24 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக் “பார்’: பொதுமக்கள் முற்றுகை | சற்றுமுன்...




24 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக் “பார்’: பொதுமக்கள் முற்றுகை

24 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக் “பார்’: பொதுமக்கள் முற்றுகை

சென்னை, ஜூலை 26: சென்னை மேற்கு மாம்பலம் ஜெயராம் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் செயல்படும் மதுபான “பாரை’ பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

“”இங்கு டாஸ்மாக் கடையில் ஒரேயொரு பாருக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால், மூன்று மதுபான பார்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதுகுறித்து குமரன் நகர் காவல்நிலையத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று பொதுமக்கள் தெரிவித்தனர். டாஸ்மாக் கடைக்கு அருகில் நர்சரி பள்ளியும் கோயிலும் உள்ளன. மேலும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் நடமாடவே அஞ்சுவதாக தெரிவித்தனர்.

சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதலே இங்குள்ள “பாரி’ல் விற்பனை தொடங்கியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு கூடியுள்ளனர்.

தகவல் அறிந்ததும் 134-வது வார்டு பா.ம.க. கவுன்சிலர் சத்தியமூர்த்தி அங்கு வந்தார். இதைத் தொடர்ந்து பாரிலிருந்து மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டவிரோதமாக நடத்தப்படும் கூடுதல் “பார்’களை மூடவேண்டும் என்று கோரி மதுபான பாட்டில்களுடன் குமரன் நகர் காவல்நிலையத்தில் சத்தியமூர்த்தி மற்றும் பொதுமக்கள் புகார் செய்தனர்.

மதுபானத்தை விற்றதாகக் கூறப்படும் இருவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து குமரன் நகர் போலீஸôர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான “பாரி’ல் சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீஸôர் விசாரணை நடத்தியது குறித்து சத்தியமூர்த்தி கூறும்போது, “மதுபான “பார்’ உரிமையாளர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. சட்டவிரோதமாக நடத்தப்படும் பார்களுக்கு சீல் வைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
 
 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “24 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக் “பார்’: பொதுமக்கள் முற்றுகை”

  1. Tamilish.com சொல்கிறார்:

    24 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக் “பார்’: பொதுமக்கள் முற்றுகை…

    24 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக் “பார்’: பொதுமக்கள் முற்றுகை

    சென்னை, ஜூலை 26: சென்னை மேற்கு மாம்ப…

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்