அறிவியல் | சற்றுமுன்...




சிட்டுக்குருவி எண்ணிக்கையை கணக்கு எடுத்தல் அவசியம்: நிபுணர்கள் வலியுறுத்தல்

August 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, அறிவிப்பு, சுற்றுச்சூழல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சிட்டுக்குருவி எண்ணிக்கையை கணக்கு எடுத்தல் அவசியம்: நிபுணர்கள் வலியுறுத்தல்

 மும்பை, ஆக.22: சிட்டுக்குருவி நடமாட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, அதன் எண்ணிக்கையை கணக்கு எடுப்பது அவசியம் என்று, பறவைகள் ஆய்வு நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிட்டுக்குருவி எண்ணிக்கை குறித்து கணக்கு எடுப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்துக்கு தாங்கள் பரிந்துரை செய்துள்ளதாக, பாம்பே தேசிய வரலாற்று சமூகத்தின் விஞ்ஞானி கிரிஷ் ஜெதர் தெரிவித்தார். பறவைகளின் நலம் குறித்து வன உயிரி ஆர்வலர்கள் பெரிய அளவில் கவலைப்படுவதில்லை. பறவைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்காததே சிட்டுக்குருவி போன்ற பறவை இனத்தை நாம் இழக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார் நேச்சர் இந்தியா என்ற அமைப்பின் நிறுவனர் முகமது.

மாறிவரும் சுற்றுச்சூழலால் பறவைகள் இனம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. சில பறவை இனம் முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளது. செல்போன் தொலை தொடர்புக்கு உதவும் மின் காந்த அலைகளாலும் பறவைகள் அழிந்து வருவதாக அண்மையில் ஆய்வு உறுதிபடுத்தியது.
 
 


7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

August 10th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, கணினி, கல்வி, தகவல், தகவல் தொழில்நுட்பம், தேர்வு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை
10 கல்லூரிகளில் 9-க்கும் குறைவானவர்கள் சேர்ந்துள்ளனர்

முதலிடத்தில் எலக்ட்ரானிக் கம்ïனிகேசன்

தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்தவற்கு அண்ணாபல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடைபெற்றுவருகிறது. முதல் கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து 2-வது கட்ட கவுன்சிலிங் நடந்து வருகிறது. தினமும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் கவுன்சிலிங்கிற்கு வருவதில்லை.

இதுவரை மாணவர்கள் தேர்வு செய்த இடங்கள் விவரம் வருமாறு:-

எலக்ட்ரானிக் கம்ïனிகேசன் பிரிவில் 18 ஆயிரத்து 474 இடங்களில் 13 ஆயிரத்து 244 இடங்களை தேர்வு செய்துள்ளனர். இது 72 சதவீதம் ஆகும். இந்த பிரிவு தான் முதல் இடத்தில் உள்ளது. கம்ப்ïட்டர் சயின்ஸ் பிரிவில் 17,356 இடங்களில் 10,383 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இது 60 சதவீதம். எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் பிரிவில் உள்ள 12,029 இடங்களில் 5,885 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது 49 சதவீதம். தகவல் தொழில்நுட்பம் பிரிவில் உள்ள 13,627 இடங்களில் 6,848 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்னன. இது 50 சதவீதம். 8,341 இடங்கள் கொண்ட மெக்கானிக்கல் பிரிவில் 6,099 பேர் தேர்வு செய்துள்ளனர்.

சிவில்

3,320 இடங்கள் உள்ள சிவில் பிரிவில் 2,586 இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். இது 78 சதவீதம். 402 இடங்கள் கொண்ட ஆட்டோமொபைல் பிரிவில் 339 இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். இது 84 சதவீதம். 1406 பேர் கொண்ட ஏரோனாட்டிக்கல் பிரிவை 879 பேர் தேர்ந்து எடுத்து உள்ளனர். இது 62 சதவீதம். பயோடெக்னாலஜி பிரிவில் 1,193 இடங்களில் 658 மாணவர்க்ள தேர்வு செய்துள்ளனர். இது 55 சதவீதம்.

