முதல்வருக்கு பாராட்டு விழா | சற்றுமுன்...




முதல்வருக்கு பாராட்டு விழா

முதல்வருக்கு பாராட்டு விழா

சென்னை, ஆக. 16: அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனத்தை தொடங்கியதற்காக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா கோவையில் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை தெரிவித்தது.

கடந்த மாதம் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனத்தை தஞ்சையில் முதல்வர் திறந்து வைத்தார். அடுத்து ஆகஸ்டு 15-ம் தேதி கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தப் பகுதி பொது மக்களும், கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும் பயனடைய வாய்ப்புள்ளது. இந்தத் தொழிலைக் கெடுக்க புதியவர்கள் உருவாக்கப்பட மாட்டார்கள் என்று முதல்வர் வாக்களித்துள்ளார். இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், அரசு கேபிள் டிவியை வரவேற்றும் கோவை மாநகரில் ஆகஸ்டு 20-ம் தேதி விழா எடுக்க உள்ளோம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் காயல் ஆர்.எஸ். இளவரசு.
 

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்