நதிநீர் பிரச்சினை | சற்றுமுன்...




ஓகனெக்கல் குடிநீர் திட்டம் நிறுத்தி வைப்பு : தமிழக முதல்வர்

April 5th, 2008 பகுப்புகள்: கிளர்ச்சி, தமிழக அரசியல், நதிநீர் பிரச்சினை | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

kalainjar mu.karuNanithi

காவிரி நீரை தடுத்து தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 1340 கோடி செலவில் திட்டமிடப்பட்ட ஓகனெக்கல் குடிநீர் திட்டத்தை கர்நாடகாவில் எழுந்த எதிர்ப்பின் பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும்வரை நிறுத்தி வைப்பதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று கூறினார்.

Hogenakkal water project on hold

Karunanidhi puts Hogenakkal project on hold


தட்ஸ்தமிழ் தளத்திலிருந்து அவரது முழு அறிக்கை:
ஓகேனக்கல்லிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் வாழும் முப்பது லட்சம் தமிழர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடி தண்ணீர் வழங்க ரூ. 1,334 கோடி ஜப்பான் நாட்டு வங்கியின் நிதி உதவி பெற்று- முறைப்படி பெற வேண்டிய தடையிலா சான்றுகள், அனுமதிகளையெல்லாம் படிப்படியாகப் பெற்று- திட்டத்தை நிறைவேற்ற பணிகளை மேற்கொண்ட நிலையில்;

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு; அந்த மாநிலத்து பா.ஜ.க. போன்ற சில கட்சிகளும் -எப்போதுமே தமிழ், தமிழர் நலன்களுக்கு விரோதமாகச் செயல்படும் சமூக விரோதிகளும் ஓகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு என்று குரல் எழுப்பி அதையொட்டி வன்முறைச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்கினர்.

இதை நான் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டி, மத்திய அரசுக்கு தெரிவித்தது மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்சிகளும், அரசும், இத்திட்டம் நிறைவேறுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தது பயனில்லாமல் போய், கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்கும் அளவுக்கு போய்,

வாகனங்கள்-உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கின்ற அளவுக்கும் வன்முறைச் சேட்டைகளைத் தொடரத் தொடங்கியதால்- அதன் எதிரொலியாக தமிழகத்திலும் எதிர்ப்பு நிலை தவிர்க்க முடியாததாகி சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.

இரு மாநில மக்களும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டுமென்று நான் பல காலமாகத் தொடர்ந்து கூறி வருகிற வேண்டுகோள் புறக்கணிக்கப்படுகிறதே என்ற எனது வேதனைக்கு மருந்தாக இங்குள்ள கட்சிகள் பலவும், கட்சித் தலைவர்களும், தமிழ்த் திரை உலகத்துக் கலைஞர் பெரு மக்களும் அணி திரண்டு,

அமைதியான முறையில் அறவழியில் ஒரு பிரமாண்டமான உண்ணா நோன்பை மேற்கொண்டு நமது அரசும் மக்களும் எடுத்துரைக்கும் நியாயத்தை இந்தியா முழுக்க சுட்டிக் காட்டினர்.

இந்தத் தமிழ் உணர்வை போற்றுவதுடன் இதயமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எழுந்துள்ள கோபமும் கொந்தளிப்பும் மேலும் தொடர்ந்து- சகோதர மாநிலங்களான தமிழகம் கர்நாடகத்திற்கிடையே நிரந்தரப் பகை மூள்வதை இந்திய ஒருமைப்பாட்டிலும் இறையாண்மையிலும், ஒற்றுமையிலும் நம்பிக்கையுள்ள யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாது.

கர்நாடகத்தில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த விரும்பத்தகாத வன்முறைகள் தொடரக் கூடாது.

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்- இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருப்பதற்கு நாம் தான் நம்மை முன்னிருத்தி அமைதி அணி வகுப்பை நடத்திட வேண்டும்.

கர்நாடகத்தில் இன்று நடந்திடும் கவர்னர் ஆட்சி முடிவுற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலருவதற்கு இடையேயுள்ள சில நாட்கள் மட்டுமே அவசியம் கருதி பொறுத்திருப்போம்.

அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு; அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்றும்-1998ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இத்திட்டம் நடக்குமென்றும்- நடப்பதற்கு வலியுறுத்துவோம் என்றும்- அதற்கு நியாயம் கிடைக்குமென்றும் அசையாத நம்பிக்கையோடு, இப்போது தற்காலிகமாக இந்தப் பிரச்சினையில் அமைதி காப்போம்.

