நாங்கள் சன்னியாசி மடம் நடத்தவில்லை: முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படுவதில் தவறில்லை; தங்கபாலு பேட்டி
நாங்கள் சன்னியாசி மடம் நடத்தவில்லை: முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படுவதில் தவறில்லை; தங்கபாலு பேட்டி
சத்தியமூர்த்தி பவனில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கொடி ஏற்றி வைத்து சேவா தள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றை மக்களுக்கு வழங்கி மகத்தான பணியை காங்கிரஸ் செய்து வருகிறது. இது தொடர தொடர்ந்து பாடுபடுவோம். நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டம் நடப்பதற்கு காரணம் சகிப்புத்தன்மை இல்லை. தமிழ் நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். அதற்காக தொடர்ந்து உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கே.வி. தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். அதற்காக காங்கிரசார் தொடர்ந்து பாடுபட வேண்டும். 10 பேரை கொண்ட கட்சிகள் கூட நாங்கள்தான் அடுத்த முதல்- அமைச்சர் என்று கூறும்போது, முதல்வர் பதவி மீது காங்கிரஸ் கட்சி ஆசைப்படக்கூடாது என்பதில் என்ன நியாயம்.
நாங்கள் ஒன்றும் சன்னியாசி மடம் நடத்தவில்லை. தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் தகுதி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இந்த சுதந்திர நாளில் அதற்கான சூளுரை ஏற்போம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6-வது சம்பள கமிஷன் அமுல்படுத்திய மத்திய அரசை பாராட்டுகிறோம். அதை பின்பற்றி தமிழ்நாட்டிலும் சம்பள கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்திய தமிழக அரசுக்கும் பாராட்டு தெரிவிக்கின்றோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
குறிச்சொற்கள்: சன்னியாசி, தங்கபாலு, பதவி, பேட்டி, மடம், முதல்வர், ஆசை, காங்கிரஸ்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்