கலாம் பெயரில் போலி நிறுவனம்: 7 பேர் கைது
கலாம் பெயரில் போலி நிறுவனம்: 7 பேர் கைது
பாட்னா, ஆக. 22: பிகார் மாநிலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரில் போலி நிறுவனம் ஒன்றை நடத்தி, இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்று செயலில் ஈடுபட்டிருந்த 7 பேரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பிகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் பாகா என்ற இடத்தில் “டாக்டர் கலாம் கல்வி நிறுவனம்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் இயங்குவதாகவும், அந்த நிறுவனம் இளைஞர்களுக்கு வேலை மற்றும் கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி தலா ரூ. 20 ஆயிரம் வரை வசூலித்து ஏராளமானோரை ஏமாற்றி வருவதாகவும் பொதுமக்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் அந்த நிறுவனத்துக்கு சென்று போலீஸôர் விசாரணை நடத்தியதில் அது போலி நிறுவனம் என்பது அம்பலமானது. இதையடுத்து அந்த நிறுவன நிர்வாகிகள் 7 பேரை கைது செய்தனர். நிறுவனத்தில் இருந்து பதிவேடுகள், 3 செல்போன்கள், ஏராளமான அடையாள அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே, இந்த நிறுவனத்தை போன்று ஏராளமான போலி நிறுவனங்கள் வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து பிகாரில் செயல்படுவதாக அந்த மாநில பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிச்சொற்கள்: நிறுவனம், போலி, கலாம், கைதுஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்