காங்கிரஸில் புதிதாக 11 செய்தித்தொடர்பாளர்கள்: கட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்ல புதிய உத்தி
காங்கிரஸில் புதிதாக 11 செய்தித்தொடர்பாளர்கள்: கட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்ல புதிய உத்தி
கட்சியின் செயல் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்ல தமிழகத்தைச் சேர்ந்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன் உள்பட புதிதாக 11 பேர் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய -அமெரிக்க ஒப்பந்தம் மற்றும் இதர விவகாரங்களை நாட்டு மக்களிடம் கொண்டுசெல்வதற்கும், மக்களவைக்குத் தேர்தல் வர உள்ளதை கருத்தில் கொண்டும் இந்த திடீர் நடவடிக்கையை காங்கிரஸ் மேலிடம் சனிக்கிழமை செய்துள்ளது.
புதிய செய்தித்தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் விவரம்: மத்திய அமைச்சர்கள் பிரித்விராஜ் சவாண், பி.ஆர்.தாஸ்முன்ஷி, ஆனந்த் சர்மா, ரேணுகா செüத்ரி, செல்ஜா குமாரி, ஜிதின் பிரசாத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், கேசவ் ராவ், சல்மான் குர்ஷீத், பவன் குமார் பன்சால் மற்றும் பி.எஸ்.ஞானதேசிகன்.
அணு ஒப்பந்தம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம்: அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு மிகவும் இன்றியமைதாதது என நாடு முழுவதும் மக்களிடம் எடுத்துக்கூற கட்சித் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலர் எம்.வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச்செயலர்கள் பங்கேற்ற அவசரக் கூட்டமும் அதன்பிறகு விளம்பரக் கமிட்டிக் கூட்டமும் வீரப்ப மொய்லி தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:
அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துச்செல்ல காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் முக்கியத்துவம், எரிசக்தி பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடம் விளக்க கூட்டங்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படும்.
நாட்டின் நலனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட உள்ளது.
சில சர்வதேச சஞ்சிகைகளில் அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து விவரமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஊடகங்கள் மூலம் பிரசாரம்: அணுசக்தி ஒப்பந்தத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாட்டு மக்களிடம் எடுத்துச்செல்ல ஊடகங்கள் மூலம் மத்திய அரசு பிரசாரம் மேற்கொண்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரது படங்களுடன் ஒப்பந்தம் குறித்து சில முக்கிய நாளிதழ்களில் முழுப் பக்கம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் மற்றும் பெட்ரோலியம் அமைச்சகம் சார்பாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்