தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கத் தயங்க மாட்டோம்: மார்க்சிஸ்ட்
தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கத் தயங்க மாட்டோம்: மார்க்சிஸ்ட்
தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதில் தயக்கம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இப்போது செய்ததுபோல் மீண்டும் துரோகம் செய்யமாட்டோம் என்று உறுதியளிக்கும் பட்சத்தில் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளோம் என்று மார்கிசிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
தற்போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் சற்று உறுத்திக்கொண்டிருந்தாலும் கொள்கை மற்றும் அரசியல் சூழ்நிலையைப் பொருத்து காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம் என்றார் அவர்.
அரசுக்கு ஆதரவு விலக்கிக்கொண்டது ஏன் என்பது குறித்து இடதுசாரிக் கட்சிகள் பொது மக்களிடம் பிரசாரம் செய்யும் என்றார் யெச்சூரி.
குறிச்சொற்கள்: ஆதரவு, கம்யூனிஸ்ட், அரசுஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்