சுற்றுச்சூழல் | சற்றுமுன்...




இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, உடல்நலம், சுற்றுச்சூழல், மருத்துவம், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளது என்று பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் கூறினார்.

பாராட்டு விழா

கடந்த 2006-ம் ஆண்டு “வாருங்கள் கிராமம் செல்வோம்” என்ற திட்டத்தை கிராமப்புறங்களில் செயல்படுத்தி சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக திருச்சி டாக்டர் அஷ்ரப்பிற்கு மருத்துவ துறையில் தேசிய அளவில் மிக உயர்ந்த விருதான பி.சி.ராய் விருது வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

விழாவிற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு திருச்சி கிளை தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர் குணசேகரன், டாக்டர்கள் ஞானதிலகன், கலைக்கோவன், எஸ்.எம்.ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் அஷ்ரப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கிராமங்கள் தத்தெடுப்பு

ஒரு நாள் மருத்துவ முகாம்கள் நடத்துவதால் கிராமப்புற மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் செல்ல வேண்டும். வியாதிக்கான மருந்துகள் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும். இந்திய மருத்துவ கூட்டமைப்பில் 2500 கிளைகள் உள்ளன. இதன் மூலம் 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளோம்.

கடந்த 60 வருடத்தில் நாம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியால் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளுக்கிடையே இடைவெளி நீடிக்கிறது. டாக்டர்களின் அணுகுமுறை நோயாளிகளிடம் சிறந்ததாக இருக்க வேண்டும். சாலை விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். நான் அடுத்ததாக சாலை விபத்துக்கள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் கீதாராமனுஜம் நன்றி கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=426581&disdate=7/20/2008&advt=2


அலட்சியத்தால் வீழ்ச்சி அடைந்துவரும் தமிழக கதர் வாரியம்!

July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், அறிவிப்பு, சமூகம், சுற்றுச்சூழல், தொழில், பொருளாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அலட்சியத்தால் வீழ்ச்சி அடைந்துவரும் தமிழக கதர் வாரியம்!

அதிகாரிகளின் அலட்சியத்தால் தமிழக கதர் வாரியம் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த கதரின் பெருமையை நாடு உணர்ந்திட அமைக்கப்பட்ட வாரியத்தின் வீழ்ச்சியைக் கண்டு நாட்டுப் பற்றாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தோடு, 1960 - ம் ஆண்டு தமிழ்நாடு கதர் வாரியம் தொடங்கப்பட்டது.

தேன், சோப்பு உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை தரத்துடன் தயாரித்து விநியோகித்து வருகிறது. ஆனால், நலிந்துவரும் இந் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் இப்போது மெதுவாக மூடப்பட்டு வருகின்றன.

“”கைமுறை காகிதங்கள் தயாரிக்கும் 20 யூனிட்டுகளில் தற்சமயம் இரண்டு யூனிட்டுகள் மட்டுமே செயல்படுகின்றன. மூடிய யூனிட்டுகளை உயர் நீதிமன்றம் திறக்க உத்தரவு பிறப்பித்தும் இதுவரை திறக்கவில்லை.

19 சோப்பு யூனிட்டுகளில் இரண்டைத் தவிர மீதி யூனிட்டுகளில் வேலை செய்பவர்களுக்கு மாதத்தில் 7 அல்லது 10 நாள்கள் மட்டுமே வேலை உள்ளது. இதனால் இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தினக்கூலிகள் போல் சம்பளம் கொடுக்கிறார்கள். சோப்பு உற்பத்தியாளர்களை நிரந்தரம் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் வழக்கை 23 ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினார் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.சந்திரசேகரன்.

பெயரளவுக்கு மட்டுமே… வணிகம் அல்லாத அலுவலகப் பணிகள் செய்யும் ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசு கொடுக்கிறது. ஆனால் துறையின் முன்னேற்றத்துக்கும் வருமானத்துக்கும் காரணமான உற்பத்தியாளர்களையும், தொழிலாளர்களையும் உற்பத்தி செய்த பொருள்களை விற்றால்தான் சம்பளம் என வாரியம் அறிவித்தது.

