தமிழக அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா டிஸ்மிஸ்
| கடத்தல் புகார்-கைத்தறி அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா நீக்கம் |

சென்னை: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியை மிரட்டி, கடத்தி, அவர்களது சொத்தைப் பறிக்க முயன்ற வழக்கில் சிக்கிய தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா இன்று டிஸ்மிஸ் செய்யபப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி - மலர்விழி தம்பதியினருக்குச் சொந்தமான சொத்துக்களைப் பறிக்கும் முயற்சியாக அவர்களையும், அவர்களது மகன் சிவபலானையும் அமைச்சர்ராஜாவின் ஆட்கள் கடத்தி வைத்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதில் பழனிச்சாமியும், மலர்விழியும் நேரில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். தங்களது மகன் சிவபாலன், இன்னும் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்க அமைச்சர் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் தன் மீதான புகார்கள் பொய்யானவை, அரசியல் உள்நோக்கம் கொண்டவை என செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜா விளக்கியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று திடீரென கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிவபாலன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தான் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை, நண்பர்களுடன் பெருந்துறை, ஈரோடு, திருப்பூர், கோவை என சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததாக கூறினார். ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
அதேசமயம், நேற்று மாநில மனித உரிமை ஆணையத்தை அணுகிய பழனிச்சாமியும், மலர்விழியும் அமைச்சர் ராஜா மீது புகார் கொடுத்தனர்.
இந்தச் சூழ்நிலையில் இன்று அமைச்சர் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார். முதல்வர் கருணாநிதி இதுதொடர்பாக ஆளுநருக்கு அளித்த பரிந்துரையை ஏற்ற ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, கைத்தறித்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து என்.கே.கே.பி. ராஜா நீக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் வழக்கில் மாட்டிய அமைச்சர் ராஜா அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
August 7th, 2008 at 7:34 pm
இது என்னய்யா அநியாயம்? ராஜா கழக கலாசாரத்தைதானே காப்பாற்றுகிறார்? ஜனநாயக நாட்டில் ஒரு கழகக் கண்மணி இதுகூடவா செய்யக்கூடாது?