மருத்துவம் | சற்றுமுன்...




கூவம் கரையில் ஒரு சோமாலியா

August 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, உடல்நலம், மருத்துவம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கூவம் கரையில் ஒரு “சோமாலியா’

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பானுமதி தனது தாயின் மடியில்.

சென்னை, ஆக. 7: சென்னை கூவம் கரையில் ஒரு சோமாலியாவின் பரிதாபக் காட்சி மனதை கலங்க வைக்கிறது.

ஆட்டோமொபைல் உபகரணங்களுக்கு பெயர் போன புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் சாலை ஓரத்தில் எவ்வித அரவணைப்பின்றி பரபரப்பாக ஓடும் வாகனங்களை ஏக்கமும், தவிப்புமாகப் பார்க்கும் குழந்தை பானுமதிக்கு வயதோ மூன்றரை.

கை, கால்கள் தளர்ந்தும், சுருங்கி போன பானுமதியை பார்க்கும் பெற்றோர்களுக்கு சற்றே மனது நொருங்கிப் போய்விடும்.

நன்றாக ஓடி, ஆட வேண்டிய குழந்தை முறையான பராமரிப்பின்றியும், சத்தான சாப்பாடு இல்லாமல் ஊட்டசத்துக் குறைபாட்டால் முடங்கிப் போய் நகர முடியாமல் இருக்கிறாள்.

கூவத்தையொட்டி குடிசை வீடு அமைத்து தங்கியுள்ள அவரது தாய் வைரமும், தனது குழந்தையைச் சரியாகப் பராமரிப்பதில்லை. கணவரால் கைவிடப்பட்ட வைரம், குப்பை பொறுக்கியும், வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார். சம்பாதிக்கும் 50 ரூபாய் போதவில்லை என்கிறார் வைரம். இதனால் பானுமதிக்கு சத்தான உணவை வாங்கிக் கொடுக்க முடியாத நிலை. சாலை ஓரத்தில் பானுமதியை பார்த்து இரக்கப்படும் பலர் கொடுக்கும் உணவுப் பொருளே அவளுக்கு அரு மருந்து.

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகளை அரசு மருத்துவமனைக்கு கூட சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாதது வறுமையின் பரிதாப நிலை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மிஞ்சிப் போனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட கிடையாது.

பெற்ற தாய் இருந்தும், கவனிப்பின்றி தவிக்கும் பானுமதி என்ன தவறு செய்தார்?…பாவம்!


இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, உடல்நலம், சுற்றுச்சூழல், மருத்துவம், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளது என்று பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் கூறினார்.

பாராட்டு விழா

கடந்த 2006-ம் ஆண்டு “வாருங்கள் கிராமம் செல்வோம்” என்ற திட்டத்தை கிராமப்புறங்களில் செயல்படுத்தி சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக திருச்சி டாக்டர் அஷ்ரப்பிற்கு மருத்துவ துறையில் தேசிய அளவில் மிக உயர்ந்த விருதான பி.சி.ராய் விருது வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

விழாவிற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு திருச்சி கிளை தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர் குணசேகரன், டாக்டர்கள் ஞானதிலகன், கலைக்கோவன், எஸ்.எம்.ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் அஷ்ரப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கிராமங்கள் தத்தெடுப்பு

ஒரு நாள் மருத்துவ முகாம்கள் நடத்துவதால் கிராமப்புற மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் செல்ல வேண்டும். வியாதிக்கான மருந்துகள் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும். இந்திய மருத்துவ கூட்டமைப்பில் 2500 கிளைகள் உள்ளன. இதன் மூலம் 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளோம்.

கடந்த 60 வருடத்தில் நாம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியால் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளுக்கிடையே இடைவெளி நீடிக்கிறது. டாக்டர்களின் அணுகுமுறை நோயாளிகளிடம் சிறந்ததாக இருக்க வேண்டும். சாலை விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். நான் அடுத்ததாக சாலை விபத்துக்கள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் கீதாராமனுஜம் நன்றி கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=426581&disdate=7/20/2008&advt=2


ஓய்வு பெற்றார் எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபால்

July 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, மருத்துவம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஓய்வு பெற்றார் எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபால்

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநர் வேணுகோபால், புதன்கிழமை பணி ஓய்வு பெற்றார்.

