மனிதநீதி பாசறை பேரணிக்கு அனுமதி இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு
மனிதநீதி பாசறை பேரணிக்கு அனுமதி இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆக. 13: மதுரையில் மனிதநீதி பாசறை அமைப்பினர் சுதந்திர தின பேரணி நடத்தக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
ஆனால், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது.
மனிதநீதி பாசறை மதுரை மாவட்டத் தலைவர் ஏ.காலித் மொகைதீன் தாக்கல் செய்த மனு:
முஸ்லிம் மக்களிடம் கல்வி அறிவை வளர்த்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, சச்சார் கமிட்டி அறிக்கையை அமல்படுத்துதல் போன்றவற்றுக்காக எங்கள் அமைப்பு பாடுபட்டு வருகிறது.
சாதி, மதம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டு எங்கள் அமைப்பு நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாட விரும்புகிறது.
இதற்காக பேரணிக்கும், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி கேட்டு மாநகர் காவல் ஆணையரிடம் 9.7.2008-ல் மனு அளித்தோம்.
பொதுக்கூட்டம் நடத்த ரூ.11,200 கட்டவேண்டும் என்று கூறிய அவர், எங்கள் அமைப்பு குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டார். அதை வழங்கினோம். அவற்றைப் பெற்ற ஆணையர், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டார்.
விடுதலைப் போராட்ட தியாகிகளை பொதுக்கூட்டத்தில் நாங்கள் கெüரவப்படுத்த உள்ளோம். எனவே, எங்கள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, மதுரை விறகுப்பேட்டையில் ஆக. 15-ல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்த ஆணையர் உத்தரவை ரத்து செய்தார். மேலும் மனுதாரர் பேரணி குறித்து வலியுறுத்தாததால் பேரணி நடத்தக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.
குறிச்சொற்கள்: பேரணி, மனிதநீதி பாசறை, அனுமதி, உத்தரவு, உயர் நீதிமன்றம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்