தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிய கலெக்டர்
தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிய கலெக்டர்
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக் கவசம் (ஹெல்மட்) அவசியம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் எஸ்.ஜே.சிரு போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டினார்கள்.
தலைக்கவசம் அணிந்த கலெக்டர்
தேனி போக்குவரத்து போலீஸ் பிரிவு சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்கு நேற்று நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு ஊர்வலம் தேனி பங்களா மேட்டில் தொடங்கியது. தேனி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் தேனி மாவட்ட கலெக்டர் எஸ்.ஜே.சிரு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், ஊர்க்காவல்படை தளபதி என்.ஏ.அஜய்கார்த்திக் ராஜா ஆகியோர் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டினார்கள். அவர்களைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பங்களா மேட்டில் புறப்பட்ட ஊர்வலம் மதுரை சாலை, நேருசிலை, பெரிய குளம் சாலை வழியாக அம்பி வெங்கிடசாமிநாயுடு மண்டபம் வந்தடைந்தது.
கருத்தரங்கு
அங்கு போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜன், தேனி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன், ஆய்வாளர் பிரபா கரன், ஊர்க்காவல் படை பிரிவு தளபதி பிச்சை, துணை தளபதி முத்து கிருஷ்ணன், தேனி தாசில்தார் வடிவேல், தேனி கிராம நிர்வாக அலுவலர் வனகாமு, அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பாண்டியன் ஆகியோர் பேசினார்கள்.
உயிரிழப்பு
கூட்டத்தில் கலெக்டர் எஸ்.ஜே.சிரு பேசும் போது,” இரண்டு சக்கர வாகனங்கள் மூலம் தான் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. விபத்தில் தலையில் காயம் ஏற்படுவதால் தான் உயிர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் தான் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் ஓட்டுவது, வாக னம் ஓட்டிக் கொண்டிருக்கும் போது செல்போனில் பேசுவது போன்ற வைகள் அவசியம் தவிர்க்க வேண்டும். விபத்துக்களே நடக்காமல் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பேசும் போது, “விபத்து மரணம் என்பது கோரமானது. விபத்து நம்மால் ஏற்படுவது. நாள் ஒரு முறை செல்போனில் பேசிக்கொண்டே மோட்டார் சைக்கிளை ஓட்டினேன். விபத்து ஏற்பட்டது. நான் ஹெல்மெட் அணிந்திருந்ததால் காயமின்றி தப்பினேன். ஒரு விபத்தினால் ஒரு குடும்பம் பாதிக்கப்பட வேண்டுமா? என நினைத்தால் போதும் மற்றவர்களுக்கு நாம் எமனாக இருக்க கூடாது ” என்றார்.
முடிவில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் செய்து இருந்தார்.
குறிச்சொற்கள்: சைக்கிள், தலைக்கவசம், மோட்டார், கலெக்டர்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்