பந்த்: புத்ததேவின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு
பந்த்: புத்ததேவின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு
புது தில்லி, ஆக. 28: “பந்த் போன்றவை தேவையற்றது. இனி இந்த போராட்டம் நடைபெறாதவாறு தடுத்திட முயற்சிப்பேன்’ என்று மேற்கு வங்க முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவருமான புத்ததேவ் பட்டாசார்ஜி கூறிய கருத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொலிட்பிரோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உழைக்கும் வர்க்கம் வேலைநிறுத்தம் செய்வது என்பது அடிப்படை உரிமை. இந்த கொள்கையில் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் பற்றுடன் நிற்கும். மத்திய அரசின் நவீன தாராளமய கொள்கைகள் மற்றும் உழைக்கும் வர்க்கம் சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் அழைப்பு விடுக்கும் பொதுவேலைநிறுத்தப் போராட்டங்களை எப்போதுமே ஆதரித்து வருகிறது மார்க்சிஸ்ட் கட்சி என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புத்ததேவ், பந்த் போராட்டங்கள் தேவையற்றது என்றும் பந்த் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்பதால் வாய்மூடி இருக்கவேண்டியுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இனி அத்தகைய போராட்டம் வரும்போது அதை வேண்டாம் என்று குரல் கொடுப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி, ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக் மற்றும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்