மேற்குக்கரையில் இஸ்ரேல் தடுப்புச்சுவர்– ஐநா கவலை | சற்றுமுன்...




மேற்குக்கரையில் இஸ்ரேல் தடுப்புச்சுவர்– ஐநா கவலை

மேற்குக்கரையில் இஸ்ரேல் தடுப்புச்சுவர்– ஐநா கவலை

மேற்குக்கரையில் இஸ்ரேல் கட்டிக்கொண்டிருக்கும் தடுப்புச்சுவர் இப்போது அது உத்தேசிக்கப்பட்டிருக்கும் வழியாக நிறைவேற்றப்படுமானால் அது பாலத்தீனர்களுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐ.நா மன்றம் கூறியுள்ளது.

மேற்குக்கரையில் கட்டப்படும் தடுப்புச்சுவர்
மேற்குக்கரையில் கட்டப்படும் தடுப்புச்சுவர்

இஸ்ரேலிய எல்லை நெடுக கட்டாமல், மேற்குக்கரைப் பகுதிக்குள்ளாக இந்த சுவரைக் கட்டுவதால், ஏற்கனவே, பல்லாயிரக்கணக்கான பாலத்தீனர்கள் தங்களது வேலையிடங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பிற அத்தியாவசிய சேவையிடங்களுக்கும் செல்லமுடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மன்றம் ஒரு புதிய அறிக்கையில் கூறியது.

ஏறக்குறைய 60 விழுக்காட்டளவு சுவர் இப்போது கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டுமான வேலைகள் தொடர்ந்தால், மேலும் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஐ.நா அறிக்கை கூறியது.

இந்த தடுப்புச்சுவர் பாலத்தீன வன்முறையாளர்களை தடுக்கத் தேவைப்படுவதாக இஸ்ரேல் கூறியது

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்