யார் சர்டிபிகேட்டும் தேவையில்லை-சோனியா | சற்றுமுன்...




யார் சர்டிபிகேட்டும் தேவையில்லை-சோனியா

யார் சர்டிபிகேட்டும் தேவையில்லை-சோனியா
    

 

Sonia Gandhi

நெல்லூர்: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எந்தக் கட்சியும் எங்களுக்கு நற்சான்றிதழ் தர தேவையில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில், ராஜீவ் காந்தி ஆரோக்கிய ஸ்ரீ -2 சுகாதாரத் திட்டத்தை இன்று  சோனியா காந்தி தொடங்கி வைத்தார். ஆந்திர மாநில அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் 6.5 கோடி பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

இத் திட்டத்தை நெல்லூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைத்த சோனியா காந்தி, நிகழ்ச்சியில் பேசுகையில், அணு சக்தி பிரச்சினையாக இருந்தாலும் சரி, வெளியுறவுக் கொள்கையாக இருந்தாலும் சரி, நாட்டின் நலனை காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சமரசம் செய்து கொள்ளவும் மாட்டார்கள்.

தேசிய நலனை நாங்கள் சமரசம் செய்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது காங்கிரஸ். அதன் தலைவர்களான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள்.

அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த காங்கிரஸ் கட்சி நாட்டை பலவீனமாக்க ஒருபோதும் சம்மதிக்காது.

இந்த விஷயத்தில் எந்தக் கட்சியும் எங்களுக்கு நற்சான்றிதழ் தரத் தேவையில்லை என்றார் சோனியா காந்தி.

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்