இந்தியா | சற்றுமுன்...




மன்மோகன் அரசு தப்பியது ஆதரவு - 275 எதிர்ப்பு - 256

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், அரசியல், இந்தியா, தகவல், தேர்தல், தேர்தல்முடிவு, நாடாளுமன்றம், மத்திய அரசியல், வரலாறு | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

மத்திய அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரி இருந்ததை அறிந்திருப்பீர்கள் இவ்வாக்கெடுப்பில் காங்கரசுக்கு ஆதரவாக 256 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் மின்னனு இயந்திரம் மூலம் பதிவானதை அடுத்து மன்மோகன் அரசு தனது ஆட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தங்களது வாக்குகள் பதிவாக வில்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததால் பின்னர் வாக்கு சீட்டு அளித்து வாக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து இப்போது ஆதரவு 275 எனவும் எதிர்ப்பு 256 என அறிவித்து  காங்கிரசு அரசு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.


ஆதரவை வாபஸ் பெற்றது இடதுசாரி …

July 8th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், இந்தியா, சர்ச்சை | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை காரணமாக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக இடதுசாரி இன்று முறைப்படி அறிவித்தது. டெல்லியில் இன்று திரளான செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை அறிவித்த மார்க்சிஸ்த் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை நாளை ஜனாதிபதியை நேரில் சந்தித்து முறைப்படி அளிக்க இருப்பதாகவும், இதற்காக ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜப்பான் செல்லும் வழியில் நேற்று விமானத்தில் பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை இறுதி செய்வதற்காக சர்வதேச அணுசக்தி முகமையை அரசு விரைவில் அணுக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

அவரது இந்த பேட்டி இடதுசாரிகளை மிகுந்த கோபத்திற்குள்ளாக்கியது.அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐமுகூ - இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புகூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என இடதுசாரிகளுக்கு பிரணாப் முகர்ஜி நேற்று கடிதம் அளித்திருந்த நிலையில், பிரதமரின் மேற்கூறிய பேட்டி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை அர்த்தமில்லாமல் ஆக்கிவிட்டதாக கருதியே இடதுசாரிகள் இன்று ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மேற்கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது - மன்மோகன்

இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் தமது அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

   Source: வெள்ளிநிலா நீயுஸ்


ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை மீண்டும் சாம்பியன்

July 7th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், இந்தியா, இலங்கை, கிரிக்கெட், விளையாட்டு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை மீண்டும் `சாம்பியன்’
இந்திய கனவை தகர்த்தார், மென்டிஸ்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. சுழற்பந்து வீச்சாளர் மென்டிஸ், இந்தியாவின் கனவை சிதறடித்தார்.

இறுதிப்போட்டி

6 நாடுகள் பங்கேற்ற 9-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்தது. இதில் கராச்சியில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிரவின்குமாருக்கு பதிலாக உத்தப்பா சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த சமிந்தா வாஸ், அஜந்தா மென்டிஸ் மீண்டும் திரும்பினர்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி முதலில் இலங்கையை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து ஜெயசூர்யாவும், சங்கக்கராவும் இலங்கை அணியின் இன்னிங்சை தொடங்கினார்கள். 2-வது ஓவரில் இலங்கை அணிக்கு அதிர்ச்சி ஆரம்பமானது. சங்கக்கரா (4 ரன்) ரெய்னாவால் ரன்-அவுட் செய்யப்பட்டார். இதன் பிறகு ஒரு பக்கம் ஜெயசூர்யா சரவெடியாய் வெடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்தன. கேப்டன் ஜெயவர்த்தனே 11 ரன்னிலும் (19 பந்து, ஒரு பவுண்டரி), கபுகேதரா 5 ரன்னிலும் (11 பந்து), சமர சில்வா ரன் ஏதுமின்றியும் (0), இஷாந்த் ஷர்மா பந்து வீச்சுக்கு இரையானார்கள். 12-வது ஓவரில் 66 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தத்தளித்தது.

