நாளை நம்பிக்கை தீர்மானம்: மத்திய அரசுக்கு சிபுசோரன் ஆதரவு-அஜித்சிங் எதிர்த்து ஓட்டு
நாளை நம்பிக்கை தீர்மானம்: மத்திய அரசுக்கு சிபுசோரன் ஆதரவு-அஜித்சிங் எதிர்த்து ஓட்டு
இடது சாரி கட்சி கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் மன்மோகன்சிங் அரசு மெஜாரிட் டியை இழந்து விட்டது.
மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க பாராளுமன்றத்தின் விசேஷ கூட்டம் நாளை கூடுகிறது.
பகல் 11 மணிக்கு முதல் நிகழ்ச்சியாக இடைத்தேர் தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்.
அதன் பிறகு மரணம் அடைந்த முன் னாள் எம்.பி.க்கள் ஜி.எம். பனாத்வாலா உள்ளிட்ட 5 பேருக்கு இரங்கல் தெரி விக்கப்படுகிறது. அதை தொடர்ந்து பல்வேறு தக வல் அறிக்கைகள் பாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப் படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் முடிந் ததும் பிரதமர் மன்மோகன் சிங் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் ஒரு வரி தீர்மானத்தை சபையில் தாக் கல் செய்கிறார்.
உடனே இதன்மீது விவாதம் தொடங்கும் பாராளுமன் றத்தில் காங்கிரஸ் தவிர மொத்தம்
36 கட்சிகள் உள்ளன. அனைத்து கட்சி தலைவர் களும் தீர்மானத்தின் மீது பேசுவார்கள்.
நாளை மறுநாள் 2-வது நாள் விவாதம் நடை பெறும். அப்போது பெரிய கட்சிகளின்
தலைவர்கள் பேசுவார்கள். கடைசியாக எதிர்க்கட்சி தலைவர் அத்வானி பேசுவார்.
விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மன் மோகன்சிங் பேசுவார். பின்னர் நம்பிக்கை தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடைபெறும். அப்போது அரசு தப்புமா? இல்லையா என்பது தெரிய வரும். ஆட்சியை காப்பாற்ற மத்திய அரசுக்கு 271 எம்.பி.க்கள் தேவை. தற்போதைய நில வரப்படி 261 எம்.பி.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இன்னும் 10 எம்.பி.க்கள் தேவைப்படுகிறார்கள். இதை பெற காங்கிரஸ் போராடுகிறது.
காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த சமாஜ்வாடி கட்சியில் மொத்தம் 39 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 4 பேர் மாயாவதி யோடு கைகோர்த்துள்ளனர். அவர்கள் அரசுக்கு எதி ராக ஓட்டுப் போடுவதாக அறிவித்து விட்டனர்.
இந்த கட்சியில் இருந்து இன்னும் சிலரும் கூட மாயாவதி பக்கம் சாய்வார் கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற் படுத்தி இருக்கிறது.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய லோக்தளம் ஆகிய கட்சி களில் மொத்தம் 11 எம்.பி.க் கள் உள்ளனர். இவர்கள் ஒட்டு மொத்த ஆதரவும் கிடைத்து விட்டால் மெஜா ரிட்டியை நிரூபித்து விடலாம் என்று காங்கிரஸ் கருதியது. இதற்கான முயற்சியில் ஈடுபட்டது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் 5 எம்.பி.க்கள் உள்ளனர். இதன் தலைவர் சிபுசோரனுடன், காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்தியது. சிபுசோரன் நேற்று இரவு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். இன்று காலை சோனியாவை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போடுவதாக அறிவித்தார். அஜீத்சிங் தலைமையி லான ராஷ்டீரிய லோக் தளத்தில் 3 எம்.பி.க்கள் உள்ளனர். அவர் இன்று திடீர் என்று உத்திரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியை சந்தித்து பேசினார்.
பின்னர் மத்திய அரசுக்கு எதிராக ஓட்டு போடுவோம் என்று அவர் அறிவித்தார். இது மத்திய அரசுக்கு புதிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தேவேகவுடா கட்சியில் 3 எம்.பி.க்கள் உள்ளனர். அவருடன் காங்கிரஸ் பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியது. ஆனாலும்,
அவர் காங்கிரசின் பக்கம் சாய வில்லை. அவர் மத்திய அர சுக்கு எதிராக ஓட்டு போடப்
போட திட்டமிட்டு இருப்ப தாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரே எம்.பி.யை கொண்ட மஜிலீஸ் இதே துல் முஸ்லி மன் கட்சி காங்கிரசுக்கு ஆதர வாக ஓட்டு போடுவதாக அறிவித்து உள்ளது. எதிர் அணியில் உள்ள அகாலி தளம் மற்றும் சிவ சேனா கட்சியில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்கலாம், அல் லது ஓட்டெடுப்பை புறக் கணிக்கலாம். என்று காங்கி ரஸ் நம்புகிறது. அது மத்திய அரசுக்கு சாதகமாக அமையும் என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதற்கான சாத்தி யம் குறைவாகவே
உள்ளது.
மேலும் ஆதாயத்துக்காக அலையும் சுயேட்சைகளின் ஆதரவு மூலம் மத்திய அரசை காப்பாற்றலாம் என்றும் காங்கிரஸ் நம்பு கிறது. இன்று இரவு பிரதமர் மன்மோகன்சிங் காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சி எம்.பி.க்களுக்கு விருந்து அளிக்கிறார். அப்போது அதில் பங்கேற்கும் எம்.பி.க் களை வைத்தே காங்கிரஸ் பலம் என்ன என்பது தெரிந்து விடும்.
அதே நேரத்தில் மாயா வதி, மற்றும் கம்ïனிஸ்டு தலைவர்கள் காங்கிரஸ் தோழமை கட்சிகளுக்குள் மூக்கை நுழைத்து அங்கிருக் கும் அதிருப்தி எம்.பி.க்களை வெளியே இழுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடு பட்டு வருகின்றனர். இது காங்கிரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
என்ன விலை கொடுத்தா வது ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் முயற்சிக்கிறது. அது வெற்றி பெறுமா? என்பது இன்று இரவுக்குள்தெரிந்து விடும்.
குறிச்சொற்கள்: சிபுசோரன், எதிர்த்து, தீர்மானம், நம்பிக்கை, மத்திய அரசு, ஓட்டு, ஆதரவு, அஜித்சிங்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்