“”கதர் நூல் நூற்பு ஆலைகளும் பெயரளவில் செயல்பட்டு வருகின்றன. மூத்த கதர் நெசவாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குகிறது. மேலும் அவர்கள் மாதம் ரூ.5 ஆயிரத்துக்கு தேன், சோப்பு முதலிய மற்ற பொருள்களை விற்றால்தான் அந்த ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

இதனால் பலர் இத்தொழிலை கைவிட்டு விட்டனர். ஆனால் கதர் வாரியமானது வெளியிலிருந்து கதர் துணிகளை வாங்கி கதரின் முத்திரை வைத்து விற்கிறது. அதிகாரிகளின் மெத்தனப்போக்கே கதர் வாரியத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்” என்றார் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.எல்.ஸ்ரீதர்.

பல கதர் நூற்பு ஆலைகள் மூடப்பட்டுவிட்டதால் கதர் வாரியம் வெளியிலிருந்து கதர் துணிகளை வாங்கி கதரின் முத்திரை வைத்து விற்கப்படுகிறது. அதே போன்று கதர் வாரியத்தின் மற்ற பொருள்கள் தனியாரிடம் கொடுத்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“”கதருக்கு என தனித்துறை இருந்தும் தொழிலாளர்களுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை. லட்சக்கணக்கில் இருந்த தொழிலாளர்கள் இன்று ஆயிரக்கணக்காகக் குறைந்து விட்டனர். அதிகாரிகளின் முறையற்ற நிர்வாகம்தான் இதற்கு காரணம்”" என்றார் சந்திரசேகரன்.

என்ன செய்யலாம்…? அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகளை நீக்க வேண்டும். கதர் துறையை முன்னேற்றும் நோக்குடன் செயல்படும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் கிராம மக்கள் மத்தியில் மறுமலர்ச்சி ஏற்படும். கதர் வாரியமும் அதன் வீழ்ச்சியில் இருந்து மீளும்.

மருத்துவமனைகளில் சோப்பு, ஃபினாயில் போன்ற பொருள்கள் தனியாரிடமே வாங்கப்படுகின்றன. கதர் வாரியத்தின் உற்பத்திப் பொருள்களை அரசுத் துறைகள் அனைத்தும் வாங்கிவிட்டாலே வாரியம் வீழ்ச்சியில் இருந்து மீண்டுவிடும் என்று தொழிலாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். ஏற்றுக் கொள்ளுமா அரசு?


உணவு விலை உயர்வுக்கு சீனா, இந்தியா காரணம் - EU

May 6th, 2008 பகுப்புகள்: இயற்கை, உலகம், சுற்றுச்சூழல் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

ஐரோப்பிய ஒன்றியத்தின் வேளாண்மை கமிஷனர் பேட்டி ஒன்றில் இந்தியா சீனாவில் மக்களின் உணவுப்பழக்கங்கள் மமறி வருவதே உணவு விலை எஏற்றத்திற்குக் காரணம் என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியா சீனனவில் மாமிசம் உட்கொள்வது அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மாறிவரும் தட்பவெப்பம் இன்னொரு காரணி என இவர் தெரிவித்துள்ளார்.

India, China eating meat, pushing up food prices: EU - IBNLive


மியன்மார் சோகம்: 22000 பேர் பலி 41000பேரைக் காணவில்லை

May 6th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை, உலகம், வானிலை | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

மியன்மாரில் நர்கிஸ் சூறாவளிக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 22000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் 41000பேரைக் குறித்த தகவல்கள் எதுவுமில்லை. மொத்த உயிரிழப்பு இன்னும் அதிகமாயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உலகெங்கிலுமிருந்தும் உதவிகள் வரத்துவங்கியுள்ளன.

அரசாங்கம் மக்களை புயலின் தீவிரம் குறித்து எச்சரிக்கை செய்யவில்லை எனூம் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. சீனா, கனடா, செக் குடியரசு, இங்கிலாந்து உட்பட்ட பல நாடுகளும் உதவி வழங்க மூன்வந்துள்ளன.

