புதுவை ஆளுநராக குர்ஜார் பதவியேற்றார் | சற்றுமுன்...




புதுவை ஆளுநராக குர்ஜார் பதவியேற்றார்

புதுவை ஆளுநராக குர்ஜார் பதவியேற்றார்

புதுச்சேரி: புதுவையின் புதிய துணைநிலை ஆளுநராக கோவிந்த் சிங் குர்ஜார் புதன்கிழமை பதவியேற்றார். ராஜஸ்தான் முன்னாள் அமைச்சரான குர்ஜார் ஆறு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான விழாவில் குர்ஜாருக்கு புதுவை தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி, அவரது அமைச்சரவை சகாக்கள், சட்டப்பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
76 வயதான குர்ஜார் புதுவை யூனியன் பிரதேசத்தின் 19}வது ஆளுநராவார். பதவியேற்ற பின் புதுவை போலீசாரால் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
 
 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்