அதன் பிறகும் இதே நிலை நீடிக்குமென்றால்; தமிழர்கள் தங்கள் உடைமைகளையும், உயிர்களையும் இழந்தாலும் கூட, உரிமைகளையும் இழந்திட முன் வரும் சுயமரியாதை அற்றவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்துவோம்.

அந்த தன்மானக் கூட்டத்தின் ஒரு குரலாக இப்போது என் குரலை உயர்த்தி; இது வரை நடந்தது இனியும் தொடராமல் இன்றுடன் நிறுத்தி; பொறுத்திருந்து- கர்நாடகத்தில் வரவிருக்கின்ற புதிய ஆட்சியாளரின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

“குடிக்கத் தண்ணீர் கூடக் கொடுக்க மாட்டோம்” என்று கூறப் போகிற ஆட்சியா கர்நாடகத்தில் வந்து விடப் போகிறது?. பயிர் வாழத் தான் தண்ணீர் இல்லை என்றார்கள் -உயிர் வாழ வரும் தண்ணீரையுமா தடுப்பார்கள்?. நியாயம் வெல்லும். நிச்சயம் வெல்லும்.

இடையில் உரிமைக்காக தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையை உலகிற்கே நிலை நாட்டிக் காட்டிய திரையுலக கலைஞர் பெருமக்கள், கட்சித் தலைவர்கள், பல்வேறு துறையில் பாடுபடும் பெருமக்கள் அனைவருக்கும்- அவர்தம் நல் உள்ளத்துக்கும் ஊக்கமளிக்கும் வகையில் என்றும் மறவாத நன்றியையும், மனந்திறந்த பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவைப்பட்டால் களம் காண்போம்:

கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும்- பின்னர் நாம் கலந்து பேசி; தேவைப்பட்டால் களம் காண்போம்- அதற்குத் தேவையில்லாமலே போய், தேசத்தின் ஒற்றுமை காக்கப்படும் என்று நம்புவோம்.


ஓகனேக்கல்: சென்னையிலும் பெங்களூருவிலும் திரைக்கலைஞர்கள் உண்ணாவிரதம்

April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், திரையுலகம், நதிநீர் பிரச்சினை, போராட்டம் | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

ஓகனேக்கல் குடிநீர் திட்டத்தை எதிர்த்து நிகழும் வன்முறைகளை கண்டித்து தமிழக திரையுலகினர் இன்று சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாநோன்பு இருக்கின்றனர். ரஜினி,கமல் தங்கள் வெளிப்புற படமெடுப்பு ஊர்களிலிருந்து திரும்பிவந்து இன்று கலந்து கொண்டனர். கருப்புத் தொப்பி அணிந்து வித்தியாசமாக வந்த ரஜினி மேடையில் ஏறியவுடன் அங்கு கூடியிருந்தவர்களை தலைக்கு மேல் கையை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டார்.

பின்னர் தொப்பியைக் கழற்றிவிட்டு கூட்டத்தை நோக்கி கையை அசைத்தார். அவரை சரத்குமார், ராம.நாராயணன் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றனர்.சரத்குமாருக்கும், மனோரமாவுக்கும் இடையில் அமர்ந்தபடி உண்ணாவிரதத்தில் பங்கேற்றார் ரஜினிகாந்த்.

பகல் 2.30 மணிக்கு நடிகர் கமல்ஹாசனும் உண்ணாவிரத மேடைக்கு வருகை தந்தார். அவரை ரஜினி, சரத்குமார், ராமநாராயணன் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

மர்மயோகி படப் பிடிப்பு தொடர்பாக அமெரிக்கா சென்றிருந்த கமல், உண்ணாவிரதத்தில் பங்கேற்பற்காக அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓகேனக்கல் விவகாரத்தில், தமிழ் திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போட்டியாக கன்னட நடிகர்களும் பெங்களூரில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஆனால், அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன், சரோஜாதேவி ஆகிய கன்னட திரையுலக ஜாம்பவான்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

பெங்களூர் டவுன் ஹாலில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த தர்ணாவில் நடிகர்கள் உபேந்திரா, புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், ரவிச்சந்திரன், திரில்லர் மஞ்சு, ஸ்ரீநாத், ஜக்கேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நடிகைகள் ரம்யா, அனு பிரபாகர், தாரா, ஜெயமாலா ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய சுட்டிகள்:

