சீனாவில் தென்மேற்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பள்ளி கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்தன.
May 12th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை, நிலநடுக்கம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |
சீனாவில் தென்மேற்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பள்ளி கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்தன.
May 6th, 2008 பகுப்புகள்: இயற்கை, உலகம், சுற்றுச்சூழல் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |
ஐரோப்பிய ஒன்றியத்தின் வேளாண்மை கமிஷனர் பேட்டி ஒன்றில் இந்தியா சீனாவில் மக்களின் உணவுப்பழக்கங்கள் மமறி வருவதே உணவு விலை எஏற்றத்திற்குக் காரணம் என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியா சீனனவில் மாமிசம் உட்கொள்வது அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மாறிவரும் தட்பவெப்பம் இன்னொரு காரணி என இவர் தெரிவித்துள்ளார்.
India, China eating meat, pushing up food prices: EU - IBNLive
May 6th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை, உலகம், வானிலை | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |
மியன்மாரில் நர்கிஸ் சூறாவளிக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 22000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் 41000பேரைக் குறித்த தகவல்கள் எதுவுமில்லை. மொத்த உயிரிழப்பு இன்னும் அதிகமாயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உலகெங்கிலுமிருந்தும் உதவிகள் வரத்துவங்கியுள்ளன.
அரசாங்கம் மக்களை புயலின் தீவிரம் குறித்து எச்சரிக்கை செய்யவில்லை எனூம் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. சீனா, கனடா, செக் குடியரசு, இங்கிலாந்து உட்பட்ட பல நாடுகளும் உதவி வழங்க மூன்வந்துள்ளன.
Over 22,000 dead, 41,000 missing in Myanmar cyclone - The Hindu
March 26th, 2008 பகுப்புகள்: இயற்கை, பொருளாதாரம், வணிகம், விலைவாசி, விவசாயம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |
உலக அளவில் உணவின் விலைகள் ஏறிக்கொண்டே இருப்பதை சமாளிக்க முடியாமல், உலகின் வறியவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அமெரிக்க போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகள் தானியங்களை முலமாகக் கொண்டு எரிபொருள் தயாரிக்கும் திட்டங்களில் ஈடுபடுவது ஆத்திரமூட்டுவதாக இருக்கிறது என்று இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அமைச்சர் சிதம்பரம் அவர்கள் இதைத் தெரிவித்தார்.
சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விஷயங்களை அடிப்படையாக் கொண்டுதான், மேற்குலக நாடுகள் தாவர மூலமான எரிபொருளைத் தயாரிப்பதில் தமது ஆர்வத்தை அதிகரிக்கத் துவங்கியுள்ளன.
நியாமான விலையில், உணவுப் பொருட்களை வாங்குவதற்கு, உலக ஜனத்தொகையில், பெரும் பங்கு மிகவும் கஷ்டப்பட்டுவர, மலிவான எரிபொருள் கிடைப்பதற்காக சோளம் போன்ற தானியங்களை எரிபொருளாக மாற்றுவது கண்டிக்கப்பட வேண்டியது என்றும் அமைச்சர் சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார்.
நன்றி: பிபிசி
மேலும் விவரங்களுக்கு:
2. AFP: Diverting food products to make biofuels is foolish: Indian finance chief
3. PIB Press Release: “The text of the speech of Finance Minister, Shri P. Chidambaram delivered at the Lee Kuan Yew School of Public Policy in Singapore”
March 25th, 2008 பகுப்புகள்: இயற்கை, பொருளாதாரம், மரணம், வணிகம், வானிலை, விவசாயம், வெள்ளம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |
மழைக்கு மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக பெய்துவரும் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், மாநிலம் முழுவதும் மிகுதியாக பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், முழுமையான பயிர் சேதம் குறித்து வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் 1,500 ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் இன்னும் வடியாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
நன்றி: யாஹு
மேலும் விவரங்களுக்கு:
1. Toll in rain-related incidents in Tamil Nadu rises to 27
2. Heavy rains hit crops in South :: Financial Express
3. :: News on AIR ::: “Rains play havoc in Karnataka; 13 killed”
March 7th, 2008 பகுப்புகள்: இந்தியா, இயற்கை, இரயில், பொருளாதாரம், போக்குவரத்து, வானிலை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |
தலைநகர் தில்லி உள்பட வடமாநிலங்களில் கடுமையான பனிப் பொழிவு காரணமாக வெள்ளிக்கிழமை 10 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்விநியோகம் தடைபட்டது. இதனால் ரயில் சேவை உள்பட பல முக்கியப் பணிகள் பாதிக்கப்பட்டன.