மற்ற பிரிவுகளில் உள்ள 3554 இடங்களில் 2,601 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 81 ஆயிரத்து 373 இடங்களில் 50 ஆயிரத்து 715 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவர்கூட சேராத கல்லூரிகள்

இதுவரை 7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் எந்த பிரிவிலும் ஒரு மாணவர்கூட சேரவில்லை. அந்த கல்லூரிகள் அனைத்தும் புதிய கல்லூரிகள் என்றும் சென்னை அருகே உள்ள கல்லூரிகள் அல்ல என்றும் தெரிய வந்துள்ளன.

மேலும் 9 மாணவர்களுக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகள் 10 உள்ளன. இவற்றில் சில சென்னையை சுற்றி உள்ளன. மற்றவை மற்ற மாவட்டங்களில் உள்ளன.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில் நல்ல கட்டமைப்பு உள்ள பல புதிய கல்லூரிகள் உள்ளன. அதை அறியாமல் மாணவர்கள் சேர தயங்குகிறார்கள். கட்டமைப்பு வசதி உள்ள புதிய கல்லூரிகளில் சேரலாம். இந்த கல்லூரிகளுக்கு அடுத்த ஆண்டு நல்ல வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


கூவம் கரையில் ஒரு சோமாலியா

August 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, உடல்நலம், மருத்துவம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கூவம் கரையில் ஒரு “சோமாலியா’

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பானுமதி தனது தாயின் மடியில்.

சென்னை, ஆக. 7: சென்னை கூவம் கரையில் ஒரு சோமாலியாவின் பரிதாபக் காட்சி மனதை கலங்க வைக்கிறது.

ஆட்டோமொபைல் உபகரணங்களுக்கு பெயர் போன புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் சாலை ஓரத்தில் எவ்வித அரவணைப்பின்றி பரபரப்பாக ஓடும் வாகனங்களை ஏக்கமும், தவிப்புமாகப் பார்க்கும் குழந்தை பானுமதிக்கு வயதோ மூன்றரை.

கை, கால்கள் தளர்ந்தும், சுருங்கி போன பானுமதியை பார்க்கும் பெற்றோர்களுக்கு சற்றே மனது நொருங்கிப் போய்விடும்.

நன்றாக ஓடி, ஆட வேண்டிய குழந்தை முறையான பராமரிப்பின்றியும், சத்தான சாப்பாடு இல்லாமல் ஊட்டசத்துக் குறைபாட்டால் முடங்கிப் போய் நகர முடியாமல் இருக்கிறாள்.

கூவத்தையொட்டி குடிசை வீடு அமைத்து தங்கியுள்ள அவரது தாய் வைரமும், தனது குழந்தையைச் சரியாகப் பராமரிப்பதில்லை. கணவரால் கைவிடப்பட்ட வைரம், குப்பை பொறுக்கியும், வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார். சம்பாதிக்கும் 50 ரூபாய் போதவில்லை என்கிறார் வைரம். இதனால் பானுமதிக்கு சத்தான உணவை வாங்கிக் கொடுக்க முடியாத நிலை. சாலை ஓரத்தில் பானுமதியை பார்த்து இரக்கப்படும் பலர் கொடுக்கும் உணவுப் பொருளே அவளுக்கு அரு மருந்து.

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகளை அரசு மருத்துவமனைக்கு கூட சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாதது வறுமையின் பரிதாப நிலை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மிஞ்சிப் போனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட கிடையாது.

பெற்ற தாய் இருந்தும், கவனிப்பின்றி தவிக்கும் பானுமதி என்ன தவறு செய்தார்?…பாவம்!


நுரையீரல் பாதிப்பு: தீவிர கண்காணிப்பில் அர்ஜுன் சிங்- எய்ம்ஸ் தகவல்

August 3rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், உடல்நலம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

நுரையீரல் பாதிப்பு: தீவிர கண்காணிப்பில் அர்ஜுன் சிங்- எய்ம்ஸ் தகவல்

புதுதில்லி, ஆக.2: உடல் நலக்குறைவால் கடந்த 30-ம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங், நுரையீரல் நோய் பாதிப்பால் அவதிப்படுவதாக டாக்டர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதால் சுவாசிப்பதில் அவர் மிகவும் சிரமப்படுவதாக டாக்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் மூத்த டாக்டர்கள் குழுவின் மேற்பார்வையில் அவர் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக எய்ம்ஸ் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 


வெடிகுண்டு மிரட்டல்: இ - மெயில் அனுப்பிய கணக்காளர் கைது

August 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், இணையம், கணினி, குற்றம், சட்டம் - நீதி, தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வெடிகுண்டு மிரட்டல்: இ - மெயில் அனுப்பிய கணக்காளர் கைது

மும்பை, ஆக. 1: வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ - மெயில் அனுப்பிய பஞ்சாப் கணக்காளர் ஒருவரை மும்பை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கணக்காளர் தீபக் பாண்டே பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர்.

ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பை அடுத்து தொடர்ந்து பல இடங்களில் குண்டு வெடிக்கும் என்று தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு இ - மெயில் மிரட்டல் வந்தது. இது குறித்து மும்பை போலீஸôர் விசாரித்தனர். இ - மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று போலீஸôர் கண்டுபிடித்தபோது லூதியானாவைச் சேர்ந்த தீபக் என்பவர் அனுப்பியது தெரியவந்தது. வதந்தியைப் பரப்புவதற்காக இவர் இ - மெயில் மிரட்டல் விடுத்தாரா அல்லது உண்மையிலேயே இவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும் என்று மும்பை குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் தேபன் பார்த்தி கூறினார்.
 
 


அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அமெரிக்க இந்தியர்கள் தீவிரம்

July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அமெரிக்கா, அரசியல், தொழில்நுட்பம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அமெரிக்க இந்தியர்கள் தீவிரம்

வாஷிங்டன், ஜூலை 27: இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஹைட் சட்டத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு இங்குள்ள அமெரிக்கவாழ் இந்தியர்களையே சாரும். தற்போது இந்த 123 ஒப்பந்தம் இரு சபைகளிலும் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் வாஷிங்டனில் திங்கள்கிழமை கூடி விவாதிக்க உள்ளதாக அமெரிக்க-இந்திய கூட்டமைப்பின் தலைவர் அசோக் மாகோ தெரிவித்தார். இந்த அமைப்பு டல்லாûஸ தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை கூட்டம் செப்டம்பர் 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே செனட் கூட்டமும் கூடலாம் என தெரிகிறது.

பொதுவாக பிரதிநிதிகள் சபைக் கூட்டம் அக்டோபர் மாதம் கூடும். ஆனால் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளதால் செப்டம்பரில் கூடுகிறது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாரக் ஒபாமா மற்றும் மெக்கைய்ன் ஆகிய இருவரும் இந்த அணுசக்தி ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் இதை நிறைவேற்றுவதில் எவ்வித சிரமமும் இருக்காது என்று தெரிகிறது.


இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, உடல்நலம், சுற்றுச்சூழல், மருத்துவம், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளது என்று பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் கூறினார்.

பாராட்டு விழா

கடந்த 2006-ம் ஆண்டு “வாருங்கள் கிராமம் செல்வோம்” என்ற திட்டத்தை கிராமப்புறங்களில் செயல்படுத்தி சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக திருச்சி டாக்டர் அஷ்ரப்பிற்கு மருத்துவ துறையில் தேசிய அளவில் மிக உயர்ந்த விருதான பி.சி.ராய் விருது வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

விழாவிற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு திருச்சி கிளை தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர் குணசேகரன், டாக்டர்கள் ஞானதிலகன், கலைக்கோவன், எஸ்.எம்.ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் அஷ்ரப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கிராமங்கள் தத்தெடுப்பு

ஒரு நாள் மருத்துவ முகாம்கள் நடத்துவதால் கிராமப்புற மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் செல்ல வேண்டும். வியாதிக்கான மருந்துகள் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும். இந்திய மருத்துவ கூட்டமைப்பில் 2500 கிளைகள் உள்ளன. இதன் மூலம் 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளோம்.

கடந்த 60 வருடத்தில் நாம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியால் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளுக்கிடையே இடைவெளி நீடிக்கிறது. டாக்டர்களின் அணுகுமுறை நோயாளிகளிடம் சிறந்ததாக இருக்க வேண்டும். சாலை விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். நான் அடுத்ததாக சாலை விபத்துக்கள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் கீதாராமனுஜம் நன்றி கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=426581&disdate=7/20/2008&advt=2


அலட்சியத்தால் வீழ்ச்சி அடைந்துவரும் தமிழக கதர் வாரியம்!

July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், அறிவிப்பு, சமூகம், சுற்றுச்சூழல், தொழில், பொருளாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அலட்சியத்தால் வீழ்ச்சி அடைந்துவரும் தமிழக கதர் வாரியம்!

