அம்பேத்கரின் கனவுகளை சிதைத்தவர் மாயாவதி: காங்கிரஸ் தாக்கு
அம்பேத்கரின் கனவுகளை சிதைத்தவர் மாயாவதி: காங்கிரஸ் தாக்கு
”ஐக்கிய தலித் சமாஜம்’ அமைக்க வேண்டும் என்கிற அம்பேத்கர், கான்ஷிராம் ஆகியோரின் கனவை மாயாவதி சிதைத்துவிட்டார் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் திக்விஜய் சிங் திங்கள்கிழமை கூறியது:
தலித் மக்களை ஒருங்கிணைத்து ஐக்கிய தலித் சமாஜம் அமைக்க வேண்டும் என்பதே அம்பேத்கர் மற்றும் கான்ஷிராம் ஆகியோரின் கனவாக இருந்தது. அவர்களது கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் மாயாவதி, தனது அரசியல் வாரிசின் பெயரை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அம்பேத்கர் மற்றும் கான்ஷிராம் ஆகியோர் கண்ட கனவுகளை மாயாவதி சிதைத்துவிட்டார்.
இது பகுஜன் சமாஜ் கட்சியின் உள்விவகாரம் என்றாலும், வாரிசு அறிவிப்பை மக்களாட்சியில் ஏற்றுக்கொள்ள முடியாது. தனது கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்காக தலித் சமூகத்தை பிரிக்கும் தவறான முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறார் மாயாவதி. தலைவர்களுக்கு சிலைகளை வைப்பதன் மூலம் மட்டுமே அவர்களது கனவுகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறமுடியாது என்றார் திக் விஜய் சிங்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
August 13th, 2008 at 5:37 am
வாரிசு அறிவிப்பை மக்களாட்சியில் ஏற்றுக்கொள்ள முடியாது.