நாஞ்சில் மனோகரனின் 8-ம் ஆண்டு நினைவு நாள் | சற்றுமுன்...




நாஞ்சில் மனோகரனின் 8-ம் ஆண்டு நினைவு நாள்

நாஞ்சில் மனோகரனின் 8-ம் ஆண்டு நினைவு நாள்
ஏழைகளுக்கு அன்னதானம், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது

நாஞ்சில் மனோகரனின் 8-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி, ஏழைகளுக்கு அன்னதானம், இலவச கண் சிகிச்சை முகாம் ஆகியவை நடத்தப்பட்டது.

மலர் வளையம் வைத்து அஞ்சலி

மறைந்த தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், அமைச்சருமான நாஞ்சில் மனோகரனின் 8-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை ஓட்டேரி இடுகாட்டில் உள்ள நாஞ்சில் மனோகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக, புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் உள்ள அவரது வீட்டில் இருந்து நினைவிடத்துக்கு அமைதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை தாங்கி வழிநடத்தி சென்றார். ஊர்வலத்தில் நடிகர் நெப்போலியன், முன்னாள் எம்.பி. ஆர்.சண்முகசுந்தரம், எஸ்.ஏ.எம்.உசேன், நாஞ்சில் மனோகரனின் வாழ்நாள் உதவியாளர் சின்னி கிருஷ்ணன், எழும்பூர் பகுதி தி.மு.க. செயலாளர் கோ.ஏகப்பன், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம். காமராஜ், 102-வது வட்ட செயலாளர் டி.சண்முகம் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.

கண் சிகிச்சை முகாம்

இதன்பின்னர் நாஞ்சில் குமரன் வீட்டில் ஏழைகளுக்கு சமபந்தி விருந்து நடைபெற்றது. இதை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கிவைத்தார். பின்னர் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமினை அமைச்சர் பரிதிஇளம்வழுதி தொடங்கிவைத்தார்.

முன்னதாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நாஞ்சில் மனோகரனின் மகன் கிருஷ்ணா, தி.மு.க. வடசென்னை மாவட்ட செயலாளர் எல்.பலராமன், பள்ளி கல்வித்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன், கதர்துறை அமைச்சரின் நேரடி உதவியாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்