கல்பாக்கம் அணுமின் நிலையம் 25 ஆண்டுகளை நிறைவு செய்தது | சற்றுமுன்...




கல்பாக்கம் அணுமின் நிலையம் 25 ஆண்டுகளை நிறைவு செய்தது

கல்பாக்கம் அணுமின் நிலையம் 25 ஆண்டுகளை நிறைவு செய்தது

கல்பாக்கம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்தது.

அணுமின் நிலையம்

சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் முதல் ïனிட், கடந்த 1983-ம் ஆண்டு ஜுலை 23-ந் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 220 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் கன நீர் உலை, தென்னக மின் தொகுப்புக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியது. முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உலை என்ற பெருமையும் இதற்கு உண்டு. நேற்றுடன் இந்த அணுமின் நிலையம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்தது.

ரூ.1,125 கோடி லாபம்

முதல் ïனிட் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு பிறகு, 220 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் இரண்டாவது ïனிட் தொடங்கப்பட்டது. இதுவும் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உலையை கொண்டது ஆகும். இரண்டு ïனிட்டுகளும் மொத்தம் ரூ.245 கோடியே 87 லட்சம் ஆரம்பகட்ட செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.

இரண்டு ïனிட்டுகள் மூலம், தற்போது கல்பாக்கத்தில் இருந்து 440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தமிழ்நாட்டின் பங்காக 330 மெகா வாட் அளிக்கப்படுகிறது. ஒரு ïனிட் மின்சாரம் ஒரு ரூபாய் 89 பைசா என்ற விலையில் வினியோகிக்கப்படுகிறது. இதுவரை, கல்பாக்கம் அணுமின் நிலையம் 45 ஆயிரம் மில்லியன் ïனிட்டுக்கு மேல் மின்சாரத்தை வினியோகித்துள்ளது. இதுவரை ரூ.1,125 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

புனரமைப்பு பணி

சமீபத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இரண்டு ïனிட்டுகளிலும் பெரிய அளவில் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் நடைபெற்றன. பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளால், அணுமின் நிலையம் இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகள் பணியை தொடரும் அளவுக்கு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தை பின்பற்றியே, உத்தரபிரதேசத்தில் நரோராவிலும், கர்நாடகாவில் கைகாவிலும், குஜராத்தில் காக்ரபாரிலும், ராஜஸ்தானில் கோடாவிலும் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில், மேலும் 8 அணுமின் நிலையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்