கருப்புத் தொப்பியுடன் ரஜினி: கமலும் பங்கேற்பு

ஓகனேக்கல் நமது மரபுரிமை-வைரமுத்து

என் சோறு தமிழகத்தில்தான்-அர்ஜூன்

திரையுலகின் உண்ணாவிரதத்திற்கு தமிழக சட்டசபையில் வாழ்த்து

கன்னட நடிகர்கள் தர்ணா-சரோஜா தேவி, அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன் பங்கேற்கவில்லை

‘குத்து’ ரம்யா பெங்களூரில் உண்ணாவிரதம்!

Hogenakkal: Kannada stars hold protest


பா.ஜ.க., தேசிய செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி

April 2nd, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, தமிழக அரசியல், நதிநீர் பிரச்சினை, மத்திய அரசியல் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!காவிரிப் பிரச்னையில் கர்நாடக காங்கிரசார் அணுகுவதைப் போலவே ஒகேனக்கல்லில் கர்நாடக பாரதிய ஜனதாவினர் நடந்து கொண்டுள்ளனர். அவரவர் மாநிலத்துக்கு அங்குள்ள கட்சியினர் முக்கியத்துவம் தருவதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

நன்றி: தினமலர்


கருணாநிதி சோனியா சந்திப்பு

December 20th, 2007 பகுப்புகள்: அரசியல், இந்தியா, தமிழக அரசியல், நதிநீர் பிரச்சினை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

BBCநான்கு நாள் பயணமாக புதுடெல்லி வந்துள்ள தமிழக முதல்வர் மு. கருணாநிதி, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை வியாழக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சோனியா காந்தியுடன் நடந்த சந்திப்புக் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கிய கருணாநிதி, தமிழ்நாட்டில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட பாதிப்புக் குறித்தும், மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினை குறித்தும் பேசியதாகத் தெரிவித்தார்.

உள்நாட்டுப் பாதுகாப்புத் தொடர்பாக, இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். தனது சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.

தீவிரவாதத்தை ஒடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவருவது குறித்து அந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரள முதல்வருடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாத போதிலும், அதை முன்னேற்றமாகவே தான் கருதுவதாக கருணாநிதி கருத்துத் தெரிவித்தார்.

இதனிடையே, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் ஆகியோர் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசினார்கள்.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu News Update Service: “Mullaperiyar talks a forward movement: Karunanidhi”

2. The Hindu : Front Page : No breakthrough in Mullaperiyar talks

3. The Hindu : Front Page : Karunanidhi seeks Sonia’s help to set up 500-MW plant


கடல் நீரிலிருந்து தயாரித்த குடிநீர்: சென்னைக்கு 2008 முதல் தினமும் விநியோகம்

October 18th, 2007 பகுப்புகள்: சென்னை, நதிநீர் பிரச்சினை, வணிகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

கடல்நீரிலிருந்து தயாரிக்கப்பட்ட குடிநீரை சென்னைக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் என்ற அளவில் 2008-லிருந்து விநியோகிக்க சென்னைக் குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சென்னையை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளி கிராமத்தில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் மற்றும் குடிநீரை எடுத்துச் செல்லும் நீர் உந்து குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை அமைச்சர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். சுமார் 40 சதவீத அளவுக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. மொத்தப் பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்தகாரர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

சென்னை வாட்டர் டீசாலினேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் “மொத்தக் குடிநீர் கொள்முதல்” என்னும் ஒப்பந்தத்தை சென்னைக் குடிநீர் வாரியம் 2005-ல் செய்து கொண்டது. இதன்படி இந்நிறுவனம் செயலாக்க நாளில் இருந்து 12 மாதங்களில் அதாவது 2008 மே 15-லிருந்து 15 மில்லியன் லிட்டர் தரமான நீரை நிலையத்திலிருந்து வழங்கவேண்டும் மற்றும் 15 மாதங்களில் அதாவது 2008 ஆகஸ்ட் 15 முதல் 100 மில்லியன் லிட்டர் தரமான நீரை வழங்க வேண்டும்.

