்சீற்றம் போன்ற ஆபத்துக்களில் சிகிக்கிக்கொள்வதை தடுக்க இஸ்ரோவும், இந்திய கடலோர காவல்படையும் இணைந்து ஆபத்து எச்சரிக்கை கருவி ஒன்றை தயாரித்துள்ளோம். முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 4 மீனவ கிராமங்களை சேர்ந்த 100 படகுகளுக்கு இந்த கருவியை வழங்க இருக்கிறோம். இந்தியாவில் முதன் முறையாக தமிழக மீனவர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு ராஜேந்தர்சிங் கூறினார்.

www.thinaboomi.com


ராணுவ சாலை மூடலை படம் பிடித்த பிரெஞ்சு நிருபர்கள் கைது

December 25th, 2007 பகுப்புகள்: