நிலநடுக்கம் | சற்றுமுன்...




சீனாவில் 7.8 அளவு நிலநடுக்கம்

May 12th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை, நிலநடுக்கம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

சீனாவில் தென்மேற்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பள்ளி கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்தன.

‘Thousands dead’ in Chinese quake - BBC


இந்தோனேசியாவில் நிலநடுக்கம், மூவர் மரணம்

February 20th, 2008 பகுப்புகள்: இயற்கை, நிலநடுக்கம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

இந்தோனேசியாவின் மேற்குபகுதியில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு மூவர் மரனமடைந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.முன்னதாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டாலும் கடல் கொந்தளிப்பு எதுவும் காணப்படவில்லை. 2004 சுனாமி ஏற்படுத்திய மேற்கு சுமத்ராவைச் சேர்ந்த சிமுவல் தீவை மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் தரவரிசையில் 7.6 இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வக முதல் அனுமானம் கூறுகிறது.

Quake kills 3, injures 25 others in Indonesia


இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

December 1st, 2007 பகுப்புகள்: நிலநடுக்கம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை  கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியிருந்ததாக அந்நாட்டு புவியியல் துறை தெரிவித்தது. சுமத்ரா தீவில் உள்ள சிப்லாகாவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சுனாமி ஆபத்து இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. முழுமையான சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.


தில்லியில் நிலநடுக்கம்: சேதம் எதுவும் இல்லை

November 26th, 2007 பகுப்புகள்: இயற்கை, நிலநடுக்கம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

தில்லி மற்றும் சுற்றுவட்டார உபி ஹர்யானா மாநிலப்பகுதிகளில் இன்று விடிகாலை 4:42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேறச் செய்தது. ரிக்டர் அளவுகோலில் 4.3 என வானிலை நிலையத்தால் அளவிடப்பட்டாலும் ஹரியானா-தில்லி எல்லையில் மையம் கொண்டிருந்ததால் நடுக்கத்தை மக்கள் கடுமையானதாகவே உணர்ந்தனர். உறக்கத்திலிருந்த மக்கள் சிலநொடிகள் ஆடிய கட்டிடங்களின் அதிர்வினால் விழித்துக் கொண்டனர். இதுவரை சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

The Indian express