குவைத் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுமா? | சற்றுமுன்...




குவைத் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

குவைத் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

குவைத் நாட்டில் சமீபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அவர்கள் எண்ணிக்கையை குறைக்கலாமா என்று அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

தொழிலாளர்கள் போராட்டம்

குவைத் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சமீபத்தில் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபம் கொண்ட அந்த நாட்டு அரசு, வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கலாமா என்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறது.

வெளிநாட்டு தொழிலாளர்களில் வங்காளதேசத்தினரின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

850 வங்காளதேசத்தினர்

சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபட்டு உள்ள வங்காளதேசத்தை சேர்ந்த 850 தொழிலாளர்கள் அவர்களின் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதே போல வன்முறையில் ஈடுபட்டு உள்ள இன்னொரு நாட்டைச்சேர்ந்த தொழிலாளர்களும் திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்கள்.

வங்காளதேசத்தை சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்கு முன்பு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த நாட்டு தலைவர்கள் வற்புறுத்தலின்பேரில் தான் இந்த தடை நீக்கப்பட்டது.

குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்

அதோடு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கவும் திட்டமிட்டு உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் தேர்தல் நடத்தப்பட்டது.

சுத்திகரிப்பு வேலைக்கு குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ.6ஆயிரம் (40தினார்கள்)நிர்ணயிக்கலாம் என்ற அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஆன்லைன் தேர்தலில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

புதிய விசா

விசிட் விசா என்ற புதிய விசா முறையை அறிமுகப்படுத்துவது பற்றியும் குவைத் பரிசீலித்து வருகிறது. அரபு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்களுக்காக பிசினஸ் விசாவை அறிமுகப்படுத்தவும் அந்த நாடு பரிசீலித்து வருகிறது.

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்