ஆசியா | சற்றுமுன்...




நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வருகிறது

May 28th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

நேபாளத்தில் நூற்றாண்டுகளாக இருந்துவரும் முடியாட்சி முறையை ரத்துசெய்வது குறித்த தேசிய மன்ற வாக்கெடுப்பு நிறைவேறுவது தாமதமாகியுள்ளது. மன்னர் கியானேந்திராவை அகற்றும் வழிமுறை குறித்து புதிய தேசிய மன்றத்தின் உறுப்பினர்களிடையே விவாதங்கள் நீடித்துவருவதாக காத்மாண்டுவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அதிபர் ஆட்சி முறை குறித்த தற்காலிக திட்டம் ஒன்றுக்கு அனைவரும் உடன்படுவதில் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நேபாளத்தில் மாவோயியவாதிகளுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு சமரச உடன்படிக்கையை அடுத்து நடந்த தேர்தலில் அவர்கள் வெற்றிபெற்றிருந்தார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. TIMELINE-Milestones in political history of Nepal | World | Reuters

2. Nepal Votes to Abolish Monarchy - WSJ.com

முந்தைய சற்றுமுன்:

1. நேபாளம்: மன்னர் கட்டவேண்டிய மின்கட்டணம்.

2. நேபாள மாவோயிஸ்டுகளுக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சுக்கள்

3. நேபாளம்: மன்னருக்கான ஊதியம் நிறுத்தம்

4. நேபாள மாவோயிஸ்டுகள் அமைச்சரவையில் இணைந்தனர்


சீனாவில் 7.8 அளவு நிலநடுக்கம்

May 12th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை, நிலநடுக்கம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

சீனாவில் தென்மேற்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பள்ளி கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்தன.

‘Thousands dead’ in Chinese quake - BBC


பர்மாவில் புதிய அரசியலமைப்பு குறித்த வாக்கெடுப்பு

May 10th, 2008 பகுப்புகள்: ஆசியா, உலகம், தேர்தல் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

தங்களுடைய இராணுவ ஆட்சியை மேலும் மேலும் தொடர்வதற்காக இந்த மக்கள் வாக்கெடுப்பு என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிய அரசியலைமைப்பு தொடர்பாக சூறாவளியால் சின்னாபின்னமான பர்மாவில் மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. வாக்கெடுப்பை தள்ளி வைக்குமாறு விடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும் நிராகரித்து தேர்தல் நடைபெற்றுள்ளது.

வாக்கெடுப்பு நிலையங்களில் ஏராளமான இராணுவத்தினர் இருந்ததால் தாங்கள் வேறு வழியின்றி ஆதரவாக வாக்களித்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். சூறாவளியினால் பாதிக்கப்படாத இடங்களில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

இதற்கிடையே, தரைவழியாக ஐ.நாவின் முதல் நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனத் தொடரணி பர்மா சென்றுள்ளது. ஆனால் பர்மாவின் இராணுவத் தலைமை வெளிநாட்டு நிவாரண பணியாளர்களுக்கு தடை விதித்துள்ளது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Asia-Pacific | Burma votes amid cyclone aid row

2. Despite chaos, Myanmar holding referendum - Los Angeles Times

3. Cyclone aftermath overshadows Myanmar vote - CNN.com


பெய்ரூட்டின் மேற்குப் பாதி ஹெஸ்புல்லா கிளர்ச்சிக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது

May 10th, 2008 பகுப்புகள்: ஆசியா, உலகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

லெபனானில் அரசாங்க ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இடையே மூன்று நாட்களாக மோதல்கள் நடந்துவரும் நிலையில், தலைநகர் பெய்ரூட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மேற்குப் பாதியின் பெருமளவு கட்டுப்பாடு லெபனான் ஷியா குழுவான ஹெஸ்புல்லா வசம் வந்துள்ளது.