ஜெயசூர்யா சதம்

இந்த சூழலில் ஜெயசூர்யாவுடன், தில்ஷன் ஜோடி சேர்ந்தார். விக்கெட் சரிவை பற்றி துளியும் கவலைப்படாமல் ஜெயசூர்யா தனது வழக்கமான பாணியில் வெளுத்து வாங்கினார். அவர் 56 ரன்களில் இருந்த போது மிட்-ஆன் திசையில் நின்ற ஆர்.பி.சிங் கடினமான ஒரு கேட்ச்சை கோட்டை விட்டார். அதன் பலனை ஆர்.பி.சிங் உடனே அனுபவிக்க நேர்ந்தது. அவர் வீசிய ஒரு ஓவரில் 3 சிக்சரும், 2 பவுண்டரியும் ஜெயசூர்யா விளாசி, திகைக்க வைத்தார். ஜெயசூர்யா அதிரடியால், இலங்கை அணியின் ரன்-ரேட் 6 ரன்களுக்கு மேலாகவே சென்று கொண்டிருந்தது. ஸ்கோர் 300 ரன்களை தாண்டலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அபாரமாக ஆடிய ஜெயசூர்யா 79 பந்துகளில் தனது 27-வது சதத்தை தொட்டார். இந்தியாவுக்கு எதிராக அவர் கண்ட 6-வது சதமாகும்.

சதத்திற்கு பிறகு ஜெயசூர்யா மிகவும் களைத்து போனார். தவிர, ஓஜாவும், ஷேவாக்கும் சுழற்பந்து வீச்சில் அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மிடில் பகுதியில் ரன் வேகம் வெகுவாக குறைந்தது. ஜெயசூர்யாவும், தில்ஷனும் ஒன்று, இரண்டு ரன்கள் வீதமே எடுத்தனர்.

ஸ்கோர் 197 ரன்களாக உயர்ந்த போது, முக்கியமான கட்டத்தில் இந்த ஜோடி பிரிந்தது. ஜெயசூர்யா 125 ரன்களில் (114 பந்து) குவித்த நிலையில், ஷேவாக் பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மாவிடம் கேட்ச் ஆனார். அவரது ரன்னில் 9 பவுண்டரியும், 5 சிக்சரும் அடங்கும். அணியை சரிவில் இருந்து மீட்ட இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது சிறப்பம்சமாகும். சிறிது நேரத்தில் தில்ஷனும் (56 ரன், 74 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

 

273 ரன்கள் சேர்ப்பு

இதன் பிறகு ஆட்டம் இந்தியாவின் கட்டுக்குள் வந்தது. 20-40-வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. இறுதி கட்டத்தில் வாஸ் (19 ரன்), குலசேகரா (29 ரன், 29 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம் மட்டும் குறிப்பிடும்படி இருந்தது. முடிவில் இலங்கை அணி 49.5 ஓவர்களில் 273 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்திய தரப்பில் ஆர்.பி.சிங், இஷாந்த் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், இர்பான் பதான் 2 விக்கெட்டுகளும், ஷேவாக் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ஷேவாக் அரை சதம்

அடுத்து 274 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பை என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ஷேவாக், பந்துகளை தொடர்ச்சியாக பவுண்டரிக்கு ஓட விட்டு மிரட்டினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கம்பீர் 6 ரன்களில் ஏமாற்றி நிலையில், அடுத்து சுரேஷ் ரெய்னா ஆட வந்தார். மின்னல் வேகத்தில் ஆடிய ஷேவாக் 26 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் ஆசிய கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் அரை சதம் அடித்தவர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

ஆனால், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மென்டிஸ் பந்து வீச தொடங்கியதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. அவரது பந்தில் ஷேவாக் (60 ரன், 36 பந்து, 12 பவுண்டரி), ஸ்டம்பிங் ஆனார். அடுத்து வந்த யுவராஜ்சிங் (0) அதே ஓவரில் போல்டு ஆக இந்தியா அதிர்ந்தது. இதன் பிறகு ரெய்னா (16 ரன்), ரோகித்ஷர்மா (3 ரன்) ஆகியோரையும் மென்டிஸ் காலி செய்ய இந்தியா பெரும் சரிவுக்குள்ளானது. கேப்டன் டோனி-உத்தப்பா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு சிறிது நேரம் போராடினாலும், இந்தியாவை அவர்களால் நிமித்த முடியவில்லை. உத்தப்பா 20 ரன்களில் (41 பந்து) எல்.பி.டபிள்ï. ஆனார்.

இலங்கை சாம்பியன்

அடுத்து மீண்டும் பந்து வீச வந்த மென்டிஸ் மேலும் 2 விக்கெட்டுகளை சரித்து இந்தியாவை முழுமையாக தோல்வி பாதைக்கு தள்ளினார். கடைசி வரை போராடிய டோனி 49 ரன்களில் (74 பந்து, 4 பவுண்டரி) வெளியேற இந்திய அணி 39.3 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது.

