உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தாமல் வெளிநாட்டு சதி என்பதா? | சற்றுமுன்...




உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தாமல் வெளிநாட்டு சதி என்பதா?

உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தாமல் வெளிநாட்டு சதி என்பதா?

வேலூர், ஜூலை 27: உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தாமல், வெளிநாட்டு சதி என்று மட்டும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்று மத்திய அரசை குறை கூறினார் தமிழ்மாநில தேசிய லீக் தலைவர் ஷேக் தாவூத்.

வேலூரில் நிருபர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பெங்களூர், ஆமதாபாத் ஆகிய இடங்களில் குண்டு வெடித்ததற்கு சிமி மற்றும் இஸ்லாம் முகாஜிதீன் என்ற அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. எதற்கெடுத்தாலும் வெளிநாட்டுச் சதி என்று கூறும் மத்திய அரசு உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த தவறிவிட்டது.

இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றது ஜனநாயக படுகொலை. முன் எப்போதும் இல்லாத வகையில் குதிரை பேரம் நடந்துள்ளது.

வக்ஃபு வாரியத் தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்று முஸ்லிம்கள் கேள்வி எழுப்பும் அளவில் வக்ஃபு சொத்துக்கள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளன. தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு அவரை மாற்ற வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அரசியல் பிரமுகர்களை பழிவாங்க பயன்படுத்தப்படுவது கண்டிக்கத் தக்கது.

மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உடனே தீர்வு காண வேண்டும்.

தமிழகத்தில் அறிவித்ததை விட கூடுதலான நேரம் மின் துண்டிப்பு செய்வது கண்டிக்கத்தக்கது என்ரார்ல ஷேக் தாவூத்.
 
 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்