விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உடைகிறது
| விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உடைகிறது | ![]() |
![]() |
|
கட்சியின் நிர்வாகத்தை கலைத்து விட்டு புதிய நிர்வாகி கள் நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே கட்சி பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்த செல்வப் பெருந்தகை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு இளைஞர் பாசறை மாநில செயலாளர் பொறுப்பில் புதிதாக நியமிக்கப்பட்டார். இது செல்வப் பெருந் தகை எம்.எல்.ஏ.வுக்கு அதிருப்தியை அளித்தது. இதைத்தொடர்ந்து அந்த பொறுப்பில் இருந்தும் அவர் திடீரென நீக்கப்பட்டார்.இதற்கிடையில் செல்வப் பெருந்தகை விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து விலகி வேறு ஒரு கட்சியில் இணைய போவதாக பேச்சு அடிபட்டது. தனது ஆதரவா ளர்கள் கட்சியில் ஒரங்கட்டப் படுவதாக அவர் ஆதங்கம் அடைந்தார். இந்த நிலையில் மதுராந் தகத்தில் நடந்த திருமண விழாவில் திருமாவளவன் கலந்து பேசினார். அப்போது அவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ.வை தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:-
சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்ய பொறுப்பு கேட்டு சண்டை போடுகின்றனர். பொறுப்பு கிடைக்காத தோழர்கள் கட்சியை சீர் குலைக்க முயற்சிக்கின்றனர். இதுபோன்ற தற்குறிகளால் தான் தலித் இயக்கங்கள் வளர்ச்சி அடைவது இல்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நான் நிற்பதாக இருந்ததால் தான் மங்களூர் தொகுதியை ஒதுக்கினர். வற்புறுத்தி கேட்டு செல்வம் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
இப்போது கட்சியில் பதவி கிடைக்கவில்லை என்றதும் என்னை தகாத வார்த்தை களால் திட்டுகிறார். கட்சியில் பதவி வகித்துக்கொண்டு கட்ட பஞ்சாயத்து நடத்தி கோடிக்கணக்கில் கமிஷன் பெற்றது எனக்கு தெரியாதா?
ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கூடதங்கள் பெயரையும், குழந்தைகள் பெயரையும் தமிழில் மாற்றி வைத்துள்ளனர். ஆனால் இவர் குழந்தை களின் பெயரை இதுவரை தமிழில் வைக்கவில்லை.
இவ்வாறு திருமாவளவன் பேசினார். |
http://www.adhikaalai.com/index.php?/en/?????????/???????/?????????-???????????-?????-????????
குறிச்சொற்கள்: பிளவு, விடுதலைச் சிறுத்தைக, கட்சிஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்