ஹெஸ்புல்லாவின் இந்த செயற்பாட்டை ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்போடு ஒப்பிட்டு லெபனான் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பேசினார். வீதிகளை மட்டும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை, ஆனால் பத்திரிகை அலுவலகங்களையும் அரசியல் கட்சி அலுவலகங்களையும் அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஆதரவுப் பிரிவினருக்கு இது ஒரு பெரும் பின்னடைவு என்று பெய்ரூட்டிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

நன்றி: பிபிசி


மியன்மார் சோகம்: 22000 பேர் பலி 41000பேரைக் காணவில்லை

May 6th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை, உலகம், வானிலை | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

மியன்மாரில் நர்கிஸ் சூறாவளிக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 22000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் 41000பேரைக் குறித்த தகவல்கள் எதுவுமில்லை. மொத்த உயிரிழப்பு இன்னும் அதிகமாயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உலகெங்கிலுமிருந்தும் உதவிகள் வரத்துவங்கியுள்ளன.

அரசாங்கம் மக்களை புயலின் தீவிரம் குறித்து எச்சரிக்கை செய்யவில்லை எனூம் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. சீனா, கனடா, செக் குடியரசு, இங்கிலாந்து உட்பட்ட பல நாடுகளும் உதவி வழங்க மூன்வந்துள்ளன.

Over 22,000 dead, 41,000 missing in Myanmar cyclone - The Hindu


மியன்மார் சூறாவளி: 4000பேர் பலி

May 5th, 2008 பகுப்புகள்: ஆசியா, உலகம், சுற்றுச்சூழல், வானிலை | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

மியன்மாரில் வீசிய சூறாவளியில் இதுவரை 4000பேர் பலியாகியிருக்கலாம் என அங்குள்ள வானொலி நிலையம் கணித்துள்ளது. நர்கிஸ் என அழைக்கப்பட்ட சூறாவளியில் 350பேர் இறந்திருக்கலாம் என அறிவித்த மியன்மார் அரசு தற்போது இறந்தவர் எண்ணிக்கையை 3939ஆக அறிவித்துள்ளது.

இந்தியா மியன்மாருக்கு நிவாரணப் பொருகளை அனுப்பிவைத்துள்ளது.

Myanmar radio says cyclone death toll nears 4,000 - The Hindu

India sends two naval ships carrying relief to storm-hit Myanmar - The Hindu


ஆப்கான் அதிபர் கலந்து கொண்ட அணிவகுப்பில் தாக்குதல்

April 28th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, ஆளுமை, உலகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய் கலந்துகொண்டிருந்த ஒரு இராணுவ அணிவகுப்பில் நடந்த தாக்குதலை அடுத்து தமது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக அவர் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் நிலைமை சரியாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். காபூல் நகரம் சோவியத் இராணுவத்திடமிருந்து முஜாஹிதீன் படைகள் வசம் வந்ததன் 16ஆம் ஆண்டு பூர்த்தியைக் நினைவுகூரும் வகையில் நடந்த வைபவத்தில், அதிபர் கர்சாயும் பிற ஆப்கான் பிரமுகர்களும் மேடையேறிய சமயத்தில், தானியங்கி துப்பாக்கிகளும் குண்டுகளும் வெடித்தன.

அதிபரை அவரது மெய்க்காவலர்கள் உடனடியாக சூழ்ந்துகொண்டு அப்புறப்படுத்தியுள்ளனர். ஆப்கானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட மூன்று பேர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர் குறைந்தபட்சம் 11 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு தாலிபான்கள் உரிமைகோரியுள்ளனர். தங்கள் படையைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி: பிபிசி

விழியம்: Karzai Escapes Unharmed After Taliban Attack

மேலும் விவரங்களுக்கு:

1. Karzai escapes attack in Kabul by gunmen - International Herald Tribune

2. Hundreds held after presidential assassination attempt in Afghanistan - Times Online

3. AFP: Afghan president escapes deadly parade attack, three killed


நேபாளத்தில் மாவோயியவாதிகள் தேர்தல் வெற்றி

April 14th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, தேர்தல், தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

நேபாளத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் முன்னாள் கிளர்ச்சிக்காரர்களான மாவோயிஸ்டுகளின் கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகின்றன.

1996ஆம் ஆண்டு முதல் ஒரு தசாப்த காலம் இந்த மாவோயிஸ்டுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் நேபாளத்தில் பதிமூன்றாயிரம் பேர் இறக்கும் நிலை உருவானது. ஆனால் ஒரு புதிய அரசியலமைப்பு நிர்ணய சபையை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், இதுவரை வந்த முடிவுகளின்படி ஆகக்கூடுதலான இடங்களை பிடித்த மிகப் பெரிய கட்சியாக அவர்களது கட்சி திகழுகின்றது.