Over 22,000 dead, 41,000 missing in Myanmar cyclone - The Hindu


மியன்மார் சூறாவளி: 4000பேர் பலி

May 5th, 2008 பகுப்புகள்: ஆசியா, உலகம், சுற்றுச்சூழல், வானிலை | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

மியன்மாரில் வீசிய சூறாவளியில் இதுவரை 4000பேர் பலியாகியிருக்கலாம் என அங்குள்ள வானொலி நிலையம் கணித்துள்ளது. நர்கிஸ் என அழைக்கப்பட்ட சூறாவளியில் 350பேர் இறந்திருக்கலாம் என அறிவித்த மியன்மார் அரசு தற்போது இறந்தவர் எண்ணிக்கையை 3939ஆக அறிவித்துள்ளது.

இந்தியா மியன்மாருக்கு நிவாரணப் பொருகளை அனுப்பிவைத்துள்ளது.

Myanmar radio says cyclone death toll nears 4,000 - The Hindu

India sends two naval ships carrying relief to storm-hit Myanmar - The Hindu


தமிழகத்தில் மழை : பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

March 25th, 2008 பகுப்புகள்: இயற்கை, பொருளாதாரம், மரணம், வணிகம், வானிலை, விவசாயம், வெள்ளம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மழைக்கு மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக பெய்துவரும் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், மாநிலம் முழுவதும் மிகுதியாக பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், முழுமையான பயிர் சேதம் குறித்து வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் 1,500 ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் இன்னும் வடியாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நன்றி: யாஹு

மேலும் விவரங்களுக்கு:

1. Toll in rain-related incidents in Tamil Nadu rises to 27

2. Heavy rains hit crops in South :: Financial Express

3. :: News on AIR ::: “Rains play havoc in Karnataka; 13 killed”


10 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்த வடமாநிலங்கள்

March 7th, 2008 பகுப்புகள்: இந்தியா, இயற்கை, இரயில், பொருளாதாரம், போக்குவரத்து, வானிலை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

தலைநகர் தில்லி உள்பட வடமாநிலங்களில் கடுமையான பனிப் பொழிவு காரணமாக வெள்ளிக்கிழமை 10 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்விநியோகம் தடைபட்டது. இதனால் ரயில் சேவை உள்பட பல முக்கியப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தில்லி, ஹரியாணா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி மக்கள் இந்த திடீர் மின்தடையால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளானார்கள். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது:

வடமாநிலங்களில் தற்போது பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகளில் தூசுகள் கலந்த பனி படிந்ததால் கம்பிகளில் தீப்பொறிகள் ஏற்பட்டு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

பனிக்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பானதுதான். ஆனால் இந்த ஆண்டு மிகநீண்ட நேரத்திற்கு மின்சாரம் தடைபட்டு விட்டது. அதிகாலை 4 மணியளவிலும் காலை 6 மணிக்கும் இருமுறை மின்சாரம் தடைபட்டது. காலை 10.30 மணிக்கு மீண்டும் மின்விநியோகம் சீரடைந்தது.

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றனர். மின்விநியோகத்தில் பலமணிநேரம் தடை ஏற்பட்டதால் புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான பயணிகள் பல மணிநேரம் ரயில்நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

முந்தைய சற்றுமுன் | நன்றி: தினமணி



அமெரிக்காவின் தென் பகுதியில் சூறாவளித் தாக்குதல்

February 7th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, மரணம், வானிலை, வெள்ளம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

புயலுடன் கூடிய சூறாவளி வீசியதன் காரணமாக நான்கு தெற்கு அமெரிக்க மாநிலங்களில் கடும் நாசம் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அர்கென்சாஸ், கென்டக்கி, மிசிசிப்பி மற்றும் டென்னிச்சி ஆகிய மாநிலங்களில் வீசிய புயல் காற்று வாகனங்களைப் புரட்டிப் போட்டதுடன், வீடுகளுக்கும் கடும் சேதங்களை விளைவித்தது. மாணவர்கள் தங்குமிடம், மற்றும் வயதானவர்கள் தங்குமிடங்களில் பலர் புயலில் சிக்குண்டனர். மெம்பிஸ்சில், புயல் காற்று ஒரு வணிக வளாகத்தின் ஒரு பகுதியை உடைத்தது. டென்னிசியில் உள்ள ஒரு எரிவாயு ஏற்று நிலையத்தில் ஏற்பட்ட தீ 100 மீட்டர் உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Toll of Deadly Tornadoes in South Climbs Past 50 - New York Times

