போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க தலத் தணிக்கையை தீவிரப்படுத்த அமைச்சர் வலியுறுத்தல்
போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க தலத் தணிக்கையை தீவிரப்படுத்த அமைச்சர் வலியுறுத்தல்
திருச்சி, ஆக. 10: போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் தலத் தணிக்கை இதுவரை 72 சதமே முடிக்கப்பட்டுள்ளது. இப்பணியைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தலத் தணிக்கை மண்டல அலுவலர்களுக்கான கூட்டத்தில், அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகளை அடியோடு ஒழிக்கும் நோக்கில் முன்மாதிரியாக கோவை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும், சென்னை அண்ணாநகர், சேப்பாக்கம் மண்டலங்களிலும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி ஜூலை 1 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ரூ. 13.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சம் குடும்பங்களில் தலத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 2.53 லட்சம் குடும்பங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிச்சொற்கள்: தணிக்கை, போலி, குடும்ப அட்டை, அமைச்சர்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்