கடல்நீரிலிருந்து தயாரிக்கப்பட்ட குடிநீரை சென்னை நகர விநியோகத்துக்கு கொண்டுச் செல்ல தேவைப்படும் உந்து குழாய் கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.93 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆய்வின் போது நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கே. தீனபந்து, சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் சிவ்தாஸ் மீனா, பொறியியல் இயக்குநர் து. மாதவ மூர்த்தி, சென்னை வாட்டர் டீசாலினேஷன் நிறுவன நிர்வாகி பெரிராஜூ, பிபஸô நிறுவன நிர்வாகி ஜம்னேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:
1. The Hindu : Tamil Nadu / Chennai News : Desalination plant first phase to be over by May

2. The Hindu : Business : UAE firm keen to enter India

3. PE firm in first foreign deal


பாலாற்றில் அணை கட்ட ஆந்திர அரசு தீவிரம்.

July 28th, 2007 பகுப்புகள்: இந்தியா, நதிநீர் பிரச்சினை | தொகுப்பாளர்: வாசகன் | மறுமொழிகள் இல்லை » |

ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த அணை கட்டினால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்பட 5 மாவட்டங்கள் வறண்டு விடும் அபாயம் உள்ளது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். இந்த அணை கட்டுவதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பா.ம.க. சார்பில் அணை கட்டும் பகுதிக்கு சென்று போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனாலும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் ஆந்திர அரசு தீவிரமாக உள்ளது. அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி, பொதுப்பணித்துறை மந்திரி, நீர்ப்பாசனத்துறை மந்திரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், குப்பம் பகுதியில் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல தனிபாதை ஒன்றும் வேகமாக அமைக்கப்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர ஆந்திர- தமிழக எல்லைப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்டும் பகுதிக்குள் அத்துமீறி நுழை பவர்களை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலைமலர்


ஆகஸ்ட் 3 முதல் சென்னைக்கு கிருஷ்ணா நீர்

July 28th, 2007 பகுப்புகள்: சென்னை, நதிநீர் பிரச்சினை | தொகுப்பாளர்: வாசகன் | மறுமொழிகள் இல்லை » |

கருணாநிதி கோரிக்கை ஏற்பு

தமிழக முதலமைச்சர் கருணாநிதி சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைக்காக, கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து ஆகஸ்டு முதல் வாரத்தில் தண்ணீரைத் திறந்து விட அறிவுரைகள் வழங்குமாறு ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டிக்கு 20.7.2007 அன்று கடிதம் எழுதி இருந்தார்.

முதல்-அமைச்சர் கருணா நிதியின் கோரிக்கையை உடனடியாக ஏற்று ஆந்திர மாநில முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சென்னை மாநகரின் குடிநீர்த்தேவையை நிறைவு செய்வதற்காகக் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து 3.8.2007 முதல் தண்ணீர் திறந்து விடுவதற்குத் தெலுங்கு கங்கைத் திட்டத்தின் தலைமைப் பொறியாளருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாலைமலர்


கேரளம் புதிய அணை கட்ட திமுக மறைமுக உதவி: நெடுமாறன் புகார்

July 21st, 2007 பகுப்புகள்: அரசியல், தமிழ்நாடு, நதிநீர் பிரச்சினை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

பெரியாறு அணையின் நீர்த்தேக்கும் அளவை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி உயர்த்த தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில், கேரள அரசு புதிய அணைக் கட்டும் முயற்சிக்கு ஆளும் கட்சியான திமுக மறைமுக உதவிகளைச் செய்து வருகிறது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டினார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:

பெரியாறு அணையில் நீர்த்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், அதை அமல்படுத்துவதற்கான நடிவடிக்கைகளில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கேரள அரசு பெரியாறு அணை அருகே புதிய அணைக் கட்டும் முயற்சிக்கு தமிழக ஆளும் கட்சியினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

புதிய அணைக் கட்டுவதற்குத் தேவையான மணல் தேனி மாவட்டத்தில் வைகை ஆற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. தினமும் 200 லாரி மணல் பெரியாறு அணைப்பகுதிக்கு கேரள அரசால் கொண்டு செல்லப்பட்டு அங்கு குவிக்கப்படுகிறது.