இலங்கை தரப்பில் மென்டிஸ் 13 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் ஓர் வீரர் 6 விக்கெட்டுகள் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். 23 வயதான மென்டிஸ் இதுவரை 8 ஒரு நாள் போட்டிகளில் தான் ஆடியிருக்கிறார். அவர் தான் எங்களுக்கு துருப்பு சீட்டாக இருப்பார் என்று இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே சொல்லியிருந்தார். அதனை அவர் நிரூபித்தும் காட்டி விட்டார். லீக்கில் அடைந்த தோல்விக்கும் இந்தியாவை பழிதீர்த்து கொண்டனர். முன்னதாக இலங்கை அணி 1986, 1997, 2004 ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மென்டிஸ் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றார். அவர் தொடரில் மொத்தம் 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியா பரிதாபம்

இந்தியா ஏற்கனவே 4 முறை ஆசிய கோப்பையை வென்றிருந்தாலும், 1995-ம் ஆண்டுக்கு பிறகு ஆசிய கோப்பையை முகர்ந்ததில்லை. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைக்கு எதிராக மோதிய இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. அந்த சோகம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு ஆசிய இறுதிப்போட்டியிலும் இந்திய அணி, இலங்கையிடம் தான் தோற்றது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் போர்டு

இலங்கை

ஜெயசூர்யா (சி) இஷாந்த் (பி) ஷேவாக் 125

சங்கக்கரா (ரன்-அவுட்) 4

ஜெயவர்த்தனே (சி) ரோகித் (பி) இஷாந்த் 11

கபுகேதரா (சி) ரெய்னா (பி) இஷாந்த் 5

சமர சில்வா (பி) இஷாந்த் 0

தில்ஷன் (சி) டோனி (பி) இர்பான் பதான் 56

வாஸ் (பி) ஆர்.பி.சிங் 19

குலசேகரா (நாட்-அவுட்) 29

துஷாரா எல்.பி.டபிள்ï. (பி) ஆர்.பி.சிங் 5

மென்டிஸ் (பி) ஆர்.பி.சிங் 8

முரளிதரன் (சி) டோனி (பி) இர்பான் பதான் 2

எக்ஸ்டிரா 9

மொத்தம் (49.5 ஓவர்களில் ஆல்-அவுட்) 273

விக்கெட் வீழ்ச்சி: 1-11, 2-34, 3-66, 4-66, 5-197, 6-213, 7-236, 8-256, 9-264

பந்து வீச்சு விவரம்

ஆர்.பி.சிங் 9-1-67-3

இஷாந்த் ஷர்மா 10-1-52-3

இர்பான் பதான் 9.5-0-67-2

ஓஜா 10-1-38-0

ஷேவாக் 8-0-30-1

ரோகித் ஷர்மா 3-0-11-0

இந்தியா

கம்பீர் (சி) தில்ஷன் (பி) வாஸ் 6

ஷேவாக் (ஸ்டம்பிங்) சங்கக்கரா (பி) மென்டிஸ் 60

ரெய்னா (பி) மென்டிஸ் 16

யுவராஜ்சிங் (பி) மென்டிஸ் 0

டோனி (சி) சங்கக்கரா (பி) வாஸ் 49

ரோகித் ஷர்மா எல்.பி.டபிள்ï (பி) மென்டிஸ் 3

உத்தப்பா எல்.பி.டபிள்ï (பி) முரளிதரன் 20

இர்பான் பதான் (சி) ஜெயவர்த்தனே (பி) மென்டிஸ் 2

ஆர்.பி.சிங் (பி) மென்டிஸ் 0

ஓஜா (நாட்-அவுட்) 6

இஷாந்த் ஷர்மா (பி) குலசேகரா 8

எக்ஸ்டிரா 3

மொத்தம் (39.3 ஓவர்களில் ஆல்-அவுட்) 173

விக்கெட் வீழ்ச்சி: 1-36, 2-76, 3-76, 4-93, 5-97, 6-135, 7-154, 8-154, 9-160

பந்து வீச்சு விவரம்

வாஸ் 9-0-55-2

குலசேகரா 6.3-0-26-1

துஷாரா 8-0-51-0

மென்டிஸ் 8-1-13-6

முரளிதரன் 8-0-26-1


அதிர்ச்சி தகவல்: ஏழைகளிடம் இருந்து பெறப்படும் லஞ்சம் மட்டும் ரூ.900 கோடி

June 30th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, இந்தியா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அதிர்ச்சி தகவல்: ஏழைகளிடம் இருந்து பெறப்படும் லஞ்சம் மட்டும் ரூ.900 கோடி

