நன்கொடை கொடுப்பதும் லஞ்சம்தான்: எம்எல்ஏ அய்யப்பன் பேச்சு
நன்கொடை கொடுப்பதும் லஞ்சம்தான்: எம்எல்ஏ அய்யப்பன் பேச்சு
குறைந்த மதிப்பெண் பெற்ற பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளுக்கு நன்கொடை அளிப்பதும் லஞ்சம்தான் என்று, எம்எல்ஏ கோ.அய்யப்பன் கூறினார்.
கடலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா கடலூரில் சனிக்கிழமை நடந்தது.
நுகர்வோர் உரிமைகள் குறித்த பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, அய்யப்பன் எம்எல்ஏ பேசியது:
ஏமாறாதே ஏமாற்றாதே என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். வருமானத்துக்காக அல்ல, டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும், பலர் செத்துமடியக் காரணமாகிவிடும் என்று கடைகளை நடத்துவதாக முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்தார்.
வர்த்தக நிறுவனங்களில் எடைக் கற்கள், அளவைகள் சரியாக இருக்கிறதா என்று அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் கடலூர் மஞ்சக்குப்பம் மருந்துக் கடை ஒன்றில் மருந்து வாங்கினேன். அது காலாவதியானது என்று கண்டறிந்து புகார் செய்தேன்.
ஆனால் அதிகாரிகள் தண்டனை கொடுக்க மறுத்து விட்டார்கள். தவறு நடக்கும் இடங்களில் யார் யாரோ இருக்கிறார்கள் என்று பார்த்து பயப்படத் தேவையில்லை.
தைரியமாகப் புகார் செய்ய வேண்டும். தவறு செய்யும் நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றார் அய்யப்பன்.
விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் ஆறுமுகம் வரவேற்றார். கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, துணைத் தலைவர் தாமரைச்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வீராசாமி, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை நிர்வாகச் செயலர் எம்.நிஜாமுதீன், பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ், மருத்துவத்துறை இணை இயக்குநர் ஞானம் ஆகியோர் பேசினர்.
நுகர்வோர் அமைப்புகளின் சார்பில் செந்தமிழ்ச் செல்வன், தெய்வகுரு, தங்கம், பாலசுப்பிரமணியன், சி.டி.அப்பாவு, அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்