வைகை ஆற்றில் மணல் எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தபோதிலும், மணல் எடுத்து கேரளத்துக்கு கொண்டு செல்வது நிறுத்தப்படவில்லை. மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி, ஆக. 2-ம் தேதி பல்வேறு கட்சியினர் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படவுள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் 135 அடியாக உள்ளது. 136 அடியை விரைவில் எட்டவுள்ளது. இந் நிலையில், 27.2.2006-ம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு நீர்த்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த வேண்டும். அதற்கு ஏற்றவகையில் மதகுகளை இறக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகள் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மூலம் அங்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. எனவே, ஆக. 4-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டில் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.

தினமணி


காவிரி வழக்கு: தண்ணீராகப் பாய்ந்த பணம்

July 18th, 2007 பகுப்புகள்: அரசியல், தமிழ்நாடு, நதிநீர் பிரச்சினை | தொகுப்பாளர்: வாசகன் | மறுமொழிகள் இல்லை » |

கடந்த 17 ஆண்டுகளாக தமிழகத்துக்கும், கர்நாடகத்திற்கும் இடையே நடுவர் மன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நடந்து வருகிற காவிரி நதிநீர்ப் பிரச்சனை வழக்கு செலவு விபரம் பற்றி இப்பதிவு.

இதுவரை காவிரி வழக்கு விசாரணைக்காக தமிழக அரசு செலவிட்ட தொகை குறித்த விவரத்தை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்டு டி.டி. நாயுடு என்பவர் வெளியிட்டுள்ளார்.

1990ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை காவிரி நதிநீர் வழக்குக்காக,
விடுதிகளில் தங்கி ஆலோசனை நடத்த செலவிடப்பட்ட தொகை ரூ. 2.39 கோடியாகவும் வழக்கறிஞர்களுக்கு இதுவரை ரூ. 22.69 கோடியும், ஆக 25.08 கோடி செலவிடப்பட்டுள்ளது. .

இதுவரை காவிரி வழக்கு தொடர்பாக செலவிடப்பட்ட தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ள
நாயுடு மேலும் கூறுகையில்,

வக்கீல்களுக்காக தமிழக அரசு செலவிட்டுள்ள தொகையும், அவர்களின் விடுதி செலவுகளையும் பார்த்தால் பொதுப்பணித்துறையின் பட்ஜெட்டுக்கு இணையாக உள்ளது.

மொத்தமாக கூட்டிப் பார்த்தால் ரூ. 25 கோடிக்கும் மேல் தமிழக அரசு இதுவரை செலவிட்டுள்ளது. இது மிகவும் அநியாயமானதாகும். ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும்போதும் பொதுப்பணித்துறையிலிருந்து 10 பேர் டெல்லி செல்கிறார்கள்.

இவர்களுக்கான செலவுத் தொகை இந்த கணக்கில் வரவில்லை. உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றங்களிலும் தமிழக அரசுக்காக வாதாடும் வக்கீல்களுக்கு தினசரி ரூ. 1,000 மட்டுமே வழங்கப்படும்போது காவிரி வழக்குக்கான வக்கீல்களுக்கு மட்டும் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டது ஏன் என்பதை அரசு விளக்க வேண்டும்.

காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் வறட்சியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு வக்கீல்களுக்காக மட்டும் இவ்வளவு பெரிய தொகைய செலவிட்டிருப்பது வருத்தமாக உள்ளது.

காவிரி வழக்கில் வாதாடிய வக்கீல்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் சி.எஸ்.வைத்தியநாதன்தான். இவருக்கு மட்டும் ரூ. 6.07 கோடி தரப்பட்டுள்ளது.

ஏ.கே.கங்குலிக்கு ரூ. 4.08 கோடி, சி.பரமசிவத்திற்கு ரூ. 2.64 கோடி, ஜி.உமாபதிக்கு ரூ. 2.54 கோடி, கிருஷ்ணமூர்த்திக்கு ரூ. 1.39 கோடி, முத்துக்குமாரசாமிக்கு ரூ. 1.03 கோடி, பராசரனுக்கு ரூ. 91.69 லட்சம் சம்பளமாக தரப்பட்டுள்ளது

இவ்வளவு பணத்தை தண்ணீராக செலவழித்தும் காவிரிப் பிரச்சினை இன்னும் தீரவில்லை. கர்நாடகத்திலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைப் பெற முடியாமல் தமிழகம் தவிக்கும் அவல நிலை தொடருகிறது.