அதிகாரிகளின் அலட்சியத்தால் தமிழக கதர் வாரியம் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த கதரின் பெருமையை நாடு உணர்ந்திட அமைக்கப்பட்ட வாரியத்தின் வீழ்ச்சியைக் கண்டு நாட்டுப் பற்றாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தோடு, 1960 - ம் ஆண்டு தமிழ்நாடு கதர் வாரியம் தொடங்கப்பட்டது.

தேன், சோப்பு உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை தரத்துடன் தயாரித்து விநியோகித்து வருகிறது. ஆனால், நலிந்துவரும் இந் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் இப்போது மெதுவாக மூடப்பட்டு வருகின்றன.

“”கைமுறை காகிதங்கள் தயாரிக்கும் 20 யூனிட்டுகளில் தற்சமயம் இரண்டு யூனிட்டுகள் மட்டுமே செயல்படுகின்றன. மூடிய யூனிட்டுகளை உயர் நீதிமன்றம் திறக்க உத்தரவு பிறப்பித்தும் இதுவரை திறக்கவில்லை.

19 சோப்பு யூனிட்டுகளில் இரண்டைத் தவிர மீதி யூனிட்டுகளில் வேலை செய்பவர்களுக்கு மாதத்தில் 7 அல்லது 10 நாள்கள் மட்டுமே வேலை உள்ளது. இதனால் இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தினக்கூலிகள் போல் சம்பளம் கொடுக்கிறார்கள். சோப்பு உற்பத்தியாளர்களை நிரந்தரம் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் வழக்கை 23 ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினார் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.சந்திரசேகரன்.

பெயரளவுக்கு மட்டுமே… வணிகம் அல்லாத அலுவலகப் பணிகள் செய்யும் ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசு கொடுக்கிறது. ஆனால் துறையின் முன்னேற்றத்துக்கும் வருமானத்துக்கும் காரணமான உற்பத்தியாளர்களையும், தொழிலாளர்களையும் உற்பத்தி செய்த பொருள்களை விற்றால்தான் சம்பளம் என வாரியம் அறிவித்தது.

“”கதர் நூல் நூற்பு ஆலைகளும் பெயரளவில் செயல்பட்டு வருகின்றன. மூத்த கதர் நெசவாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குகிறது. மேலும் அவர்கள் மாதம் ரூ.5 ஆயிரத்துக்கு தேன், சோப்பு முதலிய மற்ற பொருள்களை விற்றால்தான் அந்த ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

இதனால் பலர் இத்தொழிலை கைவிட்டு விட்டனர். ஆனால் கதர் வாரியமானது வெளியிலிருந்து கதர் துணிகளை வாங்கி கதரின் முத்திரை வைத்து விற்கிறது. அதிகாரிகளின் மெத்தனப்போக்கே கதர் வாரியத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்” என்றார் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.எல்.ஸ்ரீதர்.

பல கதர் நூற்பு ஆலைகள் மூடப்பட்டுவிட்டதால் கதர் வாரியம் வெளியிலிருந்து கதர் துணிகளை வாங்கி கதரின் முத்திரை வைத்து விற்கப்படுகிறது. அதே போன்று கதர் வாரியத்தின் மற்ற பொருள்கள் தனியாரிடம் கொடுத்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“”கதருக்கு என தனித்துறை இருந்தும் தொழிலாளர்களுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை. லட்சக்கணக்கில் இருந்த தொழிலாளர்கள் இன்று ஆயிரக்கணக்காகக் குறைந்து விட்டனர். அதிகாரிகளின் முறையற்ற நிர்வாகம்தான் இதற்கு காரணம்”" என்றார் சந்திரசேகரன்.

என்ன செய்யலாம்…? அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகளை நீக்க வேண்டும். கதர் துறையை முன்னேற்றும் நோக்குடன் செயல்படும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் கிராம மக்கள் மத்தியில் மறுமலர்ச்சி ஏற்படும். கதர் வாரியமும் அதன் வீழ்ச்சியில் இருந்து மீளும்.