இதுவரை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் சுமார் 190 இடங்களில், மாவோயிஸ்ட்கள் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தொண்டுதொட்டு செயற்பட்டுவரும் நேபாளத்தின் பாரம்பரிய கட்சிகள் மிகவும் பின்னணியில் நிற்கின்றன.

வறுமை நிலையில் இருக்கின்ற இந்த நாட்டில், பொருளாதார வளர்ச்சியை, சடுதியான சமூக மாற்றத்தைக் கொண்டுவருவோம், என்ற எதிர்பார்ப்புக்களை அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தமது மோசமான பழைய பழக்க வழக்கங்களையெல்லாம் விட்டுவிட்டு, பொருளாதார வளர்ச்சியையும், சமூக மாற்றத்தையும் இவர்கள் கொண்டுவருவார்களா? என்பதுதான், இங்கு இப்போது இருக்கின்ற முக்கியமான கேள்வியாகும்.

மன்னர் பதவி விரைவில் நீக்கப்படும்: மாவோயியவாதிகள் கருத்து

நேபாள தேர்தல்களில் பெருமளவு வெற்றிகளை பெற்றிருக்கும் மாவோயிஸ்ட் கட்சி, அடுத்து அங்கே அமைய இருக்கும் ஆட்சிக்கு தலைமைதாங்கும் என்று தாம் நம்புவதாக, முன்பு கிளர்சிக்காரர்களாக இருந்த மாவோயிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நேபாளத்தின் மன்னர் பதவி இன்னும் மூன்று வாரங்களுக்குள் நீக்கப்படும் என்று மாவோயிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் பாபுராம் பட்டாராய் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu : Front Page : Maoists win 110 seats

2. Election, and Maoists, Could Transform Nepal - New York Times

3. BBC NEWS | South Asia | India worries over Nepal's future


நேபாள தேர்தல் வன்முறைகளில் 6 பேர் பலி

April 9th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், தேர்தல், மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

நேபாளத்தில் புதிய அரசியல் சாசனத்தை எழுதுவதற்காக ஒரு அரசியல் சாசன சபையை தேர்ததெடுக்கும் முகமாக நாடு தழுவிய தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தென்மேற்குப் பகுதியில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களின் பின்னர் ஆறு மாவோயிஸ்டுகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

டாங் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மோதல்கள்தான் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறை சம்பவமாகும்.

மன்னராட்சியை ஒழித்து ஒரு புதிய அரசியல் சாசனத்தை எழுதவுள்ளவர்கள் இந்தத் தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்படவுள்ளனர்.

இந்த தேர்தல் வழிமுறைதான் மாவோயிஸ்டுகளை நீண்ட கால கிளர்ச்சியை கைவிட்டு அரசியல் நீரோட்டத்துகு அழைத்து வந்தது.

நன்றி: பிபிசி

முந்தைய சற்றுமுன்:

1. நேபாள மாவோயிஸ்டுகளுக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் | நேபாள மாவோயிஸ்டுகள் அமைச்சரவையில் இணைந்தனர்

2. நேபாளம்: மன்னர் கட்டவேண்டிய மின்கட்டணம்.

3. நேபாளத்தில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை

மேலும் விவரங்களுக்கு:

1. NDTV.com: Nepal set for historic elections

2. BBC NEWS | South Asia | Seven dead in Nepal poll violence

3. Nine dead in pre-poll violence - Hindustan Times


இந்திய தொலைக்காட்சித் தொடர்களுக்கு ஆப்கானில் புதிய தடை

April 4th, 2008 பகுப்புகள்: ஆசியா, இந்தியா, ஊடகம், கலை-இலக்கியம், சட்டம் - நீதி, சமூகம், தொலைக்காட்சி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ஆப்கானிய தனியார் தொலைக்காட்சிகளில், இந்தியாவின் தொலைக்காட்சித் தொடர்களை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆப்கானிய அரசு தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சித் தொடர்களை ஒளிபரப்புவதை நிறுத்த ஏப்ரல் 15வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதனைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பண்பாடு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் கரிம் கோரம் கூறியுள்ளார். இந்தத் தொடர்கள் இஸ்லாத்துக்கு ஒவ்வாதவை என்று கூறும் ஆப்கானியர்கள் அவற்றுக்கு எதிராக புகார்களைத் தெரிவித்துள்ளதாக அமைச்சகம் கூறுகிறது.