இதனிடையே, வேணுகோபாலுக்கு 6 மாத காலம் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

மீரா மிஸ்ரா என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், இதய நோயால் பாதிக்கப்பட்ட எனது மகனுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் வேணுகோபால்தான் சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில் சிகிச்சை முடிவதற்குள் அவர் பணி ஓய்வு பெறவுள்ளார். இதனால் எனது மகனின் சிகிச்சை பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே, அவர் 6 மாதம் பணியில் நீட்டிக்க உத்தரவிட்டு உதவ வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி சிஸ்தானி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, எஸ்ம்ஸ் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற நிலையில் ஒரு நோயாளிக்காக இயக்குநர் வேணுகோபாலுக்கு பணி நீட்டிப்பு வழங்க இயலாது எனக் கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
 
 


இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி உடல்நிலை கவலைகிடம்

June 26th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அறிவிப்பு, மருத்துவம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பீல்டு மார்ஷல் மானேக்ஷா உடல்நிலை கவலைகிடம்

இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி பீல்டு மார்ஷல் மானேக்ஷா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கடந்த 1971_ம் ஆண்டு இந்திய ராணுவ தலமை தளபதியாக மானேக்ஷா இருந்தார். அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்தது. மேற்குபாகிஸ்தானில் இருந்து தனிநாடு கோரி கிழக்கு பாகிஸ்தானில் போராட்டம் நடந்தது. அதாவது தற்போது உள்ள வங்கதேசம்தான் கிழக்கு பாகிஸ்தானாகும்.

இந்த சுதந்திர போராட்டத்திற்கு இந்தியா தார்மீகமான முறையில் ஆதரவு அளித்தது. அப்போது பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடந்தது. சர்வதிகாரியாக இருந்த யாகியாகன் இந்தியா மீது 10 நாட்களில் போர் தொடுப்பேன் என்று கூறினான். அதன்படி 10_வது நாள் இந்தியா மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் தேவையில்லாமலும் வேண்டுமென்ற வலுக்கட்டாயமாக குண்டுகளை வீசின. அப்போது ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்பட பல மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்த இந்திரா காந்தி ரஷ்யாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டார். அவரது ராஜதந்திரமானது இந்தியாவை பல வழிகளிலும் காப்பாற்றியது. இந்திரா காந்தி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும் பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க உத்தரவிட்டார்.

இந்திய ராணுவமானது மனேக்ஷா தலமையில் பாகிஸ்தானை தாக்கத்தொடங்கியது. அவ்வளவுதான் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின. கராச்சி துறைமுகம் அடியோடு அழிந்தது. மேலும் வங்கதேசத்தில் இருந்த பாகிஸ்தான் படைகள் 10 லட்சம் பேரை இந்திய ராணுவம் சுற்றிவளைத்தது. இனியும் சரணடையாவிட்டால் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றுவிடும் என்று கருதிய பாகிஸ்தான் படைகள் 10 லட்சம்பேரும் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். வங்கதேசம் தனி நாடு என்று பிரகடனம் செய்தது.

பாகிஸ்தானின் பரிதாபத்தை பார்த்த இந்திராகாந்தி தானாகவே முன்வந்து சண்டையை நிறுத்த இந்திய ராணுவத்திற்கு உத்தரவிட்டார். சண்டையில் ராஜதந்திரத்துடன் போரிட்டு வெற்றிபெற்று இந்தியாவுக்கு பெருமையை தேடிக்கொடுத்ததற்காக மானேக்ஷாவுக்கு பீல்டு மார்ஷல் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்படிப்பட்ட மாவீரன் மானேக்ஷாவுக்கு தற்போது 94 வயதாகிறது. அவருக்கு நுரையீரல் நோய் ஏற்பட்டுள்ளது. அவர் ஞிலகிரி மாவட்டம் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு டெல்லியில் இருந்து நுரையீரல் நோய் நிபுணர் வந்து சிகிச்சை அளித்து வருகிறார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இருந்தபோதிலும் சிகிச்சை நல்ல பலன் அளித்து வருவதாக ராணுவ கமாண்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