வறுமைக் கோட்டிக்கு கீழ் வாழும் ஏழை - எளிய மக்களிடமிருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ. 900 கோடி லஞ்சம் பெறப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

டிரான்ஸ்பிரென்ஸி இண்டர்நேஷனல் இந்தியாவும், ஆராய்ச்சி அமைப்பு ஒன்றும் இணைந்து நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

இந்தப் பணம் அனைத்தும் அடிப்படைத் தேவைகளை பெறுவதற்காக லஞ்சமாக கொடுக்கப்பட்டவை ஆகும்.

இவ்வாறு லஞ்சமாகப் பெறப்பட்ட தொகையில் பெருமளவு போலீஸ் துறைக்கே சென்றுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அதனைத் தொடர்ந்து, நில ஆவணங்கள் பதிவு செய்தலில் அதிகக் தொகை ஏழை - எளியோரிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது விநியோக முறை, மருத்துவம், கல்வி, மின்சாரம், குடிநீர் விநியோகம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், வங்கி போன்றவற்றில் அதிக முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் பல்வேறு காரணங்களுக்காக காவல்நிலையத்தை அணுகியதாகவும், அதில் தங்களது புகாரினை ஏற்கச் செய்வதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் சுமார் ரூ. 215 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நில ஆவணத்தைப் பதிவு செய்வதற்காக, 3 லட்சத்து 50 ஆயிரம் ஏழை - எளிய மக்கள் லஞ்சம் கொடுத்துள்ளனர்.

இவை தவிர, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை மக்களின் நிலையோ அதைவிடக் கொடுமையாக உள்ளது.

புறநோயாளிகளுக்கான அட்டை பெறுவது, பரிசோதனை மேற்கொள்ளுதல், படுக்கை வசதியைப் பெறுதல் போன்ற ஒவ்வொன்றிற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதால், சுகாதார வசதி வேண்டி வரும் அப்பாவி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவத் துறை மட்டுமின்றி, கல்வித்துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகப் புகார் கூறப்பட்டுள்ளது.

தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்பும் அடிதட்டு மக்கள், குழந்தைகளுக்கு தேவையான சான்றுகளை பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த பின்னரே அதனைப் பெற முடிவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த இந்த ஆய்வை மேற்கொண்ட திட்ட இயக்குநர் டாக்டர் சுப்ரதோ மோன்டல், “மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தகவல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம், மின்னனு நிர்வாகம் உள்ளிட்ட வசதிகள் மூலம் ஏழை-எளியோருக்கு விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்வதால் மட்டுமே இவ்வாறான பிரச்னைகளைக் களைய முடியும். இதற்கு வெளிப்படைத்தன்மையான நிர்வாகம் அவசியம்’ என்றார்.
 
 


சாகித்திய அகாதமியைக் கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், அரசியல், இந்தியா, ஊழல், கலை-இலக்கியம், கிளர்ச்சி, சமூகம், தகவல், தமிழ், போராட்டம், மொழி | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | 6 மறுமொழிகள் » |

சாகித்திய அகாதமியில் புதுச்சேரிக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று (08-06-2008) காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தமிழ் அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

சாகித்திய அகாதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக புதுச்சேரி அரசின் பரிந்துரையின்படி மகரந்தன, தமிழக அரசின் பிரதிநிதியாக இராம.குருநாதன், பல்கலைக்கழக பிரதிநிதியாக இரா.மோகன் மற்றும் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாக சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழ்மொழியின் ஒருங்கிணைப்பாளராக சிற்பி பாலசுப்ரமணியத்தை மற்ற மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து தேர்வு செய்தனர். மேலே உள்ள நான்கு பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து மேலும் 6 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படியில் புதுச்சேரி மகரந்தன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மூவர் பெயரை ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்ரமணியத்திடம் அளித்துள்ளார். ஆனால், இவர் பரிந்துரை செய்த ஒருவரையும் நியமிக்காமல் தன்னிச்சையாக தனக்கு வேண்டிய ஒருவரை சிற்பி நியமித்துள்ளார். பரிந்துரையின் அடிப்படையிலோ அல்லது மற்ற உறுப்பினர்களை கலந்தாலோசனையின் அடிப்படையிலோ அவர் தேர்வு செய்யாமல் தன்னிச்சையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது புதுச்சேரி இலக்கிய வட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பணத்தில் இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் தமது உறுப்பினர்களுக்கே வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் போது, பொதுமக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க இயலும் என்று இந்த தமிழ் அமைப்புகள் கோருகின்றன.