மருத்துவமனைகளில் சோப்பு, ஃபினாயில் போன்ற பொருள்கள் தனியாரிடமே வாங்கப்படுகின்றன. கதர் வாரியத்தின் உற்பத்திப் பொருள்களை அரசுத் துறைகள் அனைத்தும் வாங்கிவிட்டாலே வாரியம் வீழ்ச்சியில் இருந்து மீண்டுவிடும் என்று தொழிலாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். ஏற்றுக் கொள்ளுமா அரசு?


ஓய்வு பெற்றார் எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபால்

July 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, மருத்துவம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஓய்வு பெற்றார் எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபால்

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநர் வேணுகோபால், புதன்கிழமை பணி ஓய்வு பெற்றார்.

இதனிடையே, வேணுகோபாலுக்கு 6 மாத காலம் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

மீரா மிஸ்ரா என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், இதய நோயால் பாதிக்கப்பட்ட எனது மகனுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் வேணுகோபால்தான் சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில் சிகிச்சை முடிவதற்குள் அவர் பணி ஓய்வு பெறவுள்ளார். இதனால் எனது மகனின் சிகிச்சை பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே, அவர் 6 மாதம் பணியில் நீட்டிக்க உத்தரவிட்டு உதவ வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி சிஸ்தானி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, எஸ்ம்ஸ் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற நிலையில் ஒரு நோயாளிக்காக இயக்குநர் வேணுகோபாலுக்கு பணி நீட்டிப்பு வழங்க இயலாது எனக் கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
 
 


இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி உடல்நிலை கவலைகிடம்

June 26th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அறிவிப்பு, மருத்துவம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பீல்டு மார்ஷல் மானேக்ஷா உடல்நிலை கவலைகிடம்

இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி பீல்டு மார்ஷல் மானேக்ஷா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கடந்த 1971_ம் ஆண்டு இந்திய ராணுவ தலமை தளபதியாக மானேக்ஷா இருந்தார். அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்தது. மேற்குபாகிஸ்தானில் இருந்து தனிநாடு கோரி கிழக்கு பாகிஸ்தானில் போராட்டம் நடந்தது. அதாவது தற்போது உள்ள வங்கதேசம்தான் கிழக்கு பாகிஸ்தானாகும்.

இந்த சுதந்திர போராட்டத்திற்கு இந்தியா தார்மீகமான முறையில் ஆதரவு அளித்தது. அப்போது பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடந்தது. சர்வதிகாரியாக இருந்த யாகியாகன் இந்தியா மீது 10 நாட்களில் போர் தொடுப்பேன் என்று கூறினான். அதன்படி 10_வது நாள் இந்தியா மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் தேவையில்லாமலும் வேண்டுமென்ற வலுக்கட்டாயமாக குண்டுகளை வீசின. அப்போது ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்பட பல மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்த இந்திரா காந்தி ரஷ்யாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டார். அவரது ராஜதந்திரமானது இந்தியாவை பல வழிகளிலும் காப்பாற்றியது. இந்திரா காந்தி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும் பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க உத்தரவிட்டார்.

இந்திய ராணுவமானது மனேக்ஷா தலமையில் பாகிஸ்தானை தாக்கத்தொடங்கியது. அவ்வளவுதான் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின. கராச்சி துறைமுகம் அடியோடு அழிந்தது. மேலும் வங்கதேசத்தில் இருந்த பாகிஸ்தான் படைகள் 10 லட்சம் பேரை இந்திய ராணுவம் சுற்றிவளைத்தது. இனியும் சரணடையாவிட்டால் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றுவிடும் என்று கருதிய பாகிஸ்தான் படைகள் 10 லட்சம்பேரும் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். வங்கதேசம் தனி நாடு என்று பிரகடனம் செய்தது.

பாகிஸ்தானின் பரிதாபத்தை பார்த்த இந்திராகாந்தி தானாகவே முன்வந்து சண்டையை நிறுத்த இந்திய ராணுவத்திற்கு உத்தரவிட்டார். சண்டையில் ராஜதந்திரத்துடன் போரிட்டு வெற்றிபெற்று இந்தியாவுக்கு பெருமையை தேடிக்கொடுத்ததற்காக மானேக்ஷாவுக்கு பீல்டு மார்ஷல் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்படிப்பட்ட மாவீரன் மானேக்ஷாவுக்கு தற்போது 94 வயதாகிறது. அவருக்கு நுரையீரல் நோய் ஏற்பட்டுள்ளது. அவர் ஞிலகிரி மாவட்டம் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனைய