சவூதி போர்க்கப்பல் இந்தியா வருகை | சற்றுமுன்...




சவூதி போர்க்கப்பல் இந்தியா வருகை

சவூதி போர்க்கப்பல் இந்தியா வருகை

இந்தியாவுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் வகையில் 2 போர்க்கப்பல்களை சவூதி அரசு இந்தியாவுக்கு அனுப்புகிறது. இத்தகவலை ரியாத்தில் உள்ள இந்திய தூதர் எம்ஓஎச் ஃபரூக் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை இந்தியா வரும் இந்த இரண்டு போர்க்கப்பல்களும் மும்பை துறைமுகத்தில் மூன்று நாள்கள் நிறுத்தப்படும். இதில் “அல்-டம்மம்’ போர்க்கப்பல் பிரான்சில் தயாரிக்கப்பட்டது, “அல்-யான்பு’ என்ற கப்பல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. இதில் அல்-பாஹத் ராணுவக் கல்லூரியைச் சேர்ந்த 76 மாணவர்களும் இந்தியா வர உள்ளனர். கப்பல் 3 நாள் இந்தியாவில் தங்கியிருக்கும்போது சவூதியுடனான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தப்படும்.

உலகிலேயே நான்காவது பெரிய கடற்படையாக இந்தியா விளங்குகிறது. 62 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இந்திய கடற்படையில் 155 கப்பல்கள் உள்ளன. இதில் விமானம் தாங்கி அதி நவீன போர்க்கப்பல்களும் அடங்கும்.
 
 

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்