மேலும் புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒன்பது திட்டமங்களை மகரந்தன் அளித்திருந்தார் அதில் அத்தனையும் அதன் ஒருங்கிணைப்பாளர் நிராகரித்துள்ளார். புதுச்சேரியோ அதன் அருகிலுள்ள மாவட்டங்கள் எதிலும் நிகழ்ச்சி எதற்கும் இதன் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு ஏன் புதுச்சேரி பகுதியிலிருந்து ஒரு பிரதிநிதி என்று புதுவையைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுபபினர். சென்ற பத்து ஆண்டுகளாக புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக இரண்டே இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன.

அத்துடன் ஆரோவில் (தமிழகம்) பகுதியைச் சேர்ந்த இரா.மீனாட்சி என்பவரை சிற்பி அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர். அவர் தமிழ் இன விரோத சிந்தனை கொண்டவர். எனவே, அவரை திரும்பப் பெற வேண்டும். புதிதாக புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கோரினர்.

புதுவைத் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்தாளர் கழகம், பெரியார் திராவிடர்க் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி பூர்வ குடிமக்கள் உரிமைப் பாதுகாப்பு பேரவை, மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழர் தேசிய இயக்கம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், சமூக நீதி போராட்டக் குழு இராவணன் பகுத்தறிவு இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை உள்ளிட்ட 27 அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் ஒரு தொடக்கம் தான் “சாகித்திய அகாதமியின்” நடவடிக்கை ஏதும் மேற் கொள்ளாமல் புதுச்சேரியைத் தொடர்ந்துப் புறக்கணிக்குமானால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் தெரிவித்தார்.


ஜெய்ப்பூரில் தொடர் குண்டு வெடிப்புகள்

May 13th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, இந்தியா, குண்டுவெடிப்பு, சுற்றுலா, தீவிரவாதம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பில் 25க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூட்டம் நிறைந்த சந்தைப்ப்பகுதியில் தொடர்ந்து குறைந்தபட்சம் ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

Blasts rock Indian tourist city - BBC


செய்தித் தொகுப்பு

May 7th, 2008 பகுப்புகள்: இந்தியா, உலகம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவிற்கான யூ.ட்யூப் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது YouTube launches site for Indian users

ஆந்திராவைச் சார்ந்த மருத்துவ மாணவி இங்கிலாந்தில் படுகொலை செய்யப்பட்டார் Indian student murdered in UK

ஐ ஃபோனுக்கான உரிமையை வோடோஃபோன் பெற்றுள்ளது Vodafone gets iPhone rights for India

ஆறுவாரங்களில் விலலவவசி குறையும் - கபீல் சிபல் Prices will come down in six weeks: Sibal

விவசாயத்திற்கு முக்கியத்துவம் தராததே உணவு தட்டுப்பபட்டுக்கு காரணம் - ஐ.நா Neglect of agriculture led to food crisis: UN

இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் - ஹர்பஜன் கோரிக்கை - Bhajji appeals to BCCI for ‘one more chance’


இந்திய அரசின் கணினிகளை வேவுபார்க்கும் சீன ஹாக்கர்கள்

May 5th, 2008 பகுப்புகள்: அறிவியல், இந்தியா, கணினி, தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம், தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

பீஜிங்கின் இந்தியத் தூதரகத்தின் இணையதளமும், அதன் இணையப் பயனர் செயலிகளும் சீன மென்பொருள் விஷமிகளால் ஊடுருவப்பட்டுள்ளன. இது தொடர்ந்து நடைபெறுவதாகத் தெரிகிறது. இந்திய இராணுவம் சம்பந்தப்பட்ட தகவல்களை இந்த ஹாக்கர்கள் தேடுவதாகவும் தெரியவந்துள்ளது.

சீனாவின் திட்டமிட்ட இணையப் போர்முறை (Cyber War) ஐ.நாவிற்கு கவலை தந்துள்ளது. 2050ற்குள்