ராமதாஸ் படத்தைப் பார்த்தால் மட்டும் நேரம் வீணாகாதா? முதல்வர் கேள்வி | சற்றுமுன்...




ராமதாஸ் படத்தைப் பார்த்தால் மட்டும் நேரம் வீணாகாதா? முதல்வர் கேள்வி

ராமதாஸ் படத்தைப் பார்த்தால் மட்டும் நேரம் வீணாகாதா? முதல்வர் கேள்வி

சென்னை, ஆக.9: பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளர் தயாரித்த “இலக்கணம்’ என்ற திரைப்படத்தை பார்த்தது மட்டும் நேரத்தை வீணடித்ததாக ஆகாதா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

திரைப்படத்துறை தொடர்பான விழாக்களில் முதல்வர் அதிகமாகப் பங்கேற்கிறார் என்று ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கும் வகையில் சனிக்கிழமை முதல்வர் வெளியிட்ட அறிக்கை:

“திரைப்படத்துறை தவிர மற்ற விழாக்களிலும் கலந்து கொள்ளும் செய்திகள் தொடர்ந்து வருகின்றன.

மருத்துவர் ராமதாஸின் ஆதரவாளர் தயாரித்த “இலக்கணம்’ திரைப் படத்தில் சில காட்சிகளில் ராமதாஸ் நடித்துள்ளார். அப் படத்தைப் பார்க்க வருமாறு ராமதாஸýம், அப் படத்தின் தயாரிப்பாளரும் வலிந்து அழைத்தார்கள். அந்தப் படத்தை பார்த்தால் மட்டும் பரவாயில்லையா?

தி.மு.க.-பா.ம.க. உறவு இருந்தபோது, திமுக சார்பிலும், பா.ம.க. சார்பிலும், அரசு சார்பிலும் நடந்த விழாக்களில் நான் கலந்து கொண்டதால் நேரம் வீணடிக்கப்படாமல் இருந்ததைப் போலத்தான் இப்போதும் இருக்கிறது.

நான் ஏற்கெனவே எழுதி புத்தகங்களாக வெளியான கதைகளைத் திரைப்படமாக எடுக்க சிலர் அனுமதி கேட்கிறார்கள். கதைக்கான திரைக்கதை, பாடல்கள் போன்றவற்றை அவர்களே எழுதிக் கொள்கின்றனர். கதைக்கு மட்டும் உரிமை விலை தருகிறார்கள்.

கடந்த ஆட்சிக் காலத்தில் மண்ணின் மைந்தன், கண்ணம்மா திரைப்படங்களுக்கான உரிமையாகக் கிடைத்த ரூ.21 லட்சத்தை சுனாமி நிவாரணப் பணிக்காக அப்போது அளித்தேன்.

இப்போது வெளியாகியுள்ள “உளியின் ஓசை’ படத்துக்கு, தொடக்கம் முதல் இறுதி வரை நான் எழுதவில்லை. அந்தக் கதைக்குக் கிடைத்த ரூ.25 லட்சத்துக்கு வருமான வரி ரூ.7 லட்சம் செலுத்தினேன். மீதிப் பணத்தை திரைத் துறையில் நலிந்த கலைஞர்களுக்கு உதவுமாறு கூறி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணனிடம் கொடுத்தேன்.

என்னுடைய மற்ற கதைகளையும் திரைப்படங்களாகத் தயாரிக்க பலர் என்னிடம் கேட்கிறார்கள். அதற்குரிய விலையைப் பெற்றாலும், மற்றவர்களுக்கு உதவும் வகையில்தான் அதுவும் தரப்படுமே தவிர, என்னுடைய சொந்தப் பயன்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப் போவதில்லை’ என்று முதல்வர் கூறியுள்ளார்.

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “ராமதாஸ் படத்தைப் பார்த்தால் மட்டும் நேரம் வீணாகாதா? முதல்வர் கேள்வி”

  1. Lenin சொல்கிறார்:

    Ramdoss was trying to say that CM should not spend much time on cinema functions. CM can utilize this time to control his ministers not involving illegal activites.

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்