பெங்களூருவில் ஆசியாவில் முதல் செயற்கை இதய துணைகருவி அறுவைசிகிட்சை சாதனை

April 11th, 2008 பகுப்புகள்: மருத்துவம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

பெங்களூருவின் நாராயணா இருதயாலயாவில் 54 வயது மனிதருக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக செயற்கை இதய கருவி பொருத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மின்சார வாரியத்தில் வேலைபார்த்த வெங்கடகிருஷ்ணைய்யாவிற்கு ஐந்து வருடங்களாக இதயம் பழுதடைந்திருந்தது. அவருக்கு நாராயணா இருதயாலாவில் இடது வெண்டிரிக்கிளுக்கு துணைபுரியும் கருவியை பொருத்த முடிவு செய்தனர். இந்தக் கருவி இதயத்திற்கு அதிக இரத்தம் பாய்வதை உறுதி செய்கிறது. அதனை இயக்கும் மின்கலத்தையும் கட்டுப்பாட்டுக் கருவியையும் அவர் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். இந்த சிகிட்சையின் பின்னர் யாருடைய உதவியும் இன்றி நடமாடவும் படிகள் ஏறவும் முடிகிறது.

இரண்டு கோடி பேர் இதயம் வேலைசெய்யாது அவதிப்படும் நாட்டில் இந்த அறுவை சிகிட்சை முறை மிகவும் முக்கியமானதொன்று. வளர்ந்து வரும் வைத்திய சுற்றுலாவிற்கும் இது துணை போகும்.

Bangalore hospital conducts first artificial heart transplant


இந்தியாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்

April 8th, 2008 பகுப்புகள்: மருத்துவம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

இந்தியாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்

 

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில், பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு சுமார் இருபதாயிரம் பறவைகளை கொன்றொழிக்குமாறு கால்நடை மருத்துவ அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

வங்கதேசத்துடனான, எல்லைப்பகுதியில் இருக்கின்ற தளாய் என்ற மாவட்டத்தில் சுமார் 20 கிராமங்களில், பறவைக்காய்ச்சல் வைரஸான எச்.5.என்.1 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

திரிபுராவில் பறவைகளை கொன்றொழிக்கும் நடவடிக்கைகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகும்.

இந்த வருடத்தில், இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் பரவிய இரண்டாவது மாநிலம் இதுவாகும்.


முட்டை தின்றால் மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கலாம்

April 5th, 2008 பகுப்புகள்: உடல்நலம், பெண்கள், மருத்துவம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

உணவில் முட்டை உண்பதை அதிகரித்தால் அதிலுள்ள கோலைன் (choline) என்ற வேதிப்பொருளால் மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூற்றினை 24% வரை குறைக்க முடியும் என ஆய்வொன்று கூறுகிறது. வட கரோலினா பல்கலை.யில் ஸ்டீவன்  செய்சல் (Steven H Zeisel, MD, PhD, University of North Carolina) தலைமையில் நிகழ்த்தப்பெற்ற இந்த கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில் மார்பக புற்றுநோயின் வரவினை குறைப்பதற்கும் முட்டை உண்பதற்கும் இடையேயான இணைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கோலைன் என்ற வேதிப்பொருள் செல்கள் இயல்பாக செயல்பட உதவுவதாக செய்சல் கூறினார். இந்த செயல்பாடு அனைத்து வயது,பாலின மக்களுக்கும் பொதுவானதாக இருப்பினும் பெண்களுக்கு, அதுவும் குழந்தை பெறக்கூடிய வயதுள்ளவர்களுக்கு, மிகவும் முக்கியமானதாக உள்ளது என்றும் அவர் கூறினார். ஒரு முட்டையில் 125.5 மி.கிராம் கோலைன் உள்ளது,இது ஒருநாளுக்கு ஒருவருக்கு தேவைப்படும் அளவில் கால்பங்காகும்.முட்டையின் மஞ்சள்கருவில் கிடைக்கிறது. கோலை கிடைக்கும் மற்ற உணவுப் பொருட்கள்: ஈரல், கோதுமை கருப்பகுதி, காலிபிளவர் பூ. கோலைன் பிறப்பு குறைகளை தவிர்ப்பதுடன் நினைவாற்றலை வளர்க்கவும் இதயநோய்களை தடுக்கவும் பயனாகிறது.

