பெங்களூரைத் தொடந்து அஹமதாபாத்தில் குண்டுவெடிப்பு
அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு; இருவர் பலி
அகமதாபாத், ஜூலை 26} குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில், 2 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
மாலை 6.45 மணியளவில், இந்த குண்டுகள் 15 நிமிட இடைவெளியில் வெடித்தன.
மணி நகர், பாபு நகர், டைமன்ட் மார்க்கெட், சகரன்புர், ராய்பூர், ஜவஹர் நகர், ஹட்கேஸ்வர் ஆகிய பகுதிகள் உட்பட மொத்தம் 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த இடங்கள் அனைத்தும் பழைய அகமதாபாத் நகரில் அமைந்துள்ளன.
இந்த குண்டுகள் டிபன் பாக்ஸþக்குள் பொருத்தப்பட்டு சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்தன. பேருந்து ஒன்றிலும் ஒரு குண்டு வெடித்தது.
இவை குறைந்த சக்தியுள்ள குண்டுகள் என முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.
சம்பவ இடங்களுக்கு போலீசார் விரைந்துள்ளனர். காயமடைந்தோர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குண்டு வெடித்த இடங்களில் ஒன்றான மணி நகர், முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதி ஆகும்.
நேற்று பெங்களூரில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், இன்று அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்துள்ளன.
http://www.ibnlive.com/news/six-lowintesity-blasts-rock-
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்