தொழில்நுட்பம் | சற்றுமுன்...




7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

August 10th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, கணினி, கல்வி, தகவல், தகவல் தொழில்நுட்பம், தேர்வு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை
10 கல்லூரிகளில் 9-க்கும் குறைவானவர்கள் சேர்ந்துள்ளனர்

முதலிடத்தில் எலக்ட்ரானிக் கம்ïனிகேசன்

தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்தவற்கு அண்ணாபல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடைபெற்றுவருகிறது. முதல் கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து 2-வது கட்ட கவுன்சிலிங் நடந்து வருகிறது. தினமும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் கவுன்சிலிங்கிற்கு வருவதில்லை.

இதுவரை மாணவர்கள் தேர்வு செய்த இடங்கள் விவரம் வருமாறு:-

எலக்ட்ரானிக் கம்ïனிகேசன் பிரிவில் 18 ஆயிரத்து 474 இடங்களில் 13 ஆயிரத்து 244 இடங்களை தேர்வு செய்துள்ளனர். இது 72 சதவீதம் ஆகும். இந்த பிரிவு தான் முதல் இடத்தில் உள்ளது. கம்ப்ïட்டர் சயின்ஸ் பிரிவில் 17,356 இடங்களில் 10,383 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இது 60 சதவீதம். எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் பிரிவில் உள்ள 12,029 இடங்களில் 5,885 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது 49 சதவீதம். தகவல் தொழில்நுட்பம் பிரிவில் உள்ள 13,627 இடங்களில் 6,848 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்னன. இது 50 சதவீதம். 8,341 இடங்கள் கொண்ட மெக்கானிக்கல் பிரிவில் 6,099 பேர் தேர்வு செய்துள்ளனர்.

சிவில்

3,320 இடங்கள் உள்ள சிவில் பிரிவில் 2,586 இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். இது 78 சதவீதம். 402 இடங்கள் கொண்ட ஆட்டோமொபைல் பிரிவில் 339 இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். இது 84 சதவீதம். 1406 பேர் கொண்ட ஏரோனாட்டிக்கல் பிரிவை 879 பேர் தேர்ந்து எடுத்து உள்ளனர். இது 62 சதவீதம். பயோடெக்னாலஜி பிரிவில் 1,193 இடங்களில் 658 மாணவர்க்ள தேர்வு செய்துள்ளனர். இது 55 சதவீதம்.

மற்ற பிரிவுகளில் உள்ள 3554 இடங்களில் 2,601 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 81 ஆயிரத்து 373 இடங்களில் 50 ஆயிரத்து 715 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவர்கூட சேராத கல்லூரிகள்

இதுவரை 7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் எந்த பிரிவிலும் ஒரு மாணவர்கூட சேரவில்லை. அந்த கல்லூரிகள் அனைத்தும் புதிய கல்லூரிகள் என்றும் சென்னை அருகே உள்ள கல்லூரிகள் அல்ல என்றும் தெரிய வந்துள்ளன.

மேலும் 9 மாணவர்களுக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகள் 10 உள்ளன. இவற்றில் சில சென்னையை சுற்றி உள்ளன. மற்றவை மற்ற மாவட்டங்களில் உள்ளன.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில் நல்ல கட்டமைப்பு உள்ள பல புதிய கல்லூரிகள் உள்ளன. அதை அறியாமல் மாணவர்கள் சேர தயங்குகிறார்கள். கட்டமைப்பு வசதி உள்ள புதிய கல்லூரிகளில் சேரலாம். இந்த கல்லூரிகளுக்கு அடுத்த ஆண்டு நல்ல வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


வெடிகுண்டு மிரட்டல்: இ - மெயில் அனுப்பிய கணக்காளர் கைது

August 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், இணையம், கணினி, குற்றம், சட்டம் - நீதி, தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வெடிகுண்டு மிரட்டல்: இ - மெயில் அனுப்பிய கணக்காளர் கைது

மும்பை, ஆக. 1: வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ - மெயில் அனுப்பிய பஞ்சாப் கணக்காளர் ஒருவரை மும்பை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கணக்காளர் தீபக் பாண்டே பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர்.

ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பை அடுத்து தொடர்ந்து பல இடங்களில் குண்டு வெடிக்கும் என்று தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு இ - மெயில் மிரட்டல் வந்தது. இது குறித்து மும்பை போலீஸôர் விசாரித்தனர். இ - மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று போலீஸôர் கண்டுபிடித்தபோது லூதியானாவைச் சேர்ந்த தீபக் என்பவர் அனுப்பியது தெரியவந்தது. வதந்தியைப் பரப்புவதற்காக இவர் இ - மெயில் மிரட்டல் விடுத்தாரா அல்லது உண்மையிலேயே இவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும் என்று மும்பை குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் தேபன் பார்த்தி கூறினார்.
 
 


அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அமெரிக்க இந்தியர்கள் தீவிரம்

July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அமெரிக்கா, அரசியல், தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அமெரிக்க இந்தியர்கள் தீவிரம்

வாஷிங்டன், ஜூலை 27: இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஹைட் சட்டத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு இங்குள்ள அமெரிக்கவாழ் இந்தியர்களையே சாரும். தற்போது இந்த 123 ஒப்பந்தம் இரு சபைகளிலும் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் வாஷிங்டனில் திங்கள்கிழமை கூடி விவாதிக்க உள்ளதாக அமெரிக்க-இந்திய கூட்டமைப்பின் தலைவர் அசோக் மாகோ தெரிவித்தார். இந்த அமைப்பு டல்லாûஸ தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை கூட்டம் செப்டம்பர் 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே செனட் கூட்டமும் கூடலாம் என தெரிகிறது.

பொதுவாக பிரதிநிதிகள் சபைக் கூட்டம் அக்டோபர் மாதம் கூடும். ஆனால் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளதால் செப்டம்பரில் கூடுகிறது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாரக் ஒபாமா மற்றும் மெக்கைய்ன் ஆகிய இருவரும் இந்த அணுசக்தி ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் இதை நிறைவேற்றுவதில் எவ்வித சிரமமும் இருக்காது என்று தெரிகிறது.


25,000 என்ஜினீயர்களுக்கு வேலை: இன்போசிஸ்

May 24th, 2008 பகுப்புகள்: அறிவிப்பு, தகவல் தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

25,000 என்ஜினீயர்களுக்கு வேலை: இன்போசிஸ்

இந்த ஆண்டு புதிதாக 25 ஆயிரம் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இருப்பதாக இன்போசிஸ் துணைத் தலைவர் நந்திதா குர்ஜார் தெரிவித்தார்.

இதற்காக நாடு முழுவதும் உள்ள 250 பொறியியல் கல்லூரிகளில் திறமையான என்ஜினீயர்களை தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

பணியும் அதற்கான சூழலும் மாறிவிட்டது. வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக அவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. தற்போது நமது பணி எல்லாம் சிஸ்டத்தில் தான். கன்சல்டிங், பிபிஓஎஸ் போன்ற பணிகள்தான். எனவே நாங்கள் சிறந்த பொறியாளர்களையே விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை இருந்தாலும் கூட இந்த ஆண்டு 25 ஆயிரம் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இது மேலும் அதிகரிக்கும். கடந்த ஆண்டு 25 ஆயிரம் பொறியாளர்களைத் தேர்வு செய்யத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இறுதியில் 30 ஆயிரம் பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் இன்போசிஸ் நிறுவனம் 1,000 காம்பஸ் இன்டர்வியூ நடத்தியது. இந்த ஆண்டு 1,050 காம்பஸ் இன்டர்வியூ நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர். வர்த்தகப் பள்ளிகளில் 350 பட்டதாரிகளைத் தேர்வு செய்ய உள்ளோம். கடந்த ஆண்டு 100 வெளிநாட்டு நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
 
 


மே-11 ஞாயிறன்று விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு

May 10th, 2008 பகுப்புகள்: இணையம், கணினி, தமிழ், பதிவுலகம், மொழி | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு நடத்துவது என கடந்த ஞாயிறு அன்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவசரம் அவசரமாக நடத்திவிட வேண்டும் என்பது போல விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் கோரிக்கையின் பேரில் நாளை காலை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் நடக்க விருக்கிறது.

