மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம்; சிபுசோரனுக்கு நிலக்கரி- முலாயம்சிங்குக்கு ராணுவம் | சற்றுமுன்...




மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம்; சிபுசோரனுக்கு நிலக்கரி- முலாயம்சிங்குக்கு ராணுவம்

மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம்; சிபுசோரனுக்கு நிலக்கரி- முலாயம்சிங்குக்கு ராணுவம்

பாராளுமன்றத்தில் மத்திய அரசு நம் பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் நாடு முழு வதும் நீடித்த அரசி யல் பரபரப்பு அடங்கியது.

இதையடுத்து மத்திய மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட உள்ளது.

கம்ïனிஸ்டு கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கு முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், சிபுசோரனின் ஜார் கண்ட் முக்தி மோர்ச்சாவும் ஆதரவு அளித்தன. மத்திய அரசு வெற்றி பெற்றதில் இந்த இரு கட்சிகளுக்கும் பெரும் பங்கு உள்ளது.

அந்த கட்சிகளுக்கு மத்திய மந்திரி சபையில் இடம் அளிக்கப்படுகிறது. மத்திய அரசை ஆதரிப்பதற்காக சிபுசோரனுக்கு மீண்டும் மந்திரி பதவி அளிக்கப் படும் என்று உறுதி அளிக் கப்பட்டதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

எனவே அவருக்கு மீண்டும் நிலக்கரித்துறை தரப்படும் என்று ஆளும் கூட்டணி தரப் பில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அவரது கட் சியை சேர்ந்த மேலும் ஒரு எம்.பி.யும் மந்திரியாக நிய மிக்கப்படுகிறார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் மத்திய அரசை ஆதரிக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருந்தார். என்ன நிபந் தனை என்பதை அவர் வெளிப்படையாக தெரி விக்க வில்லை.

முலாயம்சிங் தனக்கு ராணுவ துறையும், தனது கட்சி எம்.பி. ஒருவருக்கு தகவல் தொடர்பு துறையும் கேட்டார் என்று கூறப்படுகிறது. அவர் ராணுவ மந்திரியாக நியமிக் கப்படுகிறார்.

மேலும் பெட்ரோலிய துறை மந்திரி முரளி தியோரா உள்பட சில மந்திரி களை நீக்க வேண்டும் என்றும் சமாஜ்வாடி கட்சி கோரியிருப்பதாக கூறப் படுகிறது.

இது தவிர தற்போது மந்திரியாக உள்ள சிலரது இலாகாக்களில் சிறிய அளவில் மாற்றங்கள் இருக்கும். காங்கிரஸ் கூட்டணியில் புதிதாக சேர்ந்துள்ள கட்சி கள் தவிர நம்பிக்கை வாக் கெடுப்பில் ஆதரவு அளித்த சிறிய கட்சிகளின் பிரதிநிதி களுக்கும் மந்திரி பதவி கிடைக்கலாம்.

ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் மந்திரி சபையில் கூடுதல் பிரதி நிதித்துவம் அளிக்கப்பட லாம் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய மந்திரி சபை மாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனும் கூட்டணி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். விரைவில் மந்திரி சபை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிச்சொற்கள்: , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்