பதவிக்காக யாருடனும் கூட்டணி சேர தயாராகும் அதிமுக | சற்றுமுன்...




பதவிக்காக யாருடனும் கூட்டணி சேர தயாராகும் அதிமுக

இடதுசாரிகள், பாமக.வுடன் கூட்டு?: ஜெயலலிதா

 சென்னை, ஆக. 13: பாமக - இடதுசாரிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். அரசியலில் எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள் என்றார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

தனது கொடநாடு பயணத்தை முடித்த பின்னர் நான்கு மாத இடைவெளிக்குப் பின், கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தார் ஜெயலலிதா. அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ஒருவர் இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபட முடியும். நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கவில்லை. அரசியலைக் கூர்ந்து கவனித்து அறிக்கை வெளியிட்டேன். நான் எங்கும் போகவில்லை. தமிழகத்தில்தான் இருந்தேன். மக்கள் பிரச்னைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தவும் கட்சியினருக்கு உத்தரவிட்டேன். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து எனது அரசியல் எதிரிகளை மண்ணைக் கவ்வச் செய்தேன்.

எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும்… இந்திய அரசியலில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, பாமக மற்றும் இடதுசாரிகளுடனான கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். பொறுத்திருந்து பாருங்கள். போக போகத் தெரியும்.

தேசிய நலன் சார்ந்த பிரச்னைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். அது பாமகவோ, இடதுசாரிகளாகவோ இருக்கலாம். காங்கிரஸýம், இடதுசாரிகளும் இணைந்து செயல்பட முடியும் என்கிறபோது அரசியலில் எதுவும் சாத்தியமே. அதனால் அதிமுகவும் இடதுசாரிகளும் இணைந்து செயல்பட முடியும்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080813113556&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/14/2008&dName=No+Title&Dist=

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்