அமெரிக்கா | சற்றுமுன்...




அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அமெரிக்க இந்தியர்கள் தீவிரம்

July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அமெரிக்கா, அரசியல், தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அமெரிக்க இந்தியர்கள் தீவிரம்

வாஷிங்டன், ஜூலை 27: இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஹைட் சட்டத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு இங்குள்ள அமெரிக்கவாழ் இந்தியர்களையே சாரும். தற்போது இந்த 123 ஒப்பந்தம் இரு சபைகளிலும் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் வாஷிங்டனில் திங்கள்கிழமை கூடி விவாதிக்க உள்ளதாக அமெரிக்க-இந்திய கூட்டமைப்பின் தலைவர் அசோக் மாகோ தெரிவித்தார். இந்த அமைப்பு டல்லாûஸ தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை கூட்டம் செப்டம்பர் 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே செனட் கூட்டமும் கூடலாம் என தெரிகிறது.

பொதுவாக பிரதிநிதிகள் சபைக் கூட்டம் அக்டோபர் மாதம் கூடும். ஆனால் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளதால் செப்டம்பரில் கூடுகிறது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாரக் ஒபாமா மற்றும் மெக்கைய்ன் ஆகிய இருவரும் இந்த அணுசக்தி ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் இதை நிறைவேற்றுவதில் எவ்வித சிரமமும் இருக்காது என்று தெரிகிறது.


ஆதரவை வாபஸ் பெற்றது இடதுசாரி …

July 8th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், இந்தியா, சர்ச்சை | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை காரணமாக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக இடதுசாரி இன்று முறைப்படி அறிவித்தது. டெல்லியில் இன்று திரளான செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை அறிவித்த மார்க்சிஸ்த் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை நாளை ஜனாதிபதியை நேரில் சந்தித்து முறைப்படி அளிக்க இருப்பதாகவும், இதற்காக ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜப்பான் செல்லும் வழியில் நேற்று விமானத்தில் பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை இறுதி செய்வதற்காக சர்வதேச அணுசக்தி முகமையை அரசு விரைவில் அணுக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

அவரது இந்த பேட்டி இடதுசாரிகளை மிகுந்த கோபத்திற்குள்ளாக்கியது.அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐமுகூ - இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புகூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என இடதுசாரிகளுக்கு பிரணாப் முகர்ஜி நேற்று கடிதம் அளித்திருந்த நிலையில், பிரதமரின் மேற்கூறிய பேட்டி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை அர்த்தமில்லாமல் ஆக்கிவிட்டதாக கருதியே இடதுசாரிகள் இன்று ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மேற்கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது - மன்மோகன்

இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் தமது அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

   Source: வெள்ளிநிலா நீயுஸ்


அமெரிக்காவில் ஒரே பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 17 மாணவிகள் ஒரே நேரத்தில் கருத்தரித்தது எப்படி?

June 20th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, உலகம், குழந்தைகள், சமூகம், பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அமெரிக்காவின் மஸச்சுஸெட்ஸ் மாநிலத்தில் ஒரே பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 17 பதின்ம வயது மாணவிகள் ஒரே நேரத்தில் ஏன் கர்பிணியானார்கள் என்று அந்த மாநில அதிகாரிகள் புலன் விசாரணை செய்கிறார்கள்.

இந்த எண்ணிக்கை, கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். அத்துடன் இவர்களில் பலர் பல தடவைகள் கர்ப்பத்தை உறுதி செய்வதற்கான சோதனைகளைச் செய்துகொண்டதுடன், தாம் கர்ப்பம் தரிக்கவில்லை என்று அறிந்தவுடன் அதனால் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், இவர்கள் அனைவரும் தாம் ஒரே நேரத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது என்று ஒரு உடன்படிக்கையை செய்துகொண்டிருக்கலாம் என்று சில அதிகாரிகள் நம்புகிறார்கள்.

அத்தோடு, இந்தக் குழந்தைகளுக்கான தகப்பன்மார் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் புலன்விசாரணை செய்கிறார்கள்.