இந்த அநியாய நிலை குறித்து விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்


கனடா உரிமை பாராட்டும் கடற்பகுதி

July 10th, 2007 பகுப்புகள்: அமெரிக்கா, நதிநீர் பிரச்சினை, வணிகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

கனடாவிற்கு அருகே வடமேற்கு பாதை என்று விபரிக்கப்படும் வடதுருவ கடற்பகுதி கனடாவிற்கே சொந்தமானது என்று உரிமை பாராட்டும் ஒரு முயற்சியாக, ஆழ்கடற்துறை ஒன்றை தாம் அமைக்கப் போவதாக கனடிய அரசு திட்டங்களை வெளியிட்டுள்ளது.

ஆனால் அமெரிக்கா உட்பட வேறு பல நாடுகள் இந்தக் கடற்பகுதி அனைத்துலக கடற்பகுதி என்று அறிவித்துள்ளன. எவ்வாறாயினும் கனடாவின் பிரதம் ஸ்டீஃபன் ஹார்பர் தமது நாட்டின் தேசியப் பிராந்தியத்தை கனடா பாதுகாக்கும் என்றும் இதனை கண்காணிக்க பனிக்கட்டிகளைத் தகர்த்து பயணம் செய்யும் எட்டுக் கப்பல்களை தாம் வாங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகில் இன்ன்மும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் எரிவாயு மற்றும் எண்னை அளவில் காற்பங்கு இந்த ஆர்க்டிக் வடதுருவப் பகுதியில் இருக்கக் கூடும் என்று அமெரிக்க நிலவியில் மதிப்பீடுகள் காட்டுகின்றன.

- BBC Tamil

BBC NEWS | Americas | Canada ‘to reclaim Arctic waters’
Canada to Patrol Arctic Ocean to Press Claim of Sovereignty - New York Times


பிரேசில் நாட்டில் கட்டப்படவுள்ள நீர்மின்நிலையங்கள் தொடர்பாக சர்ச்சை

July 10th, 2007 பகுப்புகள்: உலகம், சர்ச்சை, சுற்றுச்சூழல், நதிநீர் பிரச்சினை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

பிரேசில் நாட்டு அரசாங்கம் அங்கு அமேசான் நதியின் நீளமான கிளை நதி மீது இரண்டு நீர்மின் நிலையங்களை அமைப்பதற்கான அடிப்படை ஒப்புதலை வழங்கியுள்ளது.

மடேரியா ஆற்றுத் திட்டம் என அழைக்கப்படும் இந்தத் திட்டமானது பிரேசிலில், அரசுக்குள்ளேயே கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே பெரிய அளவில் உணர்வுபூர்வமான ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நதியில் பெருமளவிலான உலகின் பல பரந்துபட்ட மீனினிங்கள் வாழ்ந்து வருகின்றன. பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவில் கட்டப்படவுள்ள இந்த நீர்மின் நிலையங்களானது, இந்த மீனினங்களை அழித்துவிடும் அபாயம் உள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள்.

இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக, பிரேசில் நாட்டின் சுற்றுச் சூழல் அமைப்பான இபாமா, இந்த திட்டத்திற்கு அடிப்படை அனுமதியளிப்பதற்கான முடிவடுக்க இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அதிலும் 33 வகையான கட்டுப்பாடுகளுடனேயே இந்த பூர்வாங்க அனுமதியை இபாமா வழங்கியுள்ளது.

அடிப்படை அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், மேற்கொண்டு பணிகளை தொடங்க இறுதி அனுமதி தேவைப்படும். இந்த திட்டமானது வளர்ச்சியா அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பா என்பது குறித்து பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் அரசிற்குள்ளேயும் வெளியேயும் இந்த திட்டம் ஏற்படுத்தியுள்ள ஆர்வம் மற்றும் பரபரப்பானது, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் அபிலாஷைகளுக்கும், அது போன்ற நாடுகளுக்கு, சுற்றுச் சூழலைக் காக்க இருக்கும் கடமைக்கும் இடையேயான விவாதம், மற்றும் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் வளர்ச்சியை எவ்வாறு மேற்கொள்வது, இந்த இரண்டிற்கும் இடையே எவ்வாறு ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பன குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

- BBC Tamil

Brazil gives preliminary OK to Amazon dams criticized by environmentalists - International Herald Tribune
BBC NEWS | Americas | Brazil gives Amazon dams go-ahead


மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

July 7th, 2007 பகுப்புகள்: தமிழ்நாடு, நதிநீர் பிரச்சினை | தொகுப்பாளர்: மணியன் |