ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம்: ரஷிய அதிபர் உறுதி | சற்றுமுன்...




ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம்: ரஷிய அதிபர் உறுதி

ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம்: ரஷிய அதிபர் உறுதி

மாஸ்கோ, ஜூலை 24: தனது தலைமையிலான அரசின் உள்நாட்டுக் கொள்கையில் ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என, ரஷிய அதிபர் டிமித்ரி மெத்வதேவ் உறுதி அளித்தார். அந்நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியின் போது மெத்வதேவ் இதைத் தெரிவித்தார். தவறு செய்பவர்கள் பணத்தால் தங்களை காப்பாற்றிக் கொள்ள முயலுகிறார்கள். சில நேரங்களில் அரசுத் துறைகளில் உயர் பதவிகள் பணத்தினால் விலை பேசப்படும் மோசமான நிலையும் உள்ளது. இதுதவிர்க்கப்பட வேண்டும். உயரதிகாரிகளை நியமிக்கும் முன் நம் மூளையைப் பயன்படுத்தி நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் மெத்வதேவ் குறிப்பிட்டார். ரஷியாவில் கொடுங்கோலாட்சி நடைபெறவில்லை; ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
 

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்