விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து செல்வபெருந்தகை எம்.எல்.ஏ விலகல்: மாயாவதி கட்சியில் சேர்கிறார்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து செல்வபெருந்தகை எம்.எல்.ஏ விலகல்: மாயாவதி கட்சியில் சேர்கிறார்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மங்களூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் செல்வபெருந்தகை.
2 ஆண்டுகளாக எம்.எல்.ஏ. பணியாற்றி வந்த அவருக்கும் கட்சியின் தலைவர் தொல். திருமாவள வனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. செல்வ பெருந்தகை தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்தார்.
கட்சியில் பதவி தராததால் தன்னை செல்வ பெருந்தகை கேவலமாக பேசிய தாக திருமாவளவன் ஒரு திருமண விழாவில் சாடினார். இதைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சியில் செல்வ பெருந்தகையும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற் பது இல்லை.
மோதல் முற்றியதை தொடர்ந்து செல்வபெருந்தகை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி மாயாவதி கட்சியில் சேர முடிவு செய்தார்.
இதற்காக 100 தொண்டர்ளுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து நேற்று உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவுக்கு சென்றார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை இன்று செல்வபெருந்தகை சந்தித்து பேசுகிறார். அப்போது ஆதரவாளர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைகிறார். அவருடன் நிலவன ஆதவன், கிஷோர் குமார், மதி, சாப் அலெக்சாண்டர் உள்பட பலர் முகாமிட்டு உள்ளனர்.
செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.வுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை பலப்படுத்த திராவிட கட்சியை சேர்ந்த ஒருவரை தலைவராக தேர்வு செய்ய மாயாவதி முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையில் பகுஜன் சமாஜ் கட்சி நடிகர் விஜய ராஜேந்திரரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியது.
மாநிலத்தலைவர் பதவி கொடுக்கும் பட்சத்தில் லட்சிய திராவிட முன் னேற்ற கழகத்தை பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற நிபந் தனையையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்: மாயாவது, விடுதலைச் சிறுத்தைகஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்