Eating eggs reduces breast cancer risk


‘கட்டாய கிராமப்புற சேவை விரைவில் அறிவிக்கப்படும்’: அன்புமணி ராமதாஸ்

March 2nd, 2008 பகுப்புகள்: உடல்நலம், கல்வி, சமூகம், மருத்துவம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மருத்துவ மாணவர்களுக்கான கட்டாய கிராமப்புற சேவை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மருத்துவ மாணவர்களுக்கான கட்டாய கிராமப் புற சேவை குறித்த, டாக்டர் சாம்பசிவராவ் குழுவின் அறிக்கை மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்படும்.

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய கிராமப் புற சுகாதார திட்டம் நல்ல பலனைக் கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் ஆரம்ப சுகார நிலையங்களில் 77,000 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இத்திட்டத்தை தமிழகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் கூடுதல் நிதி, உள்கட்டமைப்பு வசதிகள், செவிலியர் பணி நியமனம் ஆகியவற்றை செய்து தர மத்திய அரசு தயாராக உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்துக்காக ரூ.1,403 கோடி செலவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கு ரூ.433 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வளர்ந்து வரும் நாடுகளுக்கு முன்னோடியாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

நன்றி: தினமணி


ஆஸ்திரேலியாவில் விருது பெற்ற தமிழ்நாட்டு டாக்டருக்கு சேலத்தில் பாராட்டு விழா

February 24th, 2008 பகுப்புகள்: ஆஸ்திரேலியா, மருத்துவம், விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஆஸ்திரேலியாவில் விருது பெற்ற தமிழ்நாட்டு டாக்டருக்கு சேலத்தில் பாராட்டு விழா

ஆஸ்திரேலியாவில் மருத்துவத்துறையில் சிறந்த சேவைக்காக அந்நாட்டின் உயரிய விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் லட்சுமணனுக்கு சேலம் இந்திய மருத்துவச் சங்க கட்டிடத்தில் நேற்று பாராட்டு விழா நடைப்பெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் லட்சுமணன் இவர். சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவ க்கல்லூரியில் கடந்த 1958 ஆம் வருடம் படித்தார். இவருடன் மொத்தம் 108 மாணவர்கள் அங்கு படித்தனர். இவர் பின்பு 1970 வருடம் ஜூன் மாதம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று பல மருத்துவமனைகளில் கண் டாக்டராக பணிபுரிந்தார். பின் ஆஸ்திரேலியாவிலேயே நிரந்தரமாக தங்கி மருத்துவச் சேவைகளை செய்தார். இதற்காக அந்த நாட்டு அரசாங்கம் அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டன் ஆப் ஆஸ்திரேலியா மெடல் என்ற விருதை வழங்கி கௌரவித்தது. இதனால் அவரது புகழ் இந்தியா முழுவதிலும் பரவியது.

http://www.thinaboomi.com/2008/feb/24/districts/district44.php
 


சிறுநீரகத் திருட்டு வழக்கில் திருப்பம்

February 19th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சமூகம், மருத்துவம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

நேபாளத்தில் கைதாகிய டாக்டர் அமித் குமார் உட்பட்ட சிறுநீரக்த் திருட்டு வழக்கில் காவல் துறையிடம் வழக்கு பதிவு செய்த பப்பு ஜட்டவ் எனப்படுகிறவரின் இரு சிறுநீரகங்களும் சரியாக, சுகாதாரமான நிலையில் இருப்பதாக மருத்துவ சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஜட்டவ் தன் சிறுநீரகம் திருடப்பட்டதாக அளித்த புகாரின் பேரில்தான் அமித் குமார் உட்பட்ட சிறுநீரகத் திருட்டு கும்பல் கைது செய்யப்பட்டது.