2. BBC NEWS | Americas | Tornado clear-up under way in US

3. Baby found alive in field as US tornado death toll rises to 55 | Special reports | Guardian Unlimited


கொல்கத்தாவில் 26பேருக்கு பறவைக் காய்ச்சல்?

February 1st, 2008 பகுப்புகள்: இயற்கை, உடல்நலம், சுற்றுச்சூழல், மருத்துவம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட கோழிகளை கொல்லும் பணியில் ஈடுபட்டிருந்த 26பேருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல் முதலிய அறிகுறிகள் இருந்ததால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்ட சோதனையில் பறவைக் காய்ச்சல் இல்லை என தெரியவந்துள்ளபோதும் மேலும் சோதனைகள் முடியும்வரை இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள் எனத் தெரிகிறது.

பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களைத் தொற்றும் பரிணாம மாற்றம் பெறுமேயானால் அவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயார்நிலையில் வைக்கப்படுகின்றன.

26 bird flu suspects isolated -DNA India


கொல்கொத்தா புத்தக கண்காட்சிக்குத் தடை

January 29th, 2008 பகுப்புகள்: கலை-இலக்கியம், சுற்றுச்சூழல், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: மணியன் | 2 மறுமொழிகள் » |

துவங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே கொல்கொத்தா பார்க் சர்கஸ் மைதானத்தில் அமைக்கப்பட்ட 33வது புத்தக கண்காட்சியை சுற்றுச்சூழல் மாசடைவதைக் காரணம் காட்டி கொல்கொத்தா உயர்நீதிமன்றம் தடை செய்தது. கண்காட்சியை நடத்தும் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்திற்கும் அனுமதி வழங்கிய மாநகராட்சிக்கும் மறைமுக ஆதரவளித்த மாநில அரசிற்கும் பெருத்த அதிர்ச்சியாக இத்தீர்ப்பு அமைந்தது.

சென்ற இரு வருடங்களாகவே புத்தக கண்காட்சி மைதானத்தில் அமைவது சர்ச்சைக்கு உள்ளாகி வந்திருக்கிறது. சென்ற வருடம் சால்ட் லேக் விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டது.ஆனால் நகரிலிருந்து தள்ளியிருந்ததால் சென்ற வருட மக்கள் வருகை மிகவும் குறைந்திருந்தது. நகரின் மத்தியில் விக்டோரியா மெமொரியல் அருகே அமைந்துள்ள பரந்த மைதானம் மாசடைவது குறித்து அதிகார மையத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாவலர்களுக்கும் இடையே தொடர்ந்துவரும் போராட்டத்தின் விளைவே இன்றைய தீர்ப்பு. நவம்பர் 2003இலேயே மாநில அரசு இத்தைகைய கண்காட்சிகள் மைதானத்தில் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டு கிழக்கு மாநகர புறவழிச்சாலையில் ஒரு நிரந்தர காட்சியரங்கம் ஏற்படுத்த நீதிமன்றத்திற்கு உறுதிமொழி அளித்திருந்தது.

பதிப்பாளர் சங்கத்தையும் கொல்கொத்தா மாநகராட்சியையும் உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது. கண்காட்சியை நடத்துவது காற்று மாசடைதல்,ஒலி மாசடைதல் மற்ற மாசைடைதல் சட்டங்களுக்குப் புறம்பானது என தலைமை நீதிபதி எஸ் எஸ் நிஜ்ஜர் மற்றும் பினாகி சந்திர கோஷ் அடங்கிய உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஸ்டால்கள் நீக்கப்பட்டு உடனே பழைய நிலைக்கு திருப்பி மாநகராட்சியிடம் வழங்க சங்கத்திற்கு உத்தரவிட்டது.

மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்ய இயலாநிலையில் தங்கள் பெயர் கெடுவதுடன் கோடிக்கணக்கான பணை இழப்பையும் பதிப்பாளர் சங்கம் எதிர்நோக்கியுள்ளது. மாநகர தந்தை பிகாஷ் ரஞ்சன் பட்டசார்யா மிகவும் கோபமாக பெரும்பான்மை மக்களின் ஆசைகளை மிகச்சிலரின் திருப்திக்காக அமைந்த தீர்ப்பு என்று கூறினார். மாநகரின் புகழையும் பெயரையும் சிதைக்கும் தீர்ப்பு என்றும் மாசடைவதைக் கணக்கில் கொண்டால் உயர்நீதிமன்ற வளாகம் கூட வாகன நடமாட்டத்தால் மாசடைகிறது, அதற்காக உயர்நீதிமன்றத்தை மூடவேண்டும் என்றும் கூறினார்.முதலமைச்சர் இது துரதிருட்டமானது என்று கூறினார்.

வெளிநாட்டிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளுக்கு கண்காட்சி இரத்து செய்யப்பட்டுள்ளதும் குழப்பமான சூழல் நிலவுவதும் தெரிவிக்கப்பட்டது.

Kolkata Book Fair banned


தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை

January 20th, 2008 பகுப்புகள்: உடல்நலம், சுகாதாரம், சுற்றுச்சூழல், மருத்துவம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இரா.அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அரிக்கையில் மேற்கு வங்காளத்தில் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதிலும் பறவை காய்ச்சல் பீதி நிலவுகிறது.

மேற்கு வங்க பாதிப்பு தமிழகத்தில் இல்லை. பறவை காய்ச்சல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம் எனவும். பறவை காய்ச்சல் வராமல் இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு பாதுக்காப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது என்‌றார்.


‘கார்கில்’ பெயர், படத்துடன் போதை பொருள் விற்பனை: மக்கள் ஆதங்கம்

January 15th, 2008 பகுப்புகள்: உடல்நலம், சுற்றுச்சூழல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

 ’கார்கில்’ பெயர், படத்துடன் போதை பொருள் விற்பனை: மக்கள் ஆதங்கம்

தேசப்பற்றை பறைசாற்றும் கார்கில் போரை கொச்சைபடுத்தும் வகையில் அதன் பெயர், படத்துடன் போதை பாக்கு விற்பனை ராமநாதபுரம் மாவட்டத்தில் அமோகமாக நடந்து வருகிறது. 1999 ல் நடந்த கார்கில் போர் இன்று நம் மனதில் நிழலாடுகிறது. ஒருபிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம் என ராணுவத்தினர் கடும் போர் புரிந்து இந்திய மண்ணுக்கு வலு சேர்த்தனர். தேசப்பற்றை பறைசாற்றும் சின்னமாக கார்கில் உள்ள நிலையில் தற்போது கார்கில் போரை குறிக்கும் படத்துடன் “குட்கா பாக்கை’ (தடைசெய்யப்பட்ட போதைபொருள்) தாங்கும் அட்டையாக விற்பனைக்கு வந்துள்ளன. 50 பைசாவுக்கு விற்கப்படும் இந்த பாக்கின் அட்டையில் கார்கில் போர் பீரங்கி இருப்பது போன்ற படம் பொறிக்கப் பட்டுள் ளது. இது மட்டுமன்றி அந்த பாக்குக்கு “கார்கில் குட்கா’ எனவும் பெயரிட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற போதை பொருளுக்கு கார்கில் பெயர் வைத்துள்ளது இந்திய மண்ணை நேசிக்கும் பலருக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவத்தினரையும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களையும் கொச்சைபடுத்தும் விதமாக உள்ள இந்த பாக்கு ராமநாதபுரம் மாவட் டம் முழுவதும் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. கார்கில் பெயர் தாங்கி வரும்இதை தடைசெய்ய வேண்டும் என்பதே தேசபற்று உள்ளவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

www.dinamalar.com