ஆனால் அரசாங்கத்தின் இந்தக் காலக்கெடுவை தொலைக்காட்சி நிறுவனங்கள் குறுக்கீடு என்று வருணித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் அடிப்படைவாதிகளின் செல்வாக்கு அதிகரித்துவருவதை இந்த முடிவு காட்டுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Reporters sans frontières - Afghanistan - Reporters Without Borders: “New offensive against privately-owned TV stations by information ministry and Council of Ulemas”

2. Indian Soap Operas Face Ban in Afghanistan

3. What Afghanistan wants to see on television - Telegraph


‌சீன எ‌‌தி‌ர்‌ப்புக்கு இ‌ந்‌தியா இடம‌ளி‌க்காது: ‌பிரணா‌ப்

April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இ‌‌ந்‌திய எ‌ல்லை‌க்‌கு‌ள் ‌அர‌சிய‌ல் ‌‌ரீ‌தியாக சீனா‌வு‌க்கு எ‌‌திரான ‌திபெ‌த்‌திய‌ர்க‌‌ள் போராட்டம் நடத்துவதை இ‌ந்‌தியா ஏற்றுக்கொ‌ள்ளாது எ‌ன்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

‌சீன வெ‌ளியுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் யா‌ங் ‌ஜீ‌ச்‌சி, பிரணா‌ப் முக‌ர்‌ஜியை தொலைபே‌சி‌யி‌ல் தொட‌ர்பு கொ‌ண்டு நேற்று பேசினார். அப்போது இரு தர‌ப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்ததாகவும், திபெத் பிரச்சனையில் சீன அரசின் நிலை குறித்து யாங் ஜீச்சி பிரணாப்பிடம் விளக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‌திபெ‌த் சுயா‌ட்‌சி பகு‌தி ‌சீன எ‌ல்லை‌க்கு‌ட்ப‌ட்டது எ‌ன்பதால், அப்பிரச்சனை தொடர்பாக ‌திபெ‌த்‌திய‌ர்க‌‌ள் இந்தியாவில் தங்களது எதிர்ப்பை தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரணாப் பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இந்த உரையாடலின் போது, சீனாவிடம் இருந்து திபெ‌த்தை பிரிக்க ‌‌ மத‌த்தலைவ‌ர் தலா‌ய்லாமா ‌மற்றும் அவரது ஆதரவாள‌ர்க‌ள் மேற்கொள்ளும் திட்டங்கள் தோ‌‌‌ல்‌வியடையு‌ம் எ‌ன்று‌ சீன வெளியுறவுத்துறை அமைச்சர், பிரணாப்பிடம் கூ‌றியதாகவும் கூறப்படுகிறது.

நன்றி: எம்.எஸ்.என்

தொடர்புள்ள செய்திகள்:


மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு

April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா, குண்டுவெடிப்பு, கொலை, சட்டம் - நீதி, மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்ததுடன் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஆனால் அவர்கள் திபெத்தியர்களாக இருக்கலாம் என்றும் காவல் துறை கூறியுள்ளது.

சிலிகுரியில் உள்ள குண்டு வெடித்த வீட்டின் உரிமையாளர், தனது வீட்டை திபெத்தியர்கள் கம்யூட்டர் வியாபாரம் செய்வது தொடர்பாக வாடகைக்கு எடுத்திருந்தனர் என்று கூறியுள்ளார். குண்டு வெடிப்புக்குப் பிறகு, சம்மந்தப்பட்ட வீட்டில் இருந்து அதிக அளவிலான வெடிப்பொருட்கள், டிடனேட்டர்கள் மற்றும் நேரத்துக்கு வெடிக்கச் செய்யும் கருவிகளையும் தாம் மீட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | South Asia | Three dead in Indian 'Tibet' bomb: “Siliguri has a high number of Tibetan exiles”

2. Three killed in West Bengal bomb blast | Top News | Reuters