அரசுக் கல்லூரி விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மாதாக்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் சற்று தூரம் நடந்தால் அரசுக் கல்லூரி உள்ளது.

காலை 9.00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் காலை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி வருகை தர உள்ளார்.

சென்னை மற்றும் புதுச்சேரியிலிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இப்பயிற்சியில் சுமார் 100 கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு எழுதுகோல் குறிப்பேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

பல்வேறு தமிழ் மென்பொருட்கள் குறுந்தகடு விலை ரூ15/- என வசூலிக்க இருப்பதாக விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் தமது வலைப்பூவில் தெரிவித்துள்ளனர், அதனால் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தம் பொறுப்பில் குறுந்தகடு இலவசமாக வழங்குவது என முடிவு செய்துள்ளது.

நிகழ்ச்சி நிரல் கீழே உள்ளவாறு நடக்க உள்ளது.

வருகை தர உள்ள அனைவர்க்கும் இந்த நிகழ்ச்சிநிரல் பயிற்சி அரங்கத்தில்அளிக்கப்படும்.

தமிழ் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு-2008. விழுப்புரம்

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி – விழுப்புரம்
நாள் 11 மே 2008

நிகழ்ச்சி நிரல்

காலை 08.50 - 9.00 பங்கேற்பாளர்கள் பதிவு செய்தல் (15 நிமிடம்)

காலை 09.00 - 9.30 நிகழ்ச்சிகள் தொடங்கி வைத்தல் (30 நிமிடம்) (

காலை 09.30-10.00 : தமிழ் எழுத்துறுக்கள் செயலி நிறுவுவது - க.அருணபாரதி

ஏகலப்பை (15 நிமிடம்)
குறள் (5 நிமிடம்)
இளங்கோ (5 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 10.01-10.30 : தமிழில் தட்டச்சு செய்வது பேராசிரியர் மு.இளங்கோவன்
தமிழ் 99 (15 நிமிடம்)
ஒலியியலில் உள்ள குறைகள் (5நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 10.30-11.30 வலைப்பதிவு அறிமுகம் – திரு. பாலபாரதி & மா.சிவக்குமார்

மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம் (5 நிமிடம்)

வலைப்பதிவு தொடக்கம் (BLOGGER) (20 நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (15 நிமிடம்)

வலைப்பதிவில்பின்னூட்டமிடுவது (10 நிமிடம்)

மறுமொழி மட்டுறுத்தல் (5 நிமிடம்)

கேள்வி பதில் (5 நிமிடம்)

காலை 11.30- 11.45 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

பகல் 11.46- 12.15 வலைப்பதிவு தொடக்கம் - விக்கி

(WORD PRESS) (10 நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 12.16-12.30 படங்கள் இணைப்பது (10 நிமிடம்) – கோ.சுகுமாரன்

காட்சிப்படம் இணைப்பது (10 நிமிடம்)

ஒலிகளை இணைப்பது (5 நிமிடம்) - வினையூக்கி

கேள்வி பதில் (5 நிமிடம்)

பகல் 12.31- 01-00 திரட்டிகளில் இணைப்பது (20 நிமிடம்) – விக்கி & வெங்கடேஷ்

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 01.00-02.00 உணவு இடைவேளை (60 நிமிடம்)

பகல் 02.01- 2.30 குறுந்தகடில் உள்ள மென்பொருட்கள் அதன் பயன்பாடுகள் –க.அருணபாரதிகேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 02.31- 3.00 தமிழில் இயங்குதளங்கள் - மா. சிவக்குமார்

விண்டோஸ் (10 நிமிடம்)

லினக்ஸ் (10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 3.01-3.30 : கணினியில் தமிழ்ப் பயன்பாடு - இரா.சுகுமாரன்