அவர்களில் சிலருக்கு இருபது வயதுக்கும் குறைவு என்று நம்பப்படுவதுடன், சிறுமிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

மேலும் விவரங்களுக்கு:

1. Pregnancy Boom at Gloucester High - TIME

2. Teens had pact to get pregnant, report says - The Boston Globe

3. Teen Pregnancy Pact: Celeb Culture Cited, Psychologist Says It Has Role In Mindset; Teen Mom Advises Other Teens Not To Get Pregnant - CBS News


உட்கட்சித் தேர்தலில் ஒபாமா வெற்றி?

June 3rd, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், தேர்தல் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் 2008 அதிபர் பொதுத்தேர்தல் வேட்பாளருக்கான உட்கட்சி தேர்தலில் பராக் ஒபாமா போதிய பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார் என அசொஷியேட்டட் பிரெஸ் செய்தி ஒன்று கூறுகிறது. இதன் மூலம் அவர் அக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என நம்பப்படுகிறது.

MSNBC-ன் கணிப்பின்படி ஒபாமா உட்கட்சித் தேர்தல் வெற்றியைப் பெற இன்னும் 22 பிரதிநிதிகளின் ஆதரவே தேவை. அது இன்றைய வாக்கெடுப்பிற்குப்பின் அவருக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ஒபாமாவின் போட்டியாளரான ஹில்லரி ராடம் க்ளிண்டன் இன்று துணை அதிபர் பதவிக்கு போட்டியிட தான் விருப்பப்படுவதாக தனக்கு நெருங்கிய வட்டத்திற்கு தெரிவித்துள்ளார். இவர் இன்று மாலை தேர்தல் முடிவுகள் தெரிந்தபின்னர் ஒபாமாவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு போட்டியை முடித்துக்கொள்வாரா இல்லையா என்பது குறித்து இருவித கருத்துக்கள் நிலவுகின்றன. ஹில்லரி தன் பிரச்சாரக் குழுவின் உயர்மட்ட உருப்பினர்கள் பலரையும் இடைநிறுத்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

AP: Obama has delegates to clinch nomination - MSNBC

 


சதாம் ஹுசேன் செலவில் இராக் பயணம் செய்த அமெரிக்க எம்.பி.க்கள்

March 27th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சதாம் ஹுசேன் செலவில் இராக் பயணம் செய்த அமெரிக்க எம்.பி.க்கள்

தூக்கிலிடப்பட்ட  இராக் அதிபர் சதாம் ஹுசேன் ஆட்சிக்காலத்தில் அவரது புலனாய்வுக் குழுவின் செலவில் ரகசியமாக அமெரிக்க எம்.பி.க்கள் மூவர் இராக்கிற்கு பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது.

இராக் மீது அமெரிக்கா தாக்குதலை தொடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் இருந்த போது, இந்த ரகசியப் பயணத்தை எம்.பி.க்கள் மேற்கொண்டதாக மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த எம்.பிக்கள் அனைவரும் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகம் குறித்து சதாம் ஹுசேனிடம் கவலை தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.

இவ்வளவு விவரங்களை தெரிவித்துள்ள வழக்கறிஞர்கள், ரகசியப் பயணம் செய்த அந்த எம்.பி.க்களின் பெயர்களை பகிரங்கப்படுத்த மட்டும் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080327060814&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=0


சரிவில் உலகப் பங்குச் சந்தைகள்: அமெரிக்க வங்கி திவால் எதிரொலி

March 17th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, பங்குச்சந்தை, பொருளாதாரம், விலைவாசி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

அமெரிக்காவின் மிகப் பழமையான வங்கிகளில் ஒன்றான பியர் ஸ்டேர்ன்ஸ் வங்கி, வங்குரோத்து (திவால்) நிலைமைக்கு உள்ளாவதைத் தவிர்ப்பதற்காக, அதனை விற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக வந்த செய்திகளை அடுத்து, உலக பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

நியூயார்க்கில், டோவ் ஜோண்ஸ் சுட்டெண் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஐரோப்பியச் சந்தைகள் சரிவிலிருந்து மீண்டிருந்தாலும், மந்தமாகவே காணப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரம், மிகவும் சவால் நிறைந்த காலப்பகுதியை கடப்பதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள், ஆனாலும் நிலைமை சமாளிக்கக்கூடிய நிலையில்தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், மேலும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என்று உலக வங்கியின் தலைவர் எச்சரித்துள்ளார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. The Associated Press: After Bear Stearns Rescue, Who's Next?

