15-வது பதிப்பாக தினத்தந்தி மும்பை பதிப்பு இன்று முதல் வெளியாகிறது
15-வது பதிப்பாக தினத்தந்தி மும்பை பதிப்பு இன்று முதல் வெளியாகிறது
தினத்தந்தியின் 15-வது பதிப்பு மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வெளிவருகிறது.
15-வது பதிப்பு
தமிழ் பத்திரிகைகளில் அதிக வாசகர்களை கொண்டு சிறப்பான இடத்தை பிடித்து இருக்கும் தினத்தந்தி ஏற்கனவே சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், பெங்களூர், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி ஆகிய 14 நகரங்களில் இருந்து வெளி வருகிறது. 15-வது பதிப்பு மும்பையில் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பொருளாதார தலைநகராக விளங்கும் மும்பையில் தமிழர்கள் கணிசமான அளவில் வசிக்கிறார்கள். மும்பை தமிழர்களின் நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தினத்தந்தி தனது 15-வது பதிப்பை மும்பை நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி உள்ளது.
தொடக்கவிழா
இதற்கான விழா தினத்தந்தியின் மும்பை முகவரியான 13/15, நவ்பிரபாத் சேம்பர்ஸ், ரானேடே ரோடு, தாதர் மேற்கு, மும்பை-28 என்ற விலாசத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் `தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், `மாலை மலர்’ நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
தொழில் அதிபர்கள்
தொடக்க விழாவில், மும்பை வருமான வரித்துறை கமிஷனர் வி.மகாலிங்கம், மும்பை டாங்கட் நிïஸ் ஏஜென்சீஸ் ஹன்ஸ்ராஜ் டாங்கட், சாருதத் டாங்கட், சுதான் சூ டாங்கட், தொழில் அதிபர்கள் ஏ.பி.சுரேஷ் நாடார், செல்வராஜ் நாடார், பி.கோயில்ராஜ், யு.டி.ஐ. மியுச்சுவல் பண்டு நிறுவன தலைமை அதிகாரி (செயலாக்கம்) எஸ்.எல்.பாண்டியன்.
அகில இந்திய நாடார்கள் கூட்டமைப்புத் தலைவர் நெல்லை நெடுமாறன், நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், உப தலைவர் எம்.எஸ்.ஏ.பீட்டர் ஜெபராஜ், செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.நாதன், பொருளாளர் எம்.சி.ராமச்சந்திரன், தட்சணமாற நாடார் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள் தண்டுபத்து ஜெயராம், நாலுமாவடி பிரபாகரன், வித்யாசாகர், முருகன் ஆதித்தன்.
மும்பை நற்பணி மன்றம்
தட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை சேர்மன் ஏ.ராமராஜா நாடார், செயலாளர் எம்.எஸ்.காசிலிங்க நாடார், பொருளாளர் எம்.கனகராஜ் நாடார், துணை சேர்மன் எஸ்.ஜே.எஸ்.செல்லத்துரை நாடார், இணை செயலாளர் டி.எம்.ரெம்ஜீஸ், நிர்வாக குழு உறுப்பினர்கள் டபுள்ï.மைக்கேல் நாடார், வி.பி.பால்துரை நாடார், எஸ்.அழகேச நாடார், டபுள்ï.ஜெபக்குமார் ஜேக்கப் நாடார், பி.மோகன்லால் நாடார், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சி.நடேசன் நாடார், `கிங் மேக்கர்’ காமராஜர் தமிழ் டிரஸ்ட் தலைவர் எம்.சி.கே.பொன்ராஜ் நாடார்.
மராட்டிய மாநில டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற செயலாளர் ஹரிராம் சேட், மும்பை தாராவி காமராஜர் பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.கே.தமிழ்மணி, ஜி.கென்னடி, வக்கீல் ஜி.சூரியா நாடார் உள்பட பலர் கலந்து கொண்டு தினத்தந்தி மும்பை பதிப்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
குறிச்சொற்கள்: தினத்தந்தி, மும்பைஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்