ஒப்பன் ஆபீஸ் தமிழ் (5 நிமிடம்)

எம்.எஸ் ஆபிஸ் தமிழ் (5 நிமிடம்)

தமிழில் மின்னஞ்சல் (5 நிமிடம்)

தமிழில் அரட்டை (5 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பிற்பகல் 3.31- 4.00 இணைய உலவிகள் பயர் பாக்ஸ் – வினையூக்கி

அதியன் இணைப்பு (10 நிமிடம்)

பத்மா இணைப்பு(10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பிற்பகல் 04.01-4.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

மாலை 4.16.- 4.30 தமிழில் இணையதளங்கள் - பேராசிரியர் மு.இளங்கோவன்

விக்கிப்பீடியா (10 நிமிடம்)

மதுரைத்திட்டம் (5 நிமிடம்)

யாழ் நூலகம் (5 நிமிடம்)

பிற தளங்கள் (5 நிமிடம்)

கேள்வி பதில் (5 நிமிடம்)

மாலை 04.31- 4.45 RSS FEED கூகுல் திரட்டியில் இணைப்பது (8 நிமிடம்) சீனுவாசன் கடலூர்

மாலை 4.46-5.15 கூட்டு வலைப்பதிவுகள் அமைப்பது - தூரிகா வெங்கடேஷ்(10 நிமிடம்)

மாலை 5.15-5.45 சொந்தத் தளத்தில் வலைப்பதிவு

word press எப்படி நிறுவுவது (15 நிமிடம்) விக்கி

மாலை 6.00 நிறைவு விழா மற்றும் சான்றிதழ் அளிப்பு

*************************************************
வலைப்பதிவர்களுக்கான பயனுள்ள தளம்
தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கம் http://tamilblogging.blogspot.com/

வலைப்பதிவு பயிற்சி :
தமிழ் வலைப்பதிவர்கள்: http://www.tamilbloggers.org/ (தமிழ்நாடு-புதுச்சேரி)

பயிற்சி ஒருங்கிணைப்பு
புதுச்சேரிவலைப்பதிவர் சிறகம் http://www.pudhuvaitamilbloggers.org/

நிகழ்ச்சி ஏற்பாடு:
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்

http://vizhuppuramvalaippathivar.blogspot.com/

********************************************
தமிழின் முழு தானியங்கி வலைத்திரட்டி + வலைவாசல் - தமிழ்.கணிமை.காம் - http://tamil.kanimai.com/

தமிழ்வலைப்பதிவர் கூட்டு முயற்சியில் ஒரு செய்தித்தளம் - சற்றுமுன் -

http://satrumun.com/

புதிய வலைப்பதிவு தொடங்குவதற்கு

தமிழ்ப் பதிவுகள் http://tamilblogs.com/new-index.php

வலைப்பதிவு திரட்டிகள்

தமிழ்மணம் http://www.tamilmanam.net/index.html
தேன்கூடு http://www.thenkoodu.com/
தமிழ்வெளி http://www.tamilveli.com/
திரட்டி http://www.thiratti.com/
மாற்று http://www.maatru.net/
கில்லி http://gilli.in/


விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிலரங்கு

May 9th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, கணினி, தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 11.05.2008(ஞாயிறு) வலைப்பதிவர் பயிலரங்கு நடைபெறுகிறது.காலை ஒன்பது மணிமுதல் மாலை வரை நிகழ்ச்சி நடைபெறும்.தமிழ்நாட்டு அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு க.பொன்முடி அவர்கள் வலைப்பதிவர் பயிலரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.கல்லூரி முதல்வர் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

விழுப்புரம் புதுவைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சிபெற-பயன்பெற உள்ளனர்.பயிற்சியாளர்களுக்குப் பயன்படும் வண்ணம் குறுவட்டு ஒன்று உரூவா பதினைந்து விலையில் வழங்கப்படும்.ஆர்வமுடையவர்கள் கலந்துகொண்டு பயிற்சி தரலாம்.பயன்பெறலாம்.

