2010, 2011-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள்
2010, 2011-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள்
தமிழ்நாட்டில் 2010, 2011-ம் ஆண்டுகளில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.
அரசு வேலை
`கால் காசு சம்பளம் என்றாலும் கவர்மென்ட் உத்தியோகம் பார்க்க வேண்டும்’ என்று கிராமங்களில் வேடிக்கையாகச் சொல்வார்கள். அவ்வப்போது அறிவிக்கப்படும் சலுகைகள், விடுமுறைகள், ஓய்வூதியம் என்று பலன்கள் அதிகளவில் இருப்பதால் பெரும்பாலானோர் அரசு பணியில் சேரவே விரும்புகிறார்கள்.
என்னதான், சாப்ட்வேர், கம்ப்ïட்டர் வேலைகள் வந்தாலும் அரசு வேலைக்கு கொஞ்சம்கூட மவுசு குறையவில்லை. அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதே இதற்கு சான்று. மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு 6-வது ஊதியக்குழு சம்பளம் அறிவிக்கப்பட்டிருப்பதால் அரசு பணி மீதான மோகம் மேலும் அதிகரித்துள்ளது.
மோகம் அதிகரிப்பு
சாப்ட்வேர் துறை, கால்சென்டர், பி.பி.ஓ. உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் கைநிறைய சம்பளம் வாங்கக்கூடியவர்கள்கூட குறிப்பாக பெண்கள் அங்கு இருக்கும் பணிப்பளு, மனஅழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் அரசு வேலையில் சேர்ந்து நிம்மதியாக இருந்துவிடலாம் என்று சிந்திக்க தொடங்கியுள்ளனர்.
காலை 10 மணிக்கு வேலைக்குப் போய்விட்டு மாலை 6 மணிக்குள் வீடு திரும்பிவிடலாம். வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் அவர்களின் பார்வை அரசு பணி மீது திரும்பி உள்ளது. வீட்டையும், குடும்பத்தையும் நன்கு கவனித்துக் கொள்ளலாம் என்பதால் பெண்கள் அரசு பணியில் சேர அதிகம் விரும்புகிறார்கள்.
புதிய பணி நியமனம்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அரசு துறைகளில் சுமார் 13 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு பணி நியமனத்திற்கு தடை ஆணை இருந்து வந்ததாலும், ஓய்வு பெறுவது, இயற்கை, செயற்கை மரணம் ஆகிய காரணங்களினாலும் அரசு பணியில் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
ஐந்து ஆண்டுகள் கழித்த பின்னரே தடை ஆணை விலக்கப்பட்டு தற்போது பணி நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில்கூட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு மூலம் சுமார் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர்களும் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
2 லட்சம் பேர் ஓய்வு
இந்த நிலையில், 2010, 2011-ம் ஆண்டுகளில் அரசு ஊழியர்களில் 30 சதவீதம் பேர் அதாவது 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற உள்ளதாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் 1978, 79, 80-ம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட பெரும்பாலானோர் 30 ஆண்டு பணி அனுபவத்தை கடந்துவிட்டனர். அரசு ஊழியர்களில் ஒரே நேரத்தில் அதிகமானோர் ஓய்வு பெறுவதால் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, இளைஞர்களுக்கு அரசு பணியில் அதிகமான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
குறிச்சொற்கள்: தமிழ்நாடு, வேலை, ஓய்வு, அரசுஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
November 13th, 2008 at 7:05 pm
2010, 2011-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள்…
2010, 2011-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள்
தமிழ்நாட்டில் 2010…