Kidney Racket: Test finds complainant’s kidneys intact -The Hindu


காலால் உதைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை!

February 16th, 2008 பகுப்புகள்: மருத்துவம் | தொகுப்பாளர்: லக்கிலுக் | மறுமொழிகள் இல்லை » |

நோயா‌ளிகளை‌க் காலா‌ல் உதை‌த்து‌‌க் குண‌ப்படு‌த்து‌ம் ‌வினோதமான ‌சி‌கி‌ச்சையை செ‌‌‌ய்யு‌ம் ஒருவரை‌ உ‌ங்க‌ள் பா‌ர்வை‌க்கு கொ‌ண்டு வரு‌கிறோ‌ம். ச‌த்‌தீ‌ஷ்க‌ர் மா‌நில‌த்‌தி‌ல் உ‌ள்ள ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த் எ‌ன்பவ‌ர் தனது இ‌ந்த‌ச் ‌சி‌கி‌ச்சை‌யி‌ன் மூல‌ம் எ‌ந்த நோயையு‌ம் குண‌ப்படு‌த்த முடியு‌ம் எ‌ன்‌கிறா‌ர்.

இ‌ந்த‌ச் செ‌ய்‌தியை நா‌ங்க‌ள் அ‌றி‌ந்தவுட‌ன், இதுப‌ற்‌றி தெ‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்காக‌ச் ச‌த்‌தீ‌ஷ்கரை நோ‌க்‌கி‌ப் பய‌ணி‌த்தோ‌ம். மா‌நில‌த்‌தி‌ன் தலைநக‌ர் ரா‌ய்‌ப்பூ‌‌ரி‌ல் இரு‌ந்து 75 ‌கி.‌மீ. தொலை‌விலு‌ம், த‌ம்த‌‌ரி நக‌ரி‌ல் இரு‌ந்து 35 ‌கி.‌மீ. தொலை‌விலு‌ம் உ‌ள்ள லேட‌ர் எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌ல்தா‌ன் ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த் இரு‌க்‌கிறா‌ர்.

லேடரை நா‌ங்க‌ள் அடை‌ந்தது‌ம், த‌ங்க‌ள் நோ‌ய்‌க்கு‌ச் ‌சி‌கி‌ச்சை பெறுவத‌ற்காக‌க் குழு‌மி‌யிரு‌ந்த ஆ‌யிர‌க்கண‌க்கான அ‌ப்பா‌வி ம‌க்களை‌க் க‌ண்டோ‌ம். சி‌றிது நேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு, ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த் ஒரு மர‌த்‌தி‌ற்கு அடி‌யி‌ல் வ‌ந்து அம‌ர்‌ந்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் ஒ‌‌வ்வொரு நோயா‌ளியாக அழை‌த்து‌க் காலா‌ல் உதை‌த்து‌ம் கையா‌ல் கு‌த்‌தியு‌ம் தனனுடைய ‌சி‌‌கி‌ச்சையை‌த் துவ‌ங்‌கினா‌ர். ‌ம‌ற்றவ‌ர்க‌ள் த‌ங்க‌ளி‌ன் முறை‌க்காக ‌நீ‌‌ண்ட வ‌ரிசை‌யி‌ல் கா‌த்‌திரு‌ந்தன‌ர்.

மூ‌ன்று ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்‌பு ‌விவசாய‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்த போது, தா‌ன் க‌ண்ட கன‌வி‌ல் தோ‌ன்‌றிய தெ‌ய்வ‌ம், இ‌ந்த முறை‌யி‌ல் ம‌க்களை கு‌ண‌ப்படு‌த்துமாறு தன‌க்கு அரு‌ளியதாக ம‌ன்சாரா‌ம் ‌‌நிஷா‌த் கூறு‌கிறா‌‌ர். இதை‌விட, தா‌ன் பல ஆ‌ண்டுகளாக எதையு‌ம் சா‌ப்‌பிட‌வி‌ல்லை எ‌ன்று அவ‌ர் கூறுவதுதா‌ன் ‌மிகவு‌ம் ஆ‌ச்ச‌ரிய‌ம் ஆகு‌ம். இதனா‌ல், ஒ‌வ்வொரு கடவு‌ளி‌ன் ச‌க்‌தியு‌ம் தன‌க்கு‌க் ‌கிடை‌ப்பதாக அவ‌ர் கூறு‌கிறா‌ர்

கூடி‌யிரு‌ந்த நோயா‌ளிகளை நா‌ங்க‌ள் ச‌ந்‌தி‌த்தபோது, அவ‌ர்க‌ளி‌ல் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் முத‌ல்முறை வ‌ந்தவ‌ர்க‌ள் எ‌ன்பது தெ‌ரி‌‌ந்தது. அவ‌ர்க‌ள் த‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்தவ‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ளி‌ன் மூல‌ம் ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த்தை‌ப் ப‌ற்‌றி‌க் கே‌ள்‌வி‌ப்ப‌ட்டு வ‌ந்‌திரு‌ந்தன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த்‌தி‌ன் ‌சி‌கி‌ச்சை‌யினா‌‌ல் தா‌ங்க‌ள் குணமடை‌ந்ததாக‌ச் ‌சில‌ர் கூறு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல், அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் அ‌ப்படி‌க் கூறுமாறு சொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்களாகவே தெ‌ரி‌கிறது.

‌நிறைய நோயா‌ளிக‌ள் ‌சி‌கி‌ச்சை‌க்கு வர‌த் துவ‌ங்‌கிய‌தி‌ல் இரு‌ந்து, பு‌திதாக உணவக‌ங்களு‌ம் கடைகளு‌‌ம் இ‌ங்கு பெருக ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டதையு‌ம் எ‌ங்களா‌ல் காண முடி‌ந்தது.

ம‌ன்சாரா‌ம் தனது ‌சி‌கி‌ச்சை அனை‌த்தையு‌ம் க‌ட்டண‌மி‌ன்‌றி இலவசமாக வழ‌ங்குவதாக நோயா‌ளிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர். ஆனா‌ல், ம‌க்க‌ள் கா‌ணி‌க்கையாக பண‌த்தையு‌‌ம் பொரு‌ட்களையு‌ம் அ‌ளி‌க்‌கி‌ன்றன‌ர். ஒ‌வ்வொரு நோயா‌ளியு‌ம் த‌ங்க‌ள் ‌சி‌‌‌கி‌ச்சை‌க்காக மூ‌ன்று முறை வரவே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த் கூறு‌கிறா‌ர். மூ‌ன்று முறையு‌ம் கா‌ணி‌க்கை தர‌ப்படு‌கிறது.

அ‌ங்கே கூடி‌யிரு‌ந்த நோயா‌ளிக‌ளி‌ல் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் படி‌க்காதவ‌ர்களாகவு‌ம், ஏழைகளாகவு‌ம் மரு‌த்துவ வச‌திகளை‌ப் ப‌ற்‌றி அ‌றியாதவ‌ர்களாக‌வு‌ம் இரு‌ந்தன‌ர். இதனா‌ல், அவ‌ர்க‌ள் ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த்தை ந‌ம்பு‌கி‌ன்றன‌ர் எ‌ன்பதை நா‌ங்க‌ள் க‌ண்டோ‌ம்.

மூலம் : வெப்துனியா.


சிறுநீரகத் திருட்டு: அமித் குமார் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார்

February 9th, 2008 பகுப்புகள்: இந்தியா, கைது, மருத்துவம், மோசடி | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

அண்மையில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய பல கோடி மோசடி செய்த சிறுநீரக திருட்டு கும்பலின் முதன்மை குற்றவாளி மருத்துவர் அமித் குமார் நேபாளத்தில் கைதாயிருந்தார். தற்போது சி.பி.ஐ அவரை டெல்லி கொண்டுவந்துள்ளது.

நேபாள காவல் துறையினரிடம் அமித் குமார் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்ய வந்தவர்களிடம் ஒருகோடி வரை லஞ்சம் தர பேரம் பேசியதாக நேபாள போலிஸ் தெரிவித்தது.