வலைப்பூ உருவாக்கம்,தமிழ் இணையப் பயன்பாடு பற்றி அறிந்துகொள்ள விழைவார்க்குப் பயன்தரும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் செய்திகள் பெற விரும்புபவர்கள் http://vizhuppuramvalaippathivar.blogspot.com/என்னும் தளத்திலும் திரு. தமிழநம்பி அவர்களின் 94434 40401 என்ற செல்பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

நன்றி: மு. இளங்கோவன்


இந்திய அரசின் கணினிகளை வேவுபார்க்கும் சீன ஹாக்கர்கள்

May 5th, 2008 பகுப்புகள்: அறிவியல், இந்தியா, கணினி, தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம், தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

பீஜிங்கின் இந்தியத் தூதரகத்தின் இணையதளமும், அதன் இணையப் பயனர் செயலிகளும் சீன மென்பொருள் விஷமிகளால் ஊடுருவப்பட்டுள்ளன. இது தொடர்ந்து நடைபெறுவதாகத் தெரிகிறது. இந்திய இராணுவம் சம்பந்தப்பட்ட தகவல்களை இந்த ஹாக்கர்கள் தேடுவதாகவும் தெரியவந்துள்ளது.

சீனாவின் திட்டமிட்ட இணையப் போர்முறை (Cyber War) ஐ.நாவிற்கு கவலை தந்துள்ளது. 2050ற்குள் இணையம்(Internet technology) உலகின் எந்த இராணுவத்தையும் இடைமறித்து ஸ்தம்பிக்கச் செய்யும் திறனைப் பெறுவது சீனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பாகும்.
தகவல் தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியா சீனாவின் இந்த சவாலை சந்திப்பதில் தடுமாறுவதற்கு அடிப்படைக் காரணம் சீனா தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதேயாகும் எனக் கருதப்படுகிறது.

Chinese cyber crawlers hack Indian Govt sites - IBNLive


தலைமைச் செயலாளர் தொலைபேசி ‘ஒற்று’ கேட்கப்படவில்லை: அரசு

April 14th, 2008 பகுப்புகள்: தொலைபேசி | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

அதிமுக கட்சித்தலைவர் ஜெயலலிதாவின் வழக்கொன்று பற்றி தலைமைச் செயலர் காவல் துறை உயரதிகாரியுடன் நடத்திய தொலைபேசிப் பேச்சை அரசு கண்காணித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானதும் தவறானதும் ஆகும் என தமிழக அரசு குறிப்பொன்று தெரிவிக்கிறது. இந்த செய்தி வெளியாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

இதே ஆங்கில நாளிதழ் இரு மாதங்களுக்கு முன்னரும் காவல்துறை முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் செய்தியாளர்கள் தொலைப்பேசிகள் கண்காணிக்கப்படுவதாக பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது. அதனையும் அரசு மறுத்தது.

TN Govt denies allegations of phone tapping


அஞ்சலக சேவை ஒரு குடும்பமாக செயல்படவேண்டும்: தகவல் தொடர்பு இணை அமைச்சர்

April 9th, 2008 பகுப்புகள்: தகவல், தகவல் தொழில்நுட்பம், வணிகம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

புதிதாக பதவியேற்றிருக்கும் தகவல் மற்றும் தொலைதொடர்பு இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மின்னஞ்சல்கள் தனித்தன்மையின்றி விளங்குகின்ற மற்றும் தனியார் அஞ்சல்தூதர் சேவைகள் கைக்கு எட்டாத விலையில் இயங்குகின்ற வேளையில் அரசு அஞ்சல்துறை மக்களிடம் ஒரு தனித்தன்மையுடன் ஒன்றிணைந்து சேவை வழங்க தாம் முயலப்போவதாக கூறினார். தன்னுடைய தந்தை, மாதவ்ராவ் சிந்தியா, தொடர்வண்டி அமைச்சகத்தில் கொண்டுவந்த மாறுதல்களைப்போல தானும் அஞ்சல்துறையை நடத்தவிருப்பதாகக் கூறினார். குவாலியர் அரச பரம்பரையச் சேர்ந்த சிந்தியா தனது பதவியேற்பிற்குப் பின் நடத்திய ஊடக சந்திப்பில் அஞ்சல்துறை தற்போது 1250 கோடி நட்டத்தில் இயங்கி வருகிறது, மக்கள் தொடர்பிற்கும் பணபட்டுவாடா தேவைகளுக்கும் ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறது என்று கூறினார். செஞ்சுரியன் வங்கியின் துணையுடன் அந்நிய செலாவணி மாற்றிற்கும் வகை செய்கிறது.நாட்டிலுள்ள 1,55,000 அஞ்சலகங்கள் மூலம், மற்ற வங்கிகளுடன் இணைந்து, கிராமப்புறங்களில் வீட்டு கடன்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

இந்திய தகவல் தொழிற்நுட்பதுறை பற்றி கூறும்போது உலகின் மென்பொருள் நிரலாளர்களாகவும் திரைமறைவு பணியாளர்களாகவும் இருப்பதிலிருந்து அறிவுசார் உரிம வாய்ப்புள்ள மென்பொருள் பொருளாக்கத்திற்கு முன்னேறவேண்டும் என்றார். மேலும் வன்பொருள் உற்பத்தியிலும் அதிக விலையுள்ள தளத்திற்கு செல்ல வேண்டும் என்றார்.

Postal services should be run like a family: Scindia


செந்தழல் - மூர்த்தி விவகாரம் போலீஸ் விசாரணை

April 9th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, குற்றம், தகவல் தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | 6 மறுமொழிகள் » |

வலையுலகில் செந்தழல் ரவிக்கும் போலி என அறியப்படுகிற மூர்த்தி எனும் நபருக்குமிடையே இருந்த பிரச்சனை தற்போது போலிஸ்வரை சென்றுள்ளது.

ஆர்குட்டில் செந்தழல் ரவி கன்னடர்களுக்கு எதிராக செய்தி அனுப்புவதுபோல போலி செய்திகள் அனுப்பப்பட்டதாகவும அதனால் செந்தழல் ரவிக்கு மிரட்டல்கள் வந்தததகவும் அவர் பெங்களூரை விட்டு சென்னனக்கு வர நேர்ந்ததாகவும் தினமலரில் செய்தி வெளியாகியுள்ளது. (இதை செந்தழலே எனக்குத் தெரிவித்தார்).

இது குறித்து விசாரிக்க இணையக் குற்றவியல் ககவல் துறைக்கு சென்னை கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர்


செல்போன் கட்டணம் மேலும் குறைகிறது

March 28th, 2008 பகுப்புகள்: தகவல் தொழில்நுட்பம், தொலைபேசி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

செல்போன் கட்டணம் மேலும் குறைகிறது
தொலைத்தொடர்பு ஆணையம் நடவடிக்கை

தொலைத்தொடர்பு ஆணையம் எடுத்த நடவடிக்கையால், செல்போன் கட்டணம் மேலும் குறைகிறது.

கட்டணம் ரத்து

செல்போன் சேவை நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள போட்டியால், செல்போன் கட்டணங்கள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) நேற்று மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், செல்போன் கட்டணம் மேலும் குறைய உள்ளது.

பொதுத்துறை தொலைபேசி நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லின் உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, கிராமப்புறங்களில் தனியார் செல்போன் சேவை நிறுவனங்கள், தங்கள் சேவையை வழங்கி வருகின்றன. இதனால், அந்த நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல்.லுக்கு தங்களது மொத்த வருவாயில் 0.75 சதவீதத்தை கட்டணமாக செலுத்தி வருகின்றன. இந்த கட்டணத்துக்கு `அக்சஸ் டெபிசிட் சார்ஜ்’ (ஏ.டி.சி.) என்று பெயர். ஆண்டுதோறும், ரூ.600 கோடி அளவில் இந்த கட்டணத்தை செலுத்தி வருகின்றன.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=402727&disdate=3/28/2008&advt=1


கணினி விளையாட்டுகளினால் குழந்தைகளுக்கு ஆபத்து

March 27th, 2008 பகுப்புகள்: