முஸ்லிம் வாக்கைப் பெற காங்கிரஸ் புதிய உத்தி | சற்றுமுன்...




முஸ்லிம் வாக்கைப் பெற காங்கிரஸ் புதிய உத்தி

முஸ்லிம் வாக்கைப் பெற காங்கிரஸ் புதிய உத்தி

புதுதில்லி, ஆக. 13: முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறும் முயற்சியாக காங்கிரஸ்

கட்சி உத்தரப்பிரதேசத்தில் புதிய உத்திகளை கடைப்பிடிக்கத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உரையை ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் புத்தகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளது.

அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தம் எந்தளவு முக்கியமானது, அவசியமானது என்று ராகுல்காந்தி கூறிய கருத்துகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெறும்.

மகாராஷ்டிரத்தில் வறுமையில் வாடும் கலாவதியின் கதையை வேதனையோடு ராகுல்காந்தி விவரித்ததும் இப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.

அணுசக்தி ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்கிற மாயாவதியின் பிரசாரத்தை முறியடிக்கும் நோக்கத்துடன் இந்தப் பிரசார புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

இதுபோன்று பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரின் உரைகளும் ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் புத்தக தொகுப்பாக வெளியிடப்பட உள்ளன.

முஸ்லிம்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரை இலக்காக கொண்டு இந்தப் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

மாயாவதிக்கு பதிலளிப்பதற்காக நாங்கள் இந்தப் புத்தகங்களைக் கொண்டு வரவில்லை.

மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்தவே இந்த புத்தகங்கள் வெளியிடுப்படுகின்றன என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
 
 

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்