2. AT A GLANCE: JPMorgan Chase To Buy Bear Stearns For $2/Share

3. Timeline of a Crisis - WSJ.com: “key dates from the stock, bond and commodities markets as U.S. investment banks and the Federal Reserve struggled to contain the fallout of the mortgage meltdown.”

4. ‘Fundamentals’ also in jeopardy - livemint: More and more economists are revising their growth forecasts downward. An Indian GDP growth rate of 7% for fiscal 2009 is increasingly becoming the consensus estimate


‘இடதுசாரி ஆதரவு வாபஸ் ஆனாலும் ஐமுகூ அரசு கவிழாது’

March 16th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், இந்தியா, இராணுவம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ஐமுகூ அரசுக்கு எதிராக இடதுசாரிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமா அல்லது பா.ஜனதா நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை ஆதரிக்குமா எனக் கேட்டபோது , அதற்கு நேரடியாக பதிலளிப்பதை பரதன் தவிர்த்துவிட்டார். அதே சமயம் ஐமுகூ அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தால் அவை கலைக்கப்படலாம் என தாம் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் விலக்கிக் கொண்டாலும் மத்திய அரசு கவிழாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி. பரதன் கூறினார். கரண் தாப்பரின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘டெவில்ஸ் அட்வகேட்’ எனும் நிகழ்ச்சியில் அவர் கூறியது:

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுமா? அல்லது அத்தகைய தீர்மானத்தை பாஜக கொண்டுவந்தால் அதை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்குமா என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது. அத்தகைய சூழல் ஏற்படும்போதுதான் இதுபற்றிக் கூறமுடியும். ஆனால் அவ்வாறு நடக்கும் என்று தோன்றவில்லை. ஒருவேளை அரசு பெரும்பான்மையை இழக்கும்பட்சத்தில் மக்களவையைக் கலைத்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

மக்களவையைக் கலைத்துவிட்டு காபந்து அரசாக நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இத்தகைய ஆலோசனையைத்தான் அமெரிக்க அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சரும் (Richard Boucher) அளித்திருப்பார் என்று தெரிகிறது. ஆனால் அதேசமயம், மைனாரிட்டி அரசாக இருந்துகொண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வி. மத்திய அரசு அவ்விதம் செய்தால், அது நம்பகத்தன்மை மட்டுமின்றி, மக்களிடையே பண்பு, நல் அபிப்ராயம் ஆகியவற்றையும் இழந்துவிடும்.

இதுபோன்ற சர்வதேச ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால், இந்தியாவை பிற நாடுகள் முட்டாள்களாகப் பார்க்கமாட்டார்களா என்கிறீர்கள். இங்குள்ள ஜனநாயக அமைப்பு பிற நாடுகளுக்குப் புரியும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாதங்களை அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். இதுதான் கூட்டணி தர்மமும் ஆகும். அணுசக்தி எரிபொருள் வழங்கும் நாடுகளிடமிருந்து விலக்கு அளித்தால் இந்த ஒப்பந்தத்திற்கு கம்யூனிஸ்ட்டுகள் சம்மதிப்பார்களா என்கிறீர்கள். முதலில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகுதான் சலுகை என்பது அமெரிக்காவின் நிபந்தனையாகும்.

இந்த விஷயத்தில் பிரான்சும், ரஷியாவும் பேச்சு நடத்தி வருகின்றன. அந்நாடுகள் ‘ஹைட் சட்டம்’ எதையும் நம்மீது திணிக்கவில்லை. அமெரிக்காவைத் தவிர்த்து பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தால் எவ்வித தளர்வும் அளிக்கப்படமாட்டாது என்று அமெரிக்க செனட்டர்கள் தெளிவுபடுத்திவிட்டனர். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பிரதானமாகக் கருதுகிறது. இந்த ஒப்பந்த விவகாரத்தில் முன்னேற்றம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் சர்வதேச அணுசக்தி கமிஷனுடன் (ஐஏஇஏ) என்ன பேச்சு நடத்தினார்கள் என்பது தெரியவில்லை.

ஐஏஇஏ-வுடனோ அல்லது இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான வரையறை குறித்தோ கம்யூனிஸ்ட்டுகள் பிரச்னை எழுப்பவில்லை. எப்படியிருப்பினும் அணுசக்தி நமக்குத் தேவைதான். ஆனால் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளைத்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்க்கின்றன. அணுசக்தி எரிபொருள் வழங்கும் நாடுகள் எத்தகைய தளர்வையும் அமெரிக்கா அனுமதிக்காமல் அளிக்க முன்வராது என்பதையும் மறந்துவிடக்கூடாது.

அணுசக்தி எரிபொருள் வழங்கும் நாடுகளை அணுகி இந்தியா எரிபொருளைப் பெறலாம் என்றும் 1,2,3 ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்றால் அதை ஏற்பீர்களா என்கிறீர்கள், அதை அறிக்கையாக அரசு அளிக்கட்டும். “ஹைடு’ சட்டத்தை இந்தியா ஏற்கவில்லை என அறிவிக்கப்படும், அதை யுஎஸ் ஏற்குமா என்று பார்ப்போம். அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஆவது குறித்து அமெரிக்க அமைச்சர்கள் கவலை தெரிவித்தது குறித்து பிரதமருக்கு கடிதம் மூலம் கட்சியின் எதிர்ப்பை தெரிவித்திருந்தேன்.

நாடாளுமன்றத்தில் பாஜக தலைவர் வாஜ்பாயை, ‘பீஷ்ம பிதாமகன்’ என வர்ணித்ததன் மூலம், பாஜக ஆதரவோடு இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் மன்மோகன் சிங் முயல்கிறார். ஆனால் அரங்கு நிறைந்த சபையில் பீஷ்மரின் முன்னிலையில்தான் திரெüபதியின் சேலையை துரியோதனன் கலைந்தான் என்பதையும் பிரதமருக்குச் சுட்டிக்காட்டினேன் என்றார் பரதன்.

நன்றி: யாஹு | தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. 48 hrs before talks, Left goes soft on N-deal

2. UPA govt would not fall if Left withdraws support: CPI- Hindustan Times

3. Tehelka:: The Dilemmas Of Power-Play: “Both the Congress and the Left have to be careful of unwittingly helping the BJP”


சி.ஐ.ஏ.வின் சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளைத் தடுக்கும் சட்டம் அமலுக்கு வருவதை அதிபர் புஷ் தடுத்துள்ளார்

March 9th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், உலகம், கைது, சட்டம் - நீதி, தீவிரவாதம், போராட்டம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அமெரிக்காவின் மத்திய உளவுத் துறையான சி.ஐ.ஏ. பயன்படுத்திவரும் கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளைத் தடைசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை தனது வெட்டு வாக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுதிவிட்டதை அதிபர் புஷ் உறுதிசெய்துள்ளார்.

சி.ஐ.ஏ.வின் இந்த விசாரணை முறைகளால்தான் அமெரிக்கா மீது மறுபடியும் மறுபடியும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடப்பது தடுக்கப்படிருக்கிறது, இந்த சட்டம் தெரிவிக்கும் மாற்றங்கள் அமலுக்கு வந்தால் அது அமெரிக்க மக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கலாம் என்று அதிபர் புஷ் கூறியுள்ளார்.

விசாரிக்கப்படும் நபருக்குக்கு தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறுவது போன்ற உணர்வைத் தரும் வாட்டர்போர்டிங் என்ற விசாரணை உத்திக்கும் இந்த சட்ட மசோதா தடை விதித்திருக்கக் கூடும். இந்த விசாரணை உத்தியை சித்ரவதை என்று கூறி மனித உரிமை குழுக்கள் கண்டித்திருந்தனர்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Bush’s Veto of Bill on C.I.A. Tactics Affirms His Legacy - New York Times: “President Bush shut down a Congressional effort to limit harsh interrogation techniques, cementing a legacy of fighting for strong executive powers.”

