கேரளாவில் 400 பாகிஸ்தானியர்கள்: முதல்வர் தகவல் | சற்றுமுன்...




கேரளாவில் 400 பாகிஸ்தானியர்கள்: முதல்வர் தகவல்

கேரளாவில் 400 பாகிஸ்தானியர்கள்: முதல்வர் தகவல்

பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற 400 பேர் கேரளாவில் இருப்பதாகவும், இந்தியக் குடியுரிமை பெற அவர்கள் முயற்சித்து வருவதாகவும் கேரள முதல்வர் அச்சுதானந்தன் புதன்கிழமை கூறினார்.
இந்திய குடியுரிமை மற்றும் இந்தியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி பெறுவதற்கான அவர்களின் விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு மாநில அரசின் பரிந்துரையுடன் அனுப்பப்பட்டுள்ளதாக அச்சுதானந்தன் சட்டப்பேரவையில் இவ்விவகாரம் தொடர்பாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளார்.

அவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்கவேண்டும் என அச்சுதானந்தன் கூறினார்.

சட்ட விதிப்படி. அவர்கள் போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். அவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள். அவர்களின் சிரமங்களைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அச்சுதானந்தன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சசிக்குமார் கூறுகையில், மலையாளியை பிறப்பிடமாகக் கொண்ட பாகிஸ்தானியர்களும் அக்குழுவில் உள்ளனர் என்றார். அவர்கள் சுதந்திரத்துக்குப் பின்னர் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு வேலை செய்வதற்காக சென்றனர். அவர்கள் அனைவரும் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். தற்போது குடும்பத்துடன் இருப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து திரும்பி வந்து இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர் என சசிக்குமார் கூறினார்.

குறிச்சொற்கள்: ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்