தில்லி, ஹரியாணா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி மக்கள் இந்த திடீர் மின்தடையால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளானார்கள். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது:
வடமாநிலங்களில் தற்போது பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகளில் தூசுகள் கலந்த பனி படிந்ததால் கம்பிகளில் தீப்பொறிகள் ஏற்பட்டு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
பனிக்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பானதுதான். ஆனால் இந்த ஆண்டு மிகநீண்ட நேரத்திற்கு மின்சாரம் தடைபட்டு விட்டது. அதிகாலை 4 மணியளவிலும் காலை 6 மணிக்கும் இருமுறை மின்சாரம் தடைபட்டது. காலை 10.30 மணிக்கு மீண்டும் மின்விநியோகம் சீரடைந்தது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றனர். மின்விநியோகத்தில் பலமணிநேரம் தடை ஏற்பட்டதால் புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான பயணிகள் பல மணிநேரம் ரயில்நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
முந்தைய சற்றுமுன் | நன்றி: தினமணி
February 20th, 2008 பகுப்புகள்: இயற்கை, நிலநடுக்கம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |
இந்தோனேசியாவின் மேற்குபகுதியில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு மூவர் மரனமடைந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.முன்னதாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டாலும் கடல் கொந்தளிப்பு எதுவும் காணப்படவில்லை. 2004 சுனாமி ஏற்படுத்திய மேற்கு சுமத்ராவைச் சேர்ந்த சிமுவல் தீவை மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் தரவரிசையில் 7.6 இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வக முதல் அனுமானம் கூறுகிறது.
February 15th, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை, அறிவியல், இயற்கை, வானியல் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |
கேரளாவில், ‘சிவப்பு மழை’யின் பரபரப்பு ஓய்ந்த நிலையில், ‘மீன் மழை’ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிச்சூர் அருகே உள்ள கந்தனசேரி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. சிலர் வேலை முடிந்து தாமதமாக இரவில் மழையில் நனைந்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, தங்கள் மீது மீன் விழுவதை பார்த்து அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். இத்தகவல் கிராமத்தில் பரவியதும் பரபரப்பு ஏற்பட்டது. மழையில் விழுந்த மீன்களை, ஒரு வாளி தண்ணீரில் சிலர் போட்டு வைத்தனர். அப்பகுதியில் உள்ள குளம், வாய்க்கால் போன்றவற்றில் கிடைக்கும் வகையை சேர்ந்த சிறு மீன்கள் என்பது மறுநாள் பகலில் உறுதிப்படுத்தப்பட்டது.
இது குறித்து கேட்ட போது, கொச்சி அறிவியல் பல்கலைக்கழகத்தின் மீன்வள அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் ராஜன் கூறியதாவது: கிராம மக்கள் சொல்வது உண்மைதான். அறிவியல் பூர்வமாக இது சாத்தியமானது தான். மழை மேகங்கள் உருவாகும் போது, நீர் வாழ் உயிரினங்கள் வானுக்கு உறிஞ்சப்படும்.
மழை மேகங்களில், ஈரத்தன்மை இருக்கும் வரை, நீரில் எப்படி அந்த உயிரினங்கள் வாழ்கின்றனவோ, அதேபோல உயிர் வாழ முடியும். மழை மேகம், கலைந்து மழை விழும் போது, அந்த மீன்களும் கீழே விழ வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ராஜன் கூறினார். சமீபத்தில் கேரளாவில் பெய்த, ‘சிவப்பு மழை’க்கும் அறிவியல் பூர்வமாக காரணம் சொல்லப்பட்டது. நீர் பாசிகளில் இருக்கும் சில ரசாயனங்கள் தான் இதற்கு காரணம் என்பது தெரியவந்தது.
நன்றி: நிதர்சனம்
தொடர்புடைய பதிவு: மீன் மழை - இட்லி வடை
February 13th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |
இந்தோனேசியாவில் 6.6ரிக்டேர் அளவில் பூகம்பம் நிகழ்ந்துள்ளதால் சுனாமி நிகழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
February 1st, 2008 பகுப்புகள்: இயற்கை, உடல்நலம், சுற்றுச்சூழல், மருத்துவம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |
பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட கோழிகளை கொல்லும் பணியில் ஈடுபட்டிருந்த 26பேருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல் முதலிய அறிகுறிகள் இருந்ததால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்ட சோதனையில் பறவைக் காய்ச்சல் இல்லை என தெரியவந்துள்ளபோதும் மேலும் சோதனைகள் முடியும்வரை இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள் எனத் தெரிகிறது.
பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களைத் தொற்றும் பரிணாம மாற்றம் பெறுமேயானால் அவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயார்நிலையில் வைக்கப்படுகின்றன.
26 bird flu suspects isolated -DNA India
January 22nd, 2008 பகுப்புகள்: இயற்கை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |
கீழக்கரை கடல் பகுதியில் இயற்கை பாலம் !
கீழக்கரையில் உள்ள பல்லாக்கு ஒலியுல்லாஹ் தர்கா அருகேயுள்ள கடல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பாறைகளால் ஆன இயற்கை கடல் பாலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பலர் இந்த பகுதி கடலின் ஆழம் குறைவாக உள்ளதால் பாறைகளால்
ஆன பாலத்தின் அருகே சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதியில் மீன் பிடித்து வரும் பெரோஸ்கான் ( வயது 32 ) இந்த பாறைகள் ஒரே சீராக இருப்பதால் பாலம் போல் காட்சியளிக்கிறது. இது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பாறைகள் மேல் உள்ள பாசிகளை உண்ண மீன்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் மீன் பிடிப்பவர்களுக்கு இப்பாலத்தின் மேல் நின்று மீன் பிடிக்க எளிதாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தகவல் : ஹமீது யாசின், கீழக்கரை
January 16th, 2008 பகுப்புகள்: இயற்கை, உடல்நலம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |
மூன்று வேளையும் காய், கனிசாப்பிடும் தபால் அதிகாரி
காரியாபட்டி ( விருதுநகர் மாவட்டம் ) : விதவிதமான உணவு வகைகள், விசேஷங்களுக்கு 18 வகை காய்கறிகளுடன் உணவு என நாளுக்கு நாள் அசத்தி வரும் இந்த காலத்தில் மூன்று வேளையும் காய் மற்றும் பழங் களை மட்டும் சாப்பிட்டு வருகிறார் காரியாபட்டியைச் சேர்ந்த கொண்டாரெட்டி(48). அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோவிலாங்குளம் தபால் அலுவலகத்தில் துணை அலுவலர்.காலையில் “கேரட், வெண்டைக்காய், தேங்காய், வாழைப்பழம்’, மதியம் “திராட்சை, சாத்துக்குடி, கொய்யாப்பழம்’, இரவு “வேகவைத்த பூசணி, சுரைக்காய்’ மட்டுமே இவரது உணவு. வெளியூர் செல்லும் போது சாப்பிட காய், பழங்களை உடன் கொண்டு செல்கிறார். இத்துடன் யோகாசன பயிற்சியும் செய்கிறார். இப்போதும் இளமை தோற்றத்துடன் வாழ்ந்து வருகிறார் இந்த அதிசய மனிதர்.அவரின் செரித்த கருத்து: தற்போதுள்ள உணவு வகைகளில் அதிகளவு “கெமிக்கல்’ இருப்பதால் உடலில் விஷத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் நாளொரு நோயும், பொழுதொரு அவஸ்தையுமாக மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். வகை, வகையான செயற்கை உணவுகளை தவிர்த்து, இயற்கை உணவுகளை உண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழ முடியும். எந்த நோயும் அண்டாது. உடல் “சிலிம்’மாக இருக்கும். யோகா பயிற்சி செய்து வந்தால் உடம்பை “வில்’லாக வளைக்க முடியும். தற்போது சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் என்னால் எந்த வேலையும் செய்ய முடிகிறது என்கிறார்.