2. The Associated Press: Bush Explains Veto of Waterboarding Bill

3. A tortuous dilemma for McCain


அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை

March 5th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, இந்தியா, கல்வி, மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் இவ்வாறு இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்படுவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறீநிவாஸ் என்ற மாணவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததாக இவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அவரது குடும்பத்தினர் அரசின் உதவியை நாடியுள்ளனர். மேலும் இந்த கொலை தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: விடுதலை


உலக செய்திகள்: கொலம்பியா, அர்மீனியா

March 3rd, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், ஆசியா, இராணுவம், உலகம், கிளர்ச்சி, சட்டம் - நீதி, தீவிரவாதம், தேர்தல், தேர்தல்முடிவு, போராட்டம், மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

1. BBC NEWS | South Asia | S Lanka finds boat migrants dead: இலங்கையின் திருகோணமலை அருகே திசை தவறிய படகில், உணவு மற்றும் தண்ணீர் இல்லாதபடியால் இருபது பேர் மரணமடைந்துள்ளார்கள். பர்மாவிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் அகதிகளாய் கிளம்பி வாய்ப்புகளைத் தேடி தாய்லாந்து மற்றும் மலேஷியாவை நோக்கி செல்ல ஆரம்பத்த படகில் இருந்தவர்களில் 71 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

2. Chavez warns of war with Colombia - Yahoo! News: கொலம்பியா நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகே வெனிசுவேலா இராணுவமும் ஈக்வடார் நாட்டின் படைகளும் அணிவகுத்திருக்கின்றன. அமெரிக்காவின் ஆணைக்குட்பட்டு ஈகுவடருக்குள் அத்துமீறி நுழைந்து ஈக்வடரின் போராளியை (Revolutionary Armed Forces of Colombia - FARC) கொலம்பியா கொன்றதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Photobucket3. Emergency Order Empties Armenian Capital’s Streets - New York Times: அர்மீனியாவில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி கிளர்ச்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவசர நிலை பிரகடனமானது. இதன் விளைவாக நடந்த போராட்டங்களில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். ருஷியாவின் முன்னாள் அங்கத்தினரான் ஜார்ஜியா போன்ற நாடுகளிலும் இது போன்ற போராட்டங்கள் ஆட்சி மாற்றத்தை விளைவித்தது குறிப்பிடத்தக்கது.


குவாட்டமாலா பஸ் விபத்தில் 54 பேர் பலி

March 3rd, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, மரணம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Guatemala align='left' மத்திய அமெரிக்காவில் உள்ள குவாட்டமாலா நாட்டில், பயணிகள் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் தலைநகரான குவாட்டமாலா சிட்டியில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள குயிலாபா என்ற இடத்தில் இவ்விபத்து நேற்று நடந்துள்ளது. மொத்தம் 40 பயணிகள் மட்டுமே ஏற்றிச் செல்லக் கூடிய பேருந்தில், 65க்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்றதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கால்வாயில் கவிழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முழுவதும் வாசிக்க: எம்.எஸ்.என்.

மேலும் விவரங்களுக்கு: Guatemala bus crash death toll rises to 54 | Reuters


அமெரிக்காவில் ஐசிஐசிஐ வங்கியின் முதல் கிளை

March 2nd, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, இந்தியா, பொருளாதாரம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி அமெரிக்காவில் தனது முதல் கிளையை துவக்கியுள்ளது. நியூயார்க்கில் உள்ள மிட்டவுன் பகுதியில் இந்த கிளை அமைந்துள்ளது.

ஆரம்ப நிலையில் இந்த வங்கி, தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் வங்கிச் சேவை அளிக்கும். பின்னர் இதர வங்கிப் பணிகளிலும் ஈடுபடும் என்று வங்கியின் செயல் இயக்குநர் சஞ்சய் சாட்டர்ஜி தெரிவித்தார். தற்போது எச்1பி விசா பெற்று அமெரிக்கா வரும் இந்தியர்களுக்கு கிரெடிட் கார்டு, காசோலை வழங்குவது உள்ளிட்ட வசதிகளைச் செய்து தர அனுமதிக்கப்பட்டுள்ளது. பிற விசாவில் வரும் இந்தியர்களுக்கு இந்த வசதி செய்து தர அனுமதிக்கப்படவில்லை என்றார் சாட்டர்ஜி.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு: ICICI Bank opens first US branch- Hindustan Times