கமிஷன் தொகை ரத்து எதிரொலி டிராவல் ஏஜெண்டு அலுவலகமிஷன் தொகை ரத்து எதிரொலி டிராவல் ஏஜெண்டு அலுவலகங்கள் இன்று இயங்காது | சற்றுமுன்...




கமிஷன் தொகை ரத்து எதிரொலி டிராவல் ஏஜெண்டு அலுவலகமிஷன் தொகை ரத்து எதிரொலி டிராவல் ஏஜெண்டு அலுவலகங்கள் இன்று இயங்காது

கமிஷன் தொகை ரத்து எதிரொலி டிராவல் ஏஜெண்டு அலுவலகங்கள் இன்று இயங்காது
தென் மண்டல டிராவல் ஏஜெண்டுகள் சங்க தலைவர் அறிவிப்பு

கமிஷன் தொகை ரத்து எதிரொலியாக இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் மட்டும் இந்தியா முழுவதும் விமான டிராவல் ஏஜெண்டு அலுவலகங்கள் இயங்காது என்று தென் மண்டல டிராவல் ஏஜெண்டுகள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய டிராவல் ஏஜெண்டுகள் சங்க தென் மண்டல தலைவர் சி.கே.அசோக் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கமிஷன் தொகை குறைப்பு

இந்தியாவில் விமான போக்குவரத்து சேவையை வழங்கி வருகிற தனியார் மற்றும் அரசு விமான போக்குவரத்து நிறுவனங்கள் தனது மொத்த கட்டண வசூலில் 94 சதவீதம் வசூலை டிராவல் ஏஜெண்டுகள் மூலமாகவே பெறுகின்றன. இணைய தளம் மூலமாக பெறுகிற கட்டண வசூல் 6 சதவீதம் மட்டுமே. இந்திய விமான டிராவல் ஏஜெண்டுகளின் சேவைகளை நமது நாட்டு பயணிகள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு பயணிகளும் பாராட்டுகிறார்கள்.

விமான நிறுவனங்கள் ஆரம்ப காலத்தில் ஏஜெண்டுகளுக்கு 9 சதவீதம் கமிஷன் தொகை வழங்கி வந்தன. இந்த கமிஷன் தொகையை படிப்படியாக குறைத்து தற்போது மிக குறைந்த அளவான 5 சதவீதம் மட்டுமே விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த கமிஷன் தொகையையும் நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் நிறுத்தப்போவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கச்சா எண்ணை விலை உயர்வை காரணம் காட்டி கமிஷன் தொகையை ரத்துசெய்வதாக அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

இன்று அலுவலகங்கள் இயங்காது

இந்த முடிவால் இந்தியா முழுவதும் டிராவல் ஏஜெண்டு குடும்பங்களை சேர்ந்த 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு காலகட்டத்தில் விமான கட்டணம் அதிகமாகவும், வரித்தொகை குறைவாகவும் இருந்தன. இதனால் டிராவல் ஏஜெண்டுகளுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. ஆனால் தற்போது விமானம் கட்டணம் குறைவாகவும் வரித்தொகை அதிகமாகவும் வசூலிக்கப்படுகிறது.

இதனால் டிராவல் ஏஜெண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய விமான கட்டண கமிஷன் தொகை வருவாய் மிகவும் குறைந்து விட்டது. எனவே டிராவல் நிறுவனங்களுக்கு வழங்கிவந்த 5 சதவீத கமிஷன் தொகையை நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் நிறுத்திவைப்பதாக அறிவித்ததை நடைமுறை படுத்தக்கூடாது.

கமிஷன் தொகையை நிர்ணயம் செய்ய ஒரு குழு அமைக்கவேண்டும். விமான டிக்கெட்டுகளில் கமிஷன் தொகையையும் சேர்த்து கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை வற்புறுத்துவதற்காக மும்பையில் இன்று (வியாழக்கிழமை) டிராவல் ஏஜெண்டுகளுக்கும், விமான நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எனவே இன்று ஒருநாள் மட்டும் இந்தியா முழுவதும் உள்ள 3 ஆயிரம் டிராவல் ஏஜெண்டுகளும், 50 ஆயிரம் துணை டிராவல் ஏஜெண்டு அலுவலகங்களும் இயங்காது. இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 350 டிராவல் ஏஜெண்டு அலுவலகங்களும், 1,500 துணை ஏஜெண்டு அலுவலகங்களும் மூடப்பட்டு இருக்கும். பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இந்த போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு சி.கே.அசோக் கூறினார். பேட்டியின் போது இந்தியா டிராவல் ஏஜெண்டுகள் கூட்டமைப்பின் தலைவர் எ.பஷீர் அகமது, அயட்டா டிராவல் ஏஜெண்டுகள் சங்க தலைவர் டிகே.கோபகுமார் ஆகியார